Category: முஸ்லிம்

Muslim-2026

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2026. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.

இதை அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 13


«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ، فِي رَمَضَانَ، وَهُوَ صَائِمٌ»


Muslim-2025

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2025. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு மாதத்தில் (நோன்பு நோற்றிருந்த நிலையில் தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.

இதை அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 13


«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ فِي شَهْرِ الصَّوْمِ»


Muslim-2024

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2024. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் என்னை முத்தமிடுவார்கள்.

இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 13


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ»

– وحَدَّثَنَا يَحْيَى بْنُ بِشْرٍ الْحَرِيرِيُّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ سَلَّامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ


Muslim-2023

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2023. அஸ்வத் பின் யஸீத் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் துணைவியரைக்) கட்டியணைப்பார்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், “அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப்படுத்திக்கொள்பவர்களாக இருந்தார்கள்””. அல்லது “அவர்கள் உங்களில் தம் உணர்ச்சிகளை அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களில் ஒருவராக இருந்தார்கள்” ” என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “நாங்கள் இருவரும் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (நோன்பு நோற்றுக் கொண்டு முத்தமிடுவது பற்றிக்) கேட்பதற்காகச் சென்றோம்” என்று அஸ்வத் (ரஹ்), மஸ்ரூக் (ரஹ்) ஆகியோர் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.

Book : 13


انْطَلَقْتُ أَنَا وَمَسْرُوقٌ، إِلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، فَقُلْنَا لَهَا: ” أَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ؟ قَالَتْ: نَعَمْ، وَلَكِنَّهُ كَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ أَوْ مِنْ أَمْلَكِكُمْ لِإِرْبِهِ ” شَكَّ أَبُو عَاصِمٍ

– وحَدَّثَنِيهِ يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، وَمَسْرُوقٍ أَنَّهُمَا دَخَلَا عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ لِيَسْأَلَانِهَا فَذَكَرَ نَحْوَهُ


Muslim-2022

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2022. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியைக்) கட்டியணைப்பார்கள்.

இதை அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 13


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ»


Muslim-2021

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2021. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியை) முத்தமிடுவார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்.

இதை அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 13


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ»


Muslim-2020

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2020. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியை) முத்தமிடுவார்கள்; நோன்பு நோற்றிருந்த நிலையில் கட்டியணைப்பார்கள். ஆயினும், அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்.

இதை மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 13


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ، وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَلَكِنَّهُ أَمْلَكُكُمْ لِإِرْبِهِ»


Muslim-2019

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2019. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் என்னை முத்தமிடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டதைப் போன்று உங்களில் எவரால் தம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்?

இதைக் காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 13


«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُنِي وَهُوَ صَائِمٌ، وَأَيُّكُمْ يَمْلِكُ إِرْبَهُ، كَمَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْلِكُ إِرْبَهُ؟»


Muslim-2018

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2018. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் உங்கள் தந்தை (காசிம் பின் முஹம்மத் – ரஹ்) அவர்கள் வாயிலாக “நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு என்னை முத்தமிடுவார்கள்” என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைச் செவியுற்றீரா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பதிலளிக்காமல் சிறிது நேரம்) அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு “ஆம்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 13


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ» فَسَكَتَ سَاعَةً، ثُمَّ قَالَ: نَعَمْ


Muslim-2017

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

பாலுணர்வைத் தூண்டாது எனில் நோன்பாளி (தம் மனைவியை) முத்தமிடுவது தடைசெய்யப்பட்டதன்று.

2017. (ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரியின் புதல்வர்) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் தம் துணைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்” எனக் கூறிவிட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் சிரிப்பார்கள்.

Book : 13


«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ إِحْدَى نِسَائِهِ، وَهُوَ صَائِمٌ» ثُمَّ تَضْحَكُ


Next Page » « Previous Page