Category: முஸ்லிம்

Muslim-1734

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1734. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபிசீனிய மன்னர் நஜாஷீ இறந்த அன்றே அவரது மரணச்செய்தியை எங்களிடம் அறிவித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் “பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை தொழுகைத்திடலில் அணிவகுக்கச் செய்து நான்கு “தக்பீர்”கள் கூறி ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 11


نَعَى لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجَاشِيَ صَاحِبَ الْحَبَشَةِ، فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ» قَالَ ابْنُ شِهَابٍ: وَحَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ حَدَّثَهُ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَفَّ بِهِمْ بِالْمُصَلَّى، فَصَلَّى فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعَ تَكْبِيرَاتٍ»

– وحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَحَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالُوا: حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، كَرِوَايَةِ عُقَيْلٍ بِالْإِسْنَادَيْنِ جَمِيعًا


Muslim-1733

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22

ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள்.

1733. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அபிசீனிய மன்னர்) நஜாஷீ (நீகஸ்) இறந்த அன்றே அவரது மரணச்செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு மக்களுடன் “முஸல்லா” எனும் தொழும்திடலுக்குப் புறப்பட்டுச் சென்று (“அல்லாஹு அக்பர்” என்று) நான்கு “தக்பீர்”கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

Book : 11


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى لِلنَّاسِ النَّجَاشِيَ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، فَخَرَجَ بِهِمْ إِلَى الْمُصَلَّى، وَكَبَّرَ أَرْبَعَ تَكْبِيرَاتٍ»


Muslim-1732

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21

ஓய்வு பெற்றவரும் ஓய்வு அளித்தவரும்.

1732. அபூகத்தாதா-ஹாரிஸ் பின் ரிப்ஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் “(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்” என்று சொன்னார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே,ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைநம்பிக்கைகொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் எல்லா விதமான தொல்லையி)லிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்று நிம்மதி) பெறுகின்றன” என்று சொன்னார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرَّ عَلَيْهِ بِجَنَازَةٍ، فَقَالَ: «مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ»، قَالُوا: يَا رَسُولَ اللهِ، مَا الْمُسْتَرِيحُ وَالْمُسْتَرَاحُ مِنْهُ؟ فَقَالَ: «الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا، وَالْعَبْدُ الْفَاجِرُ يَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادُ، وَالْبِلَادُ، وَالشَّجَرُ، وَالدَّوَابُّ»

– وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، جَمِيعًا عَنْ عَبْدِ اللهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنِ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِي حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ: «يَسْتَرِيحُ مِنْ أَذَى الدُّنْيَا وَنَصَبِهَا إِلَى رَحْمَةِ اللهِ»


Muslim-1731

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20

இறந்தவர் குறித்துப் புகழ்ந்து பேசப்படுதல்; அல்லது இகழ்ந்து பேசப்படுதல்.

1731. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களைக் கடந்து) ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து நல்ல விதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள் “உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் “(அல்லாஹ்வின் தூதரே!) என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்ட போது அது குறித்து நல்லவிதமாகப் பேசப்பட்டது. அதற்கு நீங்கள் “உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது;” என்று கூறினீர்கள். பிறகு மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அதற்கும் நீங்கள் “உறுதியாகிவிட்டது;

مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرًا، فَقَالَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ، وَجَبَتْ، وَجَبَتْ»، وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا، فَقَالَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ، وَجَبَتْ، وَجَبَتْ»، قَالَ عُمَرُ: فِدًى لَكَ أَبِي وَأُمِّي، مُرَّ بِجَنَازَةٍ، فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرٌ، فَقُلْتَ: «وَجَبَتْ، وَجَبَتْ، وَجَبَتْ»، وَمُرَّ بِجَنَازَةٍ، فَأُثْنِيَ عَلَيْهَا شَرٌّ، فَقُلْتَ: «وَجَبَتْ، وَجَبَتْ، وَجَبَتْ»؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَمَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا وَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللهِ فِي الْأَرْضِ، أَنْتُمْ شُهَدَاءُ اللهِ فِي الْأَرْضِ، أَنْتُمْ شُهَدَاءُ اللهِ فِي الْأَرْضِ»

– وحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ، ح وحَدَّثَنِي يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، كِلَاهُمَا عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: مُرَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجَنَازَةٍ، فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، غَيْرَ أَنَّ حَدِيثَ عَبْدِ الْعَزِيزِ أَتَمُّ


Muslim-1730

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 19

யாருக்கு நாற்பது பேர் (இறுதித் தொழுகை) தொழுகின்றார்களோ அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரை ஏற்கப்படும்.

