Category: முஸ்லிம்

Muslim-2016

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2016. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொடர்நோன்பு நோற்கலாகாது என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தடைவிதித்தார்கள். மக்கள்மீது கொண்ட கருணையே இதற்குக் காரணம். அப்போது “தாங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே!” என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (இவ்விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்றான்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 13


نَهَاهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوِصَالِ رَحْمَةً لَهُمْ، فَقَالُوا: إِنَّكَ تُوَاصِلُ، قَالَ: «إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ، إِنِّي يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي»


Muslim-2015

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2015. அனஸ் ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் ஆரம்பத்தில் தொடர்நோன்பு நோற்றார்கள். (இதைக் கண்டு) முஸ்லிம்கள் சிலரும் தொடர்நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “எமக்கு (மட்டும்) இந்த மாதம் (எத்தனை நாட்கள்) நீட்டிக்கப்பட்டிருந்தாலும் எம்மால் தொடர்நோன்பு நோற்றிருக்க முடியும். அப்போது (வழிபாடுகளில்) அதீத ஆர்வம் காட்டுபவர்கள் தங்களது போக்கைக் வைவிட்டிருப்பர். “நீங்கள் (இவ்விஷயத்தில்) என்னைப் போன்றவர்கள் அல்லர்” அல்லது “நான் உங்களைப் போன்றவன் அல்லன்”. எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்கும் நிலையில் நான் பகல் நேரத்தைக் கழிக்கிறேன்” என்று சொன்னார்கள்.

Book : 13


وَاصَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَوَّلِ شَهْرِ رَمَضَانَ، فَوَاصَلَ نَاسٌ مِنَ الْمُسْلِمِينَ، فَبَلَغَهُ ذَلِكَ، فَقَالَ: «لَوْ مُدَّ لَنَا الشَّهْرُ لَوَاصَلْنَا وِصَالًا، يَدَعُ الْمُتَعَمِّقُونَ تَعَمُّقَهُمْ، إِنَّكُمْ لَسْتُمْ مِثْلِي، – أَوْ قَالَ – إِنِّي لَسْتُ مِثْلَكُمْ، إِنِّي أَظَلُّ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي»


Muslim-2014

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2014. அனஸ் ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு விலாப் பக்கத்தில் நின்றுகொண்டேன். இன்னொரு மனிதர் வந்து அவரும் நின்றுகொண்டார். இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாகவே ஆகிவிட்டோம். தமக்குப் பின்னால் நாங்கள் நிற்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்ததும் தொழுகையைச் சுருக்கலானார்கள். பிறகு தமது இல்லத்திற்குள் சென்று, எங்களுடன் தொழாத விதத்தில் (நீளமாகத்) தொழுதார்கள். காலையில் நாங்கள் அவர்களிடம் “இந்த இரவு (உங்களுக்குப் பின்னால் இருந்த) எங்களைத் தாங்கள் அறிந்தீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “ஆம். அதுதான் நான் எதைச் செய்தேனோ அதைச் செய்ததற்கு (சுருக்கித் தொழுததற்கு)க் காரணமாக அமைந்தது” என்று சொன்னார்கள். அந்த மாதத்தின் இறுதியில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பு நோற்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய தோழர்களில் சிலரும் அவ்வாறே தொடர்நோன்பு நோற்கலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் தொடர்நோன்பு நோற்கிறார்கள்! நீங்கள் (இவ்விஷயத்தில்) என்னைப் போன்றவர்கள் அல்லர். கவனத்தில்

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُصَلِّي فِي رَمَضَانَ، فَجِئْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ وَجَاءَ رَجُلٌ آخَرُ، فَقَامَ أَيْضًا حَتَّى كُنَّا رَهْطًا فَلَمَّا حَسَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّا خَلْفَهُ جَعَلَ يَتَجَوَّزُ فِي الصَّلَاةِ، ثُمَّ دَخَلَ رَحْلَهُ، فَصَلَّى صَلَاةً لَا يُصَلِّيهَا عِنْدَنَا، قَالَ: قُلْنَا لَهُ: حِينَ أَصْبَحْنَا أَفَطَنْتَ لَنَا اللَّيْلَةَ قَالَ: فَقَالَ: «نَعَمْ، ذَاكَ الَّذِي حَمَلَنِي عَلَى الَّذِي صَنَعْتُ» قَالَ: فَأَخَذَ يُوَاصِلُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَاكَ فِي آخِرِ الشَّهْرِ، فَأَخَذَ رِجَالٌ مِنْ أَصْحَابِهِ يُوَاصِلُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ رِجَالٍ يُوَاصِلُونَ، إِنَّكُمْ لَسْتُمْ مِثْلِي، أَمَا وَاللهِ، لَوْ تَمَادَّ لِي الشَّهْرُ لَوَاصَلْتُ وِصَالًا يَدَعُ الْمُتَعَمِّقُونَ تَعَمُّقَهُمْ»


Muslim-2013

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2013. அபூஹுரைரா ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தொடர்நோன்பு நோற்பதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். “தாங்கள் மட்டும் தொடர்நோன்பு நோற்கிறீர்களே, அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டார்கள். “இவ்விஷயத்தில் நீங்கள் என்னைப் போன்றவர்கள் அல்லர். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்ற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன். எனவே, நற்செயல்களில் உங்களால் இயன்ற சுமையை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் “உங்களுக்குச் சக்தியுள்ள சுமையை மட்டுமே ஏற்றுக்கொள்ளுங்கள்” என இடம் பெற்றுள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “நபி (ஸல்) அவர்கள், தொடர் நோன்பிற்குத் தடை விதித்தார்கள்” என ஹதீஸ் தொடங்குகிறது.

«إِيَّاكُمْ وَالْوِصَالَ» قَالُوا: فَإِنَّكَ تُوَاصِلُ، يَا رَسُولَ اللهِ، قَالَ: «إِنَّكُمْ لَسْتُمْ فِي ذَلِكَ مِثْلِي، إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي، فَاكْلَفُوا مِنَ الْأَعْمَالِ مَا تُطِيقُونَ»

– وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ، غَيْرَ أَنَّهُ قَالَ: «فَاكْلَفُوا مَا لَكُمْ بِهِ طَاقَةٌ» وحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ نَهَى عَنِ الْوِصَالِ، بِمِثْلِ حَدِيثِ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