22889. அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை நான் சிறுவயதில் இருக்கும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அபூஸைதே! என்னிடம் நெருங்கி வந்து என் முதுகைத் தொட்டுப்பார்” என்று கூறினார்கள். எனவே அவர்கள் முதுகைத் திறக்க நான் அதைத் தொட்டுப் பார்த்தேன். அப்போது நான் (நபித்துவ முத்திரை எனும்) காதமை என்னுடைய விரல்களுக்கிடையில் வைத்து அழுத்திப் பார்த்தேன்.
அபூஸைத் (ரலி) அவர்களிடம் காதம் எப்படி இருந்தது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோள்புஜத்தில் அது திரளான முடி (போன்று கட்டியாக) இருந்தது என்று கூறினார்கள்.
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا زَيْدٍ ادْنُ مِنِّي، وَامْسَحْ ظَهْرِي» . وَكَشَفَ ظَهْرَهُ، فَمَسَحْتُ ظَهْرَهُ، وَجَعَلْتُ الْخَاتَمَ بَيْنَ أَصَابِعِي. قَالَ: فَغَمَزْتُهَا. قَالَ فَقِيلَ: وَمَا الْخَاتَمُ؟ قَالَ: شَعَرٌ مُجْتَمِعٌ عَلَى كَتِفِهِ
சமீப விமர்சனங்கள்