23101. அப்துல்லாஹ் பின் அபுல்ஹுதைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தங்கமும், வெள்ளியும் நாசமாகட்டும்! என்று கூறினார்கள்” என என்னுடைய தோழர் ஒருவர் கூறினார்.
மேலும் அவர் (இது பற்றி விவரம்) கூறினார்:
நான் ஒருமுறை உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களுடன் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தங்கமும் வெள்ளியும் நாசமாகட்டும் என்று தாங்கள் கூறியதற்கான காரணம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அது நல்லது என்றால்) இறைவனை தியானம் செய்யும் நாவையும், நன்றி செலுத்தும் இதயத்தையும், மறுமைக்கு உதவும் மனைவியையும் (தடுக்காது) என்று பதிலளித்தார்கள்.
«تَبًّا لِلذَّهَبِ وَالْفِضَّةِ» ، قَالَ: فَحَدَّثَنِي صَاحِبِي أَنَّهُ انْطَلَقَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَوْلُكَ تَبًّا لِلذَّهَبِ وَالْفِضَّةِ مَاذَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِسَانًا ذَاكِرًا، وَقَلْبًا شَاكِرًا، وَزَوْجَةً تُعِينُ عَلَى الْآخِرَةِ»
சமீப விமர்சனங்கள்