Category: முஸ்லிம்

Muslim-2006

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

நோன்பு முடியும் நேரமும் பகலின் வெளியேற்றமும்.

2006. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்.

இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 13


«إِذَا أَقْبَلَ اللَّيْلُ وَأَدْبَرَ النَّهَارُ، وَغَابَتِ الشَّمْسُ فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ» لَمْ يَذْكُرْ ابْنُ نُمَيْرٍ: «فَقَدْ»


Muslim-2005

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2005. அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது மஸ்ரூக், ஆயிஷா (ரலி) அவர்களிடம் “முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நன்மையில் குறைவைப்பவர்கள் அல்லர். அவ்விருவரில் ஒருவர் மஃக்ரிப் தொழுகையையும் நோன்பு துறப்பதையும் விரைவாகவே செய்கிறார். மற்றொருவர் அவ்விரண்டையுமே தாமதப்படுத்துகிறார்” என்று கூறினார். அப்போது “மஃக்ரிபையும் நோன்பு துறப்பதையும் விரைவுபடுத்துபவர் யார்?” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்” என்றார் மஸ்ரூக். ஆயிஷா (ரலி) அவர்கள், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்” என்று விடையளித்தார்கள்.

Book : 13


دَخَلْتُ أَنَا وَمَسْرُوقٌ، عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، فَقَالَ لَهَا مَسْرُوقٌ: رَجُلَانِ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كِلَاهُمَا لَا يَأْلُو عَنِ الْخَيْرِ، أَحَدُهُمَا «يُعَجِّلُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ»، وَالْآخَرُ يُؤَخِّرُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ، فَقَالَتْ: مَنْ يُعَجِّلُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ؟ قَالَ: عَبْدُ اللهِ، فَقَالَتْ: «هَكَذَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ»


Muslim-2004

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2004. அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப் படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)” என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?” என்று கேட்டார்கள். நாங்கள் “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்” என்றோம். அதற்கு, “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இன்னொரு நபித்தோழர் அபூமூசா (ரலி) ஆவார்” என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

Book : 13


دَخَلْتُ أَنَا وَمَسْرُوقٌ، عَلَى عَائِشَةَ فَقُلْنَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، رَجُلَانِ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَحَدُهُمَا «يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلَاةَ»، وَالْآخَرُ يُؤَخِّرُ الْإِفْطَارَ وَيُؤَخِّرُ الصَّلَاةَ، قَالَتْ: أَيُّهُمَا الَّذِي يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلَاةَ؟ ” قَالَ: قُلْنَا عَبْدُ اللهِ يَعْنِي ابْنَ مَسْعُودٍ قَالَتْ: «كَذَلِكَ كَانَ يَصْنَعُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» زَادَ أَبُو كُرَيْبٍ: وَالْآخَرُ أَبُو مُوسَى


Muslim-2003

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2003. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 13


«لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ»

– وحَدَّثَنَاه قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ، ح وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ كِلَاهُمَا، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ


Muslim-2002

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2002. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நாங்கள் சஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாராவோம்” என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், “சஹருக்கும் (ஃபஜ்ர்) தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?” என்று கேட்டேன். அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “(குர்ஆனில்) ஐம்பது வசனங்கள் (ஓதும் நேரம்)” என்று பதிலளித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 13


«تَسَحَّرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قُمْنَا إِلَى الصَّلَاةِ» قُلْتُ: كَمْ كَانَ قَدْرُ مَا بَيْنَهُمَا؟ قَالَ: خَمْسِينَ آيَةً

– وحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا هَمَّامٌ، ح وحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سَالِمُ بْنُ نُوحٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَامِرٍ، كِلَاهُمَا عَنْ قَتَادَةَ، بِهَذَا الْإِسْنَادِ


Muslim-2001

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2001. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் உபவாசத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பதுதான்.

இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 13


«فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ، أَكْلَةُ السَّحَرِ»

– وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، جَمِيعًا عَنْ وَكِيعٍ، ح وحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، كِلَاهُمَا عَنْ مُوسَى بْنِ عُلَيٍّ بِهَذَا الْإِسْنَادِ


Muslim-2000

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

சஹர் செய்வதன் சிறப்பு; அது வலியுறுத்தப்பெற்ற விரும்பத்தகுந்த செயலாகும்; சஹரை அதன் இறுதி நேரத்தில் செய்வதும்,நோன்பு துறத்தலை அதன் ஆரம்ப நேரத்தில் செய்வதும் விரும்பத்தக்கவை ஆகும்.

2000. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சஹர் செய்யுங்கள். ஏனெனில், சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 13


«تَسَحَّرُوا، فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً»


Muslim-1999

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1999. நபி (ஸல்) அவர்கள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களை (சஹர் செய்வதிலிருந்து) பிலாலின் தொழுகைஅறிவிப்பு ஏமாற்றிவிட வேண்டாம். (அடிவானில் நீளவாக்கில் தென்படும்) இந்த வெண்மை -வைகறை “வெளிப்படும் வரை” அல்லது “தோன்றும்வரை”- ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம்.

இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் உரையாற்றுகையில் அறிவித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.

Book : 13


سَمِعْتُ سَمُرَةَ بْنَ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ، وَهُوَ يَخْطُبُ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «لَا يَغُرَّنَّكُمْ نِدَاءُ بِلَالٍ، وَلَا هَذَا الْبَيَاضُ حَتَّى يَبْدُوَ الْفَجْرُ – أَوْ قَالَ – حَتَّى يَنْفَجِرَ الْفَجْرُ»

– وحَدَّثَنَاه ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي سَوَادَةُ بْنُ حَنْظَلَةَ الْقُشَيْرِيُّ، قَالَ: سَمِعْتُ سَمُرَةَ بْنَ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَذَكَرَ هَذَا


Muslim-1998

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1998. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களை சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம். அடிவானில் நீளவாக்கில் (செங்குத்தாய்) தெரியும் இந்த வெண்மை – இவ்வாறு (அகலவாக்கில்) பரவும் வரை- ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம்.

இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் அ(கலவாக்கில் பரவலாகத் தெரியும்வரை என்ப)தை அறிவிக்கும்போது, இவ்வாறு என்று தம் இரு கரங்களால் சைகை செய்து (விரித்துக்) காட்டினார்கள்.

அத்தியாயம்: 13


«لَا يَغُرَّنَّكُمْ مِنْ سَحُورِكُمْ أَذَانُ بِلَالٍ، وَلَا بَيَاضُ الْأُفُقِ الْمُسْتَطِيلُ هَكَذَا، حَتَّى يَسْتَطِيرَ هَكَذَا»

وَحَكَاهُ حَمَّادٌ بِيَدَيْهِ، قَالَ: يَعْنِي مُعْتَرِضًا


Muslim-1997

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1997. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களை (சஹர் உணவு உண்பதிலிருந்து) பிலாலின் தொழுகைஅறிவிப்பு ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம். (செங்குத்தாகத் தெரியும்) இந்த வெளிச்சமும் (இவ்வாறு பரவலாகத் தெரியும்வரை) ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம். இவ்வாறு (அகலவாக்கில்) பரவலாகத் தெரியும்வரை.

இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 13


«لَا يَغُرَّنَّكُمْ أَذَانُ بِلَالٍ، وَلَا هَذَا الْبَيَاضُ – لِعَمُودِ الصُّبْحِ – حَتَّى يَسْتَطِيرَ هَكَذَا»


Next Page » « Previous Page