Category: முஸ்லிம்

Muslim-1764

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1764. அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!”என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “எந்த உருவப் படங்களையும் நீ அழிக்காமல் விடாதீர்!” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Book : 11


قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ»

– وحَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا يَحْيَى وَهُوَ الْقَطَّانُ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي حَبِيبٌ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَ: وَلَا صُورَةً إِلَّا طَمَسْتَهَا


Muslim-1763

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31

மண்ணறை(யின் மேற்பகுதி)யைத் தரைக்குச் சமமாக்குதல்.

1763. ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள “ரோடிஸ்” தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்றைத் தரைமட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்றைத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 11


كُنَّا مَعَ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ بِأَرْضِ الرُّومِ بِرُودِسَ، فَتُوُفِّيَ صَاحِبٌ لَنَا، فَأَمَرَ فَضَالَةُ بْنُ عُبَيْدٍ بِقَبْرِهِ فَسُوِّيَ، ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَأْمُرُ بِتَسْوِيَتِهَا»


Muslim-1762

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30

கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (பிரேதத்தை) வைப்பது.

1762. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கப்றுக்குள் சிவப்புப் போர்வை ஒன்று விரிக்கப் பட்டது.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகின்றேன்:) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள அபூஜம்ரா என்பவரின் பெயர் நஸ்ர் பின் இம்ரான் என்பதாகும். (இங்கு இடம்பெறாத மற்றொருவரான) அபுத்தய்யாஹ் என்பாரின் பெயர் யஸீத் பின் ஹுமைத் ஆகும். இவர்கள் இருவரும் (குராசான் நாட்டிலுள்ள) “சர்கஸ்” எனும் நகரத்தில் இறந்தனர்.

Book : 11


«جُعِلَ فِي قَبْرِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطِيفَةٌ حَمْرَاءُ» قَالَ مُسْلِم: «أَبُو جَمْرَةَ، اسْمُهُ نَصْرُ بْنُ عِمْرَانَ، وَأَبُو التَّيَّاحِ، اسْمُهُ يَزِيدُ بْنُ حُمَيْدٍ مَاتَا بِسَرَخْسَ»


Muslim-1761

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 29

உட்குழியும் பிரேதத்தின் மீது செங்கற்களை அடுக்குவதும்.

1761. ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயில் இருந்தபோது, “(நான் இறந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்யப்பட்டதைப் போன்று, (குழியினுள்) எனக்காக உட்குழியொன்றை வெட்டுங்கள்; என்மீது நன்கு செங்கற்களை அடுக்கிவையுங்கள்!” என்று சொன்னார்கள்.

அத்தியாயம்: 11


أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، قَالَ: فِي مَرَضِهِ الَّذِي هَلَكَ فِيهِ: «الْحَدُوا لِي لَحْدًا، وَانْصِبُوا عَلَيَّ اللَّبِنَ نَصْبًا، كَمَا صُنِعَ بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Muslim-1760

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28

ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் திரும்பிச் செல்வது.

1760. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இப்னுத் தஹ்தாஹ் (ரலி) அவர்களது நல்லடக்கத்தை முடித்தபோது அவர்களிடம் சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையொன்று கொண்டுவரப்பட்டது. அதிலேறி அவர்கள் திரும்பினார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி நடந்துவந்தோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னுத் தஹ்தாஹ் (ரலி) அவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை தொழுவித்தபிறகு அவர்களிடம் சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையொன்று கொண்டுவரப்பட்டது. அதை ஒரு மனிதர் பிடித்துக்கொள்ள அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏறிக்கொண்டார்கள். அது சீராக ஓடலாயிற்று. நாங்கள் அதைப் பின் தொடர்ந்து விரைந்து நடக்கலானோம். அப்போது அங்கிருந்த

«أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفَرَسٍ مُعْرَوْرًى، فَرَكِبَهُ حِينَ انْصَرَفَ مِنْ جَنَازَةِ ابْنِ الدَّحْدَاحِ، وَنَحْنُ نَمْشِي حَوْلَهُ»

– وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى – قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنِ الدَّحْدَاحِ: ثُمَّ أُتِيَ بِفَرَسٍ عُرْيٍ فَعَقَلَهُ رَجُلٌ فَرَكِبَهُ، فَجَعَلَ يَتَوَقَّصُ بِهِ، وَنَحْنُ نَتَّبِعُهُ، نَسْعَى خَلْفَهُ، قَالَ: فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَمْ مِنْ عِذْقٍ مُعَلَّقٍ – أَوْ مُدَلًّى – فِي الْجَنَّةِ لِابْنِ الدَّحْدَاحِ» أَوْ قَالَ شُعْبَةُ لِأَبِي الدَّحْدَاحِ


Muslim-1759

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1759. சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சிறுவனாக இருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (பல தகவல்களை) மனனமிட்டுவந்தேன். இங்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் இருப்பதே என்னை அவற்றைச் சொல்லவிடாமல் தடுக்கிறது. நான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று, பிரசவ இரத்தப்போக்கில் இறந்துபோன பெண்ணிற்காக ஜனாஸாத் தொழுகை தொழுதிருக்கிறேன். அத்தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரேதத்தின் மையப்பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள்,அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிற்காக தொழுவித்தபோது, சடலத்தின் மையப்பகுதிக்கு நேராக நின்றார்கள்” என்று (சமுரா (ரலி) கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

