Category: முஸ்லிம்

Muslim-5100

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5100. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் பள்ளிவாசலில் அம்புகளைத் தர்மம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவற்றின் முனையைப் பிடித்து (மறைத்து)க் கொண்டுதான் செல்ல வேண்டுமெனக் கட்டளையிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 45


أَنَّهُ «أَمَرَ رَجُلًا، كَانَ يَتَصَدَّقُ بِالنَّبْلِ فِي الْمَسْجِدِ، أَنْ لَا يَمُرَّ بِهَا إِلَّا وَهُوَ آخِذٌ بِنُصُولِهَا» وقَالَ ابْنُ رُمْحٍ: كَانَ يَصَّدَّقُ بِالنَّبْلِ


Muslim-5099

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5099. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் பள்ளிவாசலில் அம்புகளில் சிலவற்றை, அவற்றின் முனைகள் வெளியே தெரியுமாறு எடுத்துச் சென்றார். அப்போது அவை எந்த முஸ்லிமையும் கீறி(க் காயப் படுத்தி)விடாதபடி எடுத்துச் செல்லுமாறு அவர் கட்டளையிடப்பட்டார்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 45


«أَنَّ رَجُلًا مَرَّ بِأَسْهُمٍ فِي الْمَسْجِدِ، قَدْ أَبْدَى نُصُولَهَا، فَأُمِرَ أَنْ يَأْخُذَ بِنُصُولِهَا، كَيْ لَا يَخْدِشَ مُسْلِمًا»


Muslim-5098

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34

பள்ளிவாசல், கடைத்தெரு உள்ளிட்ட மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் ஆயுதத்தைக் கொண்டுசெல்பவர், அதன் முனைப் பகுதியைப் பிடித்து (மறைத்து)க் கொள்ளுமாறு வந்துள்ள கட்டளை.

5098. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஒருவர் அம்புகளுடன் நடந்து சென்றார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அம்புகளின் முனைகளைப் பிடித்து (மறைத்து)க் கொள்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 45


مَرَّ رَجُلٌ فِي الْمَسْجِدِ بِسِهَامٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ بِنِصَالِهَا»


Muslim-5097

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5097. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள், “ஹிம்ஸ்” பகுதியின் ஆட்சியர் ஒருவர், ஜிஸ்யா செலுத்தாதது தொடர்பாக விவசாயிகளில் சிலரை வெயிலில் நிறுத்திவைத்திருப்பதைக் கண்டார்கள்.

அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள் “என்ன இது?” என்று கேட்டுவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

Book : 45


أَنَّ هِشَامَ بْنَ حَكِيمٍ، وَجَدَ رَجُلًا وَهُوَ عَلَى حِمْصَ يُشَمِّسُ نَاسًا مِنَ النَّبْطِ فِي أَدَاءِ الْجِزْيَةِ، فَقَالَ: مَا هَذَا؟ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ اللهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاسَ فِي الدُّنْيَا»


Muslim-5096

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5096. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் விவசாயிகளில் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள், “இவர்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். மக்கள், “ஜிஸ்யா (செலுத்த மறுத்தது) தொடர்பாகப் பிடிக்கப்பட்டனர்” என்று பதிலளித்தனர்.

அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அன்றைய தினத்தில் பாலஸ்தீனத்தின் ஆட்சியாளராக உமைர் பின் சஅத் என்பவர் இருந்தார். அவரிடம் ஹிஷாம் (ரலி) அவர்கள் சென்று (மக்களுக்கு இழைக்கப்படும் வேதனையைத்) தெரிவித்தார்கள்.

مَرَّ هِشَامُ بْنُ حَكِيمِ بْنِ حِزَامٍ عَلَى أُنَاسٍ مِنَ الْأَنْبَاطِ بِالشَّامِ، قَدْ أُقِيمُوا فِي الشَّمْسِ، فَقَالَ: مَا شَأْنُهُمْ؟ قَالُوا: حُبِسُوا فِي الْجِزْيَةِ، فَقَالَ هِشَامٌ: أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ اللهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاسَ فِي الدُّنْيَا»

– حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ وَأَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، كُلُّهُمْ عَنْ هِشَامٍ، بِهَذَا الْإِسْنَادِ، وَزَادَ فِي حَدِيثِ جَرِيرٍ: قَالَ وَأَمِيرُهُمْ يَوْمَئِذٍ عُمَيْرُ بْنُ سَعْدٍ عَلَى فِلَسْطِينَ فَدَخَلَ عَلَيْهِ فَحَدَّثَهُ، فَأَمَرَ بِهِمْ فَخُلُّوا


Muslim-5095

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33

நியாயமான காரணமின்றி மக்களைத் தண்டிப்பதற்கு வந்துள்ள கடுமையான கண்டனம்.

5095. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் மக்களில் சிலரைக் கடந்துசென்றார்கள். அவர்களது தலையில் ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டு வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள், “என்ன இது?” என்று கேட்டார்கள். “கராஜ் (வரி செலுத்தாதது) தொடர்பாகத் தண்டிக்கப்படுகின்றனர்” என்று சொல்லப் பட்டது.

அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள், “அறிக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்”என்றார்கள்.

Book : 45


مَرَّ بِالشَّامِ عَلَى أُنَاسٍ، وَقَدْ أُقِيمُوا فِي الشَّمْسِ، وَصُبَّ عَلَى رُءُوسِهِمِ الزَّيْتُ، فَقَالَ: مَا هَذَا؟ قِيلَ: يُعَذَّبُونَ فِي الْخَرَاجِ، فَقَالَ: أَمَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ اللهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ فِي الدُّنْيَا»


Muslim-5094

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5094. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 45


«إِذَا قَاتَلَ أَحَدُكُمْ أَخَاهُ، فَلْيَجْتَنِبِ الْوَجْهَ»


Muslim-5093

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5093. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும். ஏனெனில், அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமைத் தனது உருவத்திலேயே படைத்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 45


«إِذَا قَاتَلَ أَحَدُكُمْ أَخَاهُ، فَلْيَجْتَنِبِ الْوَجْهَ، فَإِنَّ اللهَ خَلَقَ آدَمَ عَلَى صُورَتِهِ»


Muslim-5092

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5092. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அறைவதைத் தவிர்க்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 45


«إِذَا قَاتَلَ أَحَدُكُمْ أَخَاهُ، فَلَا يَلْطِمَنَّ الْوَجْهَ»


Muslim-5091

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5091. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 45


«إِذَا قَاتَلَ أَحَدُكُمْ أَخَاهُ، فَلْيَتَّقِ الْوَجْهَ»


Next Page » « Previous Page