1730. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய புதல்வர் ஒருவர் “குதைத்” அல்லது “உஸ்ஃபான்” எனுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பார்” என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது “அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்” என்றார்கள். நான் “ஆம்” என்றேன். “அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்” என்று கூறிவிட்டு, “ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின்

أَنَّهُ مَاتَ ابْنٌ لَهُ بِقُدَيْدٍ – أَوْ بِعُسْفَانَ – فَقَالَ: يَا كُرَيْبُ، انْظُرْ مَا اجْتَمَعَ لَهُ مِنَ النَّاسِ، قَالَ: فَخَرَجْتُ، فَإِذَا نَاسٌ قَدِ اجْتَمَعُوا لَهُ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: تَقُولُ هُمْ أَرْبَعُونَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: أَخْرِجُوهُ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ، فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا، لَا يُشْرِكُونَ بِاللهِ شَيْئًا، إِلَّا شَفَّعَهُمُ اللهُ فِيهِ»،

وَفِي رِوَايَةِ ابْنِ مَعْرُوفٍ: عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ


Muslim-1729

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 18

யாருக்கு நூறு பேர் (இறுதித் தொழுகை) தொழுகின்றார்களோ அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரை ஏற்கப்படும்.

1729. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லிம் குழுவினர் (இறுதித்) தொழுகை தொழுது, அவர்களில் ஒவ்வொருவரும் அவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸல்லாம் பின் அபூமுதீஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இந்த ஹதீஸை நான் ஷுஐப் பின் அல்ஹப்ஹாப் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் “இவ்வாறே எனக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்” என்றார்கள்.

அத்தியாயம்: 11


«مَا مِنْ مَيِّتٍ تُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَبْلُغُونَ مِائَةً، كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ، إِلَّا شُفِّعُوا فِيهِ»،

قَالَ: فَحَدَّثْتُ بِهِ شُعَيْبَ بْنَ الْحَبْحَابِ فَقَالَ: حَدَّثَنِي بِهِ أَنَسُ بْنُ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muslim-1728

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1728. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜனாஸாத் தொழுகை தொழுதவருக்கு ஒரு “கீராத்” (நன்மை) உண்டு; (தொழுகையில் கலந்ததோடு) அதன் அடக்கத்திலும் கலந்துகொண்டால், அவருக்கு இரண்டு “கீராத்” (நன்மை)கள் உண்டு; “கீராத்” என்பது உஹுத் மலை அளவாகும்.

இதை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், சயீத் மற்றும் ஹிஷாம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “நபி (ஸல்) அவர்களிடம் “கீராத்” பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் “உஹுத் மலையளவு” என்று பதிலளித்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.

Book : 11


«مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فَلَهُ قِيرَاطٌ، فَإِنْ شَهِدَ دَفْنَهَا فَلَهُ قِيرَاطَانِ، الْقِيرَاطُ مِثْلُ أُحُدٍ»

– وحَدَّثَنِي ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، قَالَ: وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، ح وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبَانُ، كُلُّهُمْ عَنْ قَتَادَةَ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، وَفِي حَدِيثِ سَعِيدٍ، وَهِشَامٍ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقِيرَاطِ، فَقَالَ: «مِثْلُ أُحُدٍ»