Book : 11


لَقَدْ كُنْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُلَامًا، فَكُنْتُ أَحْفَظُ عَنْهُ، فَمَا يَمْنَعُنِي مِنَ الْقَوْلِ إِلَّا أَنَّ هَا هُنَا رِجَالًا هُمْ أَسَنُّ مِنِّي، وَقَدْ «صَلَّيْتُ وَرَاءَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا، فَقَامَ عَلَيْهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ وَسَطَهَا» وَفِي رِوَايَةِ ابْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ قَالَ: فَقَامَ عَلَيْهَا لِلصَّلَاةِ وَسَطَهَا


Muslim-1758

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27

ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்?

1758. சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உம்மு கஅப் (ரலி) எனும் பெண்மணி பிரசவ இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவருக்காக நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்களைப் பின்பற்றி நானும் தொழுதேன். அத்தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரேதத்தின் மையப்பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “உம்மு கஅப்” எனும் பெயர் இடம்பெறவில்லை.

Book : 11


صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَلَّى عَلَى أُمِّ كَعْبٍ، مَاتَتْ وَهِيَ نُفَسَاءُ، «فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلصَّلَاةِ عَلَيْهَا وَسَطَهَا»

وحَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، ح وحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، وَالْفَضْلُ بْنُ مُوسَى، كُلُّهُمْ عَنْ حُسَيْنٍ بِهَذَا الْإِسْنَادِ، وَلَمْ يَذْكُرُوا أُمَّ كَعْبٍ


Muslim-1757

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1757. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் “அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வஉஃபு அன்ஹு, வ ஆஃபிஹி, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பி மாயின் வ ஸல்ஜின் வ பரதின், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ கிஹி ஃபித்னத்தல் கப்றி வ அதாபந் நார்” என்று ஓதுவதை நான் செவியுற்றேன்.

(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; இவருடைய பாவங்களை மாய்த்து இவரைக் காப்பாயாக! இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்ல தாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் கழுவி, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று தூய்மையாக்குவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டையும் இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தையும் இங்குள்ள துணையைவிடச்

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَلَّى عَلَى جَنَازَةٍ يَقُولُ: «اللهُمَّ، اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَاعْفُ عَنْهُ وَعَافِهِ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِمَاءٍ وَثَلْجٍ وَبَرَدٍ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَقِهِ فِتْنَةَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ» قَالَ عَوْفٌ: «فَتَمَنَّيْتُ أَنْ لَوْ كُنْتُ أَنَا الْمَيِّتَ، لِدُعَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ذَلِكَ الْمَيِّتِ»


Muslim-1756

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை.

1756. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரேதத்திற்காகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஓதிய பிரார்த்தனையை நான் மனனமிட்டுள்ளேன். அவர்கள், “அல்லா ஹும் மஃக்பிர் லஹு, வர்ஹம்ஹு, வ ஆஃபிஹி, வஉஃபு அன்ஹு, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி, வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ அத்கில்ஹுல் ஜன்னத்த, வ அஇத்ஹு மின் அதாபில் கப்ரி / மின் அதாபிந் நார்” என்று பிரார்த்தித்தார்கள்.

(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; (மறுமையின் சோதனைகளிலிருந்து) இவரைக் காப்பாயாக; பாவங்களை மாய்ப்பாயாக; இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய

صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ، فَحَفِظْتُ مِنْ دُعَائِهِ وَهُوَ يَقُولُ: «اللهُمَّ، اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ – أَوْ مِنْ عَذَابِ النَّارِ -» قَالَ: «حَتَّى تَمَنَّيْتُ أَنْ أَكُونَ أَنَا ذَلِكَ الْمَيِّتَ»

– قَالَ: وحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِ هَذَا الْحَدِيثِ أَيْضًا. وحَدَّثَنَاه إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، بِالْإِسْنَادَيْنِ جَمِيعًا، نَحْوَ حَدِيثِ ابْنِ وَهْبٍ


Muslim-1755

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1755. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பக்காலத்தில்) பிரேதத்தைக் கண்டு எழுந்து நிற்பதைப் பார்த்தபோது நாங்களும் நின்றோம்; (பிற்காலத்தில்) அவர்கள் உட்கார்ந்தபோது நாங்களும் உட்கார்ந்துவிட்டோம்.

இதை மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 11


رَأَيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَامَ فَقُمْنَا وَقَعَدَ فَقَعَدْنَا يَعْنِي فِي الْجَنَازَةِ»

– وحَدَّثَنَاه مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، وَعُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، قَالَا: حَدَّثَنَا يَحْيَى وَهُوَ الْقَطَّانُ، عَنْ شُعْبَةَ بِهَذَا الْإِسْنَادِ


Next Page » « Previous Page