பாடம்:
அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்திகள்.
20732. அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை நான் சிறுவயதில் இருக்கும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அபூஸைதே! என்னிடம் நெருங்கி வா என்று அழைத்தார்கள். நான் அவர்களின் அருகில் சென்றேன். அப்போது அவர்கள், உனது கையால் என் முதுகைத் தொட்டுப்பார்” என்று கூறினார்கள். எனவே அவர்களின் சட்டையில் நான் கையை விட்டு முதுகைத் தொட்டுப் பார்த்தேன். அப்போது நபித்துவ முத்திரை என்னுடைய விரலில் பட்டது.
அபூஸைத் (ரலி) அவர்களிடம் நபித்துவ முத்திரை எப்படி இருந்தது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோள்புஜத்தில் அது திரளான முடி (போன்று கட்டியாக) இருந்தது என்று பதில் கூறினார்கள்.
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَرِبْ مِنِّي» ، فَاقْتَرَبْتُ مِنْهُ، فَقَالَ: «أَدْخِلْ يَدَكَ فَامْسَحْ ظَهْرِي» ، قَالَ: فَأَدْخَلْتُ يَدِي فِي قَمِيصِهِ، فَمَسَحْتُ ظَهْرَهُ، فَوَقَعَ خَاتَمُ النُّبُوَّةِ بَيْنَ إِصْبَعَيَّ، قَالَ: فَسُئِلَ عَنْ خَاتَمِ النُّبُوَّةِ، فَقَالَ: «شَعَرَاتٌ بَيْنَ كَتِفَيْهِ»
சமீப விமர்சனங்கள்