Muslim-1727

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1727. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது பெரிய வீட்டுக்காரர் கப்பாப் அல்மதனீ (ரலி) அவர்கள் அங்கு வந்து, “அப்துல்லாஹ் பின் உமர் அவர்களே! “ஒரு ஜனாஸாவின் வீட்டிலிருந்து அதனுடன் புறப்பட்டுச் சென்று, (ஜனாஸாத்தொழுகை) தொழுதுவிட்டு, அடக்கம் செய்யப்படும்வரை அதைப் பின் தொடர்கின்றவருக்கு இரண்டு “கீராத்”கள் நன்மை உண்டு; ஒவ்வொரு “கீராத்”தும் உஹுத் மலை அளவுடையதாகும்; (ஜனாஸாத்) தொழுதுவிட்டு (அடக்கம் செய்யப்படும்வரை காத்திராமல்) திரும்பிவிடுகின்றவருக்கு உஹுத் மலையளவு (ஒரு “கீராத்”) நன்மை உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகின்றார்களே?” என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், கப்பாபை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அது பற்றிக் கேட்டுவிட்டு அவர்கள் அளிக்கும் பதிலைத் தம்மிடம் வந்து தெரிவிக்குமாறு அனுப்பிவைத்தார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், போனவர் திரும்பிவரும்வரை பள்ளிவாசல் தரையில் கிடந்த சிறு கற்களில் ஒரு கைப்பிடியளவு

أَنَّهُ كَانَ قَاعِدًا عِنْدَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، إِذْ طَلَعَ خَبَّابٌ صَاحِبُ الْمَقْصُورَةِ، فَقَالَ يَا عَبْدَ اللهِ بْنَ عُمَرَ: أَلَا تَسْمَعُ مَا يَقُولُ أَبُو هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ خَرَجَ مَعَ جَنَازَةٍ مِنْ بَيْتِهَا، وَصَلَّى عَلَيْهَا، ثُمَّ تَبِعَهَا حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ قِيرَاطَانِ مِنْ أَجْرٍ، كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ، وَمَنْ صَلَّى عَلَيْهَا، ثُمَّ رَجَعَ، كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُحُدٍ»؟ فَأَرْسَلَ ابْنُ عُمَرَ خَبَّابًا إِلَى عَائِشَةَ يَسْأَلُهَا عَنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ، ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ فَيُخْبِرُهُ مَا قَالَتْ: وَأَخَذَ ابْنُ عُمَرَ قَبْضَةً مِنْ حَصَى الْمَسْجِدِ يُقَلِّبُهَا فِي يَدِهِ، حَتَّى رَجَعَ إِلَيْهِ الرَّسُولُ، فَقَالَ: قَالَتْ عَائِشَةُ: صَدَقَ أَبُو هُرَيْرَةَ، فَضَرَبَ ابْنُ عُمَرَ بِالْحَصَى الَّذِي كَانَ فِي يَدِهِ الْأَرْضَ، ثُمَّ قَالَ: «لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثِيرَةٍ»


Muslim-1726

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1726. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“யார் ஜனாஸாவைப் பின்தொடர்கிறாரோ அவருக்கு ஒரு “கீராத்” நன்மை உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகிறார்களே!” என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு “அபூஹுரைரா நம்மிடம் அதிகப்படுத்துகிறார்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி இதைப் பற்றிக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தினார்கள். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் “(அப்படியாயின்) நாம் ஏராளமான “கீராத்”களைத் தவறவிட்டுவிட்டோம்” என்றார்கள்.

Book : 11


قِيلَ لِابْنِ عُمَرَ: إِنَّ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَبِعَ جَنَازَةً فَلَهُ قِيرَاطٌ مِنَ الْأَجْرِ» فَقَالَ ابْنُ عُمَرَ: أَكْثَرَ عَلَيْنَا أَبُو هُرَيْرَةَ، فَبَعَثَ إِلَى عَائِشَةَ، فَسَأَلَهَا، فَصَدَّقَتْ أَبَا هُرَيْرَةَ فَقَالَ ابْنُ عُمَرَ: «لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثِيرَةٍ»


Muslim-1725

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1725. அபூஹாஸிம் சல்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்றவருக்கு ஒரு “கீராத்” (நன்மை) உண்டு. மண்ணறையில் (கப்று) வைக்கப்படும்வரை அதைப் பின்தொடர்ந்தவருக்கு இரண்டு “கீராத்”கள் (நன்மை) உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் “அபூஹுரைரா (ரலி) அவர்களே! “கீராத்” என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “உஹுத் மலை அளவு” என்று விடையளித்தார்கள்.

Book : 11


«مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فَلَهُ قِيرَاطٌ، وَمَنِ اتَّبَعَهَا حَتَّى تُوضَعَ فِي الْقَبْرِ فَقِيرَاطَانِ» قَالَ: قُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، وَمَا الْقِيرَاطُ؟ قَالَ: «مِثْلُ أُحُدٍ»


Next Page » « Previous Page