Category: முஸ்லிம்

Muslim-1754

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1754. மஸ்ஊத் பின் அல்ஹகம் அல்அன் சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பிரேதங்களுக்காக எழுந்து நிற்பது தொடர்பாக “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பக்காலத்தில்) எழுந்து நின்றார்கள்; பின்னர் உட்கார்ந்துவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

வாகித் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் பிரேதம் வைக்கப்படும்வரை நின்றுகொண்டிருப்பதைக் கண்டபோதுதான் நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 11


أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ: فِي شَأْنِ الْجَنَائِزِ «إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ، ثُمَّ قَعَدَ» وَإِنَّمَا حَدَّثَ بِذَلِكَ لِأَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ رَأَى وَاقِدَ بْنَ عَمْرٍو قَامَ، حَتَّى وُضِعَتِ الْجَنَازَةُ

– وحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، بِهَذَا الْإِسْنَادِ


Muslim-1753

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25

ஜனாஸாவைக் கண்டு எழுந்து நிற்கும் விதி மாற்றப்பட்டுவிட்டது.

1753. வாகித் பின் அம்ர் பின் சஅத் பின் முஆத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு நல்லடக்க நிகழ்ச்சியில் இருந்தபோது நான் நின்றுகொண்டேயிருந்ததை நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரேதம் வைக்கப்படுவதை எதிர்பார்த்து உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் “ஏன் நிற்கிறீர்கள்?” என்று என்னிடம் கேட்டார்கள். நான் “பிரேதம் வைக்கப்படுவதை எதிர்பார்த்து நிற்கிறேன். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸே இதற்குக் காரணம்” என்றேன். அதற்கு அவர்கள் மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வரும்) ஹதீஸை அறிவித்தார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரேதத்தைக் கண்டால் ஆரம்பக்காலத்தில்) எழுந்து நின்றார்கள். பின்னர் உட்கார்ந்து விட்டார்கள்” என அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ்

رَآنِي نَافِعُ بْنُ جُبَيْرٍ وَنَحْنُ فِي جَنَازَةٍ قَائِمًا، وَقَدْ جَلَسَ يَنْتَظِرُ أَنْ تُوضَعَ الْجَنَازَةُ، فَقَالَ لِي: مَا يُقِيمُكَ؟ فَقُلْتُ: أَنْتَظِرُ أَنْ تُوضَعَ الْجَنَازَةُ، لِمَا يُحَدِّثُ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ فَقَالَ نَافِعٌ: فَإِنَّ مَسْعُودَ بْنَ الْحَكَمِ، حَدَّثَنِي عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّهُ قَالَ: «قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَعَدَ»


Muslim-1752

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1752. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கைஸ் பின் சஅத் (ரலி), சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் (இராக் நாட்டிலுள்ள) “காதிசிய்யா” எனும் இடத்தில் இருந்தபோது, ஒரு பிரேத (ஊர்வல)ம் அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்து நின்றனர். அப்போது அவர்களிடம், “இது இந்த நாட்டு (முஸ்லிமல்லாத) பிரஜையின் பிரேதமாயிற்றே?” என்று கூறப்பட்டது.

அதற்கு அவ்விருவரும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், “இது யூதரின் பிரேதம்” எனக் கூறப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது ஓர் (மனித) உயிரில்லையா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்” என்றனர்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் கைஸ் பின் சஅத் (ரலி), சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

أَنَّ قَيْسَ بْنَ سَعْدٍ، وَسَهْلَ بْنَ حُنَيْفٍ، كَانَا بِالْقَادِسِيَّةِ فَمَرَّتْ بِهِمَا جَنَازَةٌ فَقَامَا، فَقِيلَ لَهُمَا: إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ، فَقَالَا: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جَنَازَةٌ، فَقَامَ فَقِيلَ: إِنَّهُ يَهُودِيٌّ، فَقَالَ: «أَلَيْسَتْ نَفْسًا»

– وحَدَّثَنِيهِ الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، بِهَذَا الْإِسْنَادِ، وَفِيهِ فَقَالَا: «كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرَّتْ عَلَيْنَا جَنَازَةٌ»