Category: முஸ்லிம்

Muslim-5120

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5120. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக்கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 45


«يَا أَبَا ذَرٍّ إِذَا طَبَخْتَ مَرَقَةً، فَأَكْثِرْ مَاءَهَا، وَتَعَاهَدْ جِيرَانَكَ»


Muslim-5119

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவுக்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு அவர் வாரிசாக்கிவிடுவாரோ என்றுகூட நான் எண்ணினேன்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 45


«مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ»


Muslim-5118

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42

அண்டை வீட்டார் குறித்த அறிவுரையும் அவர்களுக்கு நன்மை செய்வதும்.

5118. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவுக்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு (எனது சொத்தில்) வாரிசாக்கியேவிடுவாரோ என்றுகூட நான் எண்ணினேன்” என்று கூறியதை நான் கேட்டேன்.

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 45


«مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ لَيُوَرِّثَنَّهُ»

– حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ


Muslim-5117

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41

“மக்கள் நாசமாகிவிட்டனர்” என்று கூறுவது தடை செய்யப்பட்டதாகும்.

5117. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘மக்கள் நாசமாகிவிட்டனர்” என்று ஒருவர் கூறினால், அவர்களைவிட அவரே மிகவும் நாசமடைந்தவர் ஆவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளன.

(ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“அவர் அவர்களை நாசமாக்கிவிட்டார்” (“அஹ்லகஹும்”) என்பதா? அல்லது “அவரே அவர்களைவிட மிகவும் நாசமடைந்தவர்” (“அஹ்லகுஹும்”) என்பதா என்று எனக்குத் தெரியவில்லை.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

إِذَا قَالَ الرَّجُلُ: هَلَكَ النَّاسُ فَهُوَ أَهْلَكُهُمْ ” قَالَ أَبُو إِسْحَاقَ: لَا أَدْرِي، أَهْلَكَهُمْ بِالنَّصْبِ، أَوْ أَهْلَكُهُمْ بِالرَّفْعِ.

– حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، ح وحَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، جَمِيعًا عَنْ سُهَيْلٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