Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-6646

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6646. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணிக்கிறாரோ அவரை, கப்ரின் சோதனையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ مَاتَ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ وُقِيَ فِتْنَةَ الْقَبْرِ»


Musnad-Ahmad-6582

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6582. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணித்தால் அவரை, கப்ரின் சோதனையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ إِلَّا وَقَاهُ اللَّهُ فِتْنَةَ الْقَبْرِ»


Musnad-Ahmad-27610

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

27610. யார் தன்னுடைய சகோதரனின் மானத்தை அவருக்குத் தெரியாமல் காக்கிறாரோ, அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி)


«مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ فِي الْغِيبَةِ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُعْتِقَهُ مِنَ النَّارِ»


Musnad-Ahmad-27609

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

27609. யார் தன்னுடைய சகோதரனின் மானத்தை அவருக்குத் தெரியாமல் காக்கிறாரோ, அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி)


«مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْغِيبَةِ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُعْتِقَهُ مِنَ النَّارِ»


Musnad-Ahmad-27544

ஹதீஸின் தரம்: Pending

27544.


أَتَيْتُ الشَّامَ فَدَخَلْتُ الْمَسْجِدَ، فَصَلَّيْتُ رَكْعَتَيْنِ وَقُلْتُ: اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا صَالِحًا فَذَكَرَ مَعْنَى حَدِيثِ شُعْبَةَ


Musnad-Ahmad-27543

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

27543. எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருடைய முகத்தை, அல்லாஹ்  மறுமையில் நரக நெருப்பிலிருந்து காக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


«مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ رَدَّ اللَّهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ الْقِيَامَةِ»


Musnad-Ahmad-27536

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

27536. எவர் தன்னுடைய முஸ்லிமான சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருடைய முகத்தை, மறுமையில் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவது அல்லாஹ்வின் மீது கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


«مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ الْمُسْلِمِ كَانَ حَقًّا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يَرُدَّ عَنْهُ نَارَ جَهَنَّمَ يَوْمَ الْقِيَامَةِ»


Musnad-Ahmad-22784

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22784. உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சில நபித்தோழர்களுடன் (எனக்கு ஏற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று தடவை கேட்டார்கள். நபித்தோழர்கள் அமைதியாக இருந்தனர். அப்போது உபாதாவாகிய நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நீங்களே அதைப்பற்றி தெரிவித்து விடுங்கள் என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார். அவளை அவளின் குழந்தை தனது தொப்புள்கொடியால் சொர்க்த்திற்கு இழுத்துச் செல்லும்” என்று கூறினார்கள்.


عَادَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ: «هَلْ تَدْرُونَ مَنِ الشُّهَدَاءُ مِنْ أُمَّتِي؟» ، مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، فَسَكَتُوا. فَقَالَ: عُبَادَةُ أَخْبِرْنَا يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ: «الْقَتِيلُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالْمَبْطُونُ شَهِيدٌ، وَالْمَطْعُونُ شَهِيدٌ، وَالنُّفَسَاءُ شَهِيدٌ يَجُرُّهَا وَلَدُهَا بِسُرَرِهِ إِلَى الْجَنَّةِ»


Musnad-Ahmad-22756

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22756. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சில நபித்தோழர்களுடன்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களை (அவர்களுக்கு ஏற்பட்ட)ஒரு நோய்க்காக உடல் நலம் விசாரிக்க சென்றார்கள். அவரை படுக்கையிலிருந்து எழு செய்து அமர வைக்கவில்லை.

அப்போது நபி (ஸல்) அவர்கள்அவர்கள், “ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் யார் போருக்குச் சென்று கொல்லப்படுகிறாரோ அவர் தான் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் என் சமுதாயத்தில் உயிர் தியாகிகள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது வயிற்றில் குழந்தை உள்ள நிலையில் மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் (ரலி)


عَادَ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ قَالَ: فَمَا تَحَوَّزَ لَهُ عَنْ فِرَاشِهِ. فَقَالَ: «أَتَدْرِي مَنْ شُهَدَاءُ أُمَّتِي؟» قَالُوا: قَتْلُ الْمُسْلِمِ شَهَادَةٌ. قَالَ: «إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ قَتْلُ الْمُسْلِمِ شَهَادَةٌ، وَالطَّاعُونُ شَهَادَةٌ، وَالْمَرْأَةُ يَقْتُلُهَا وَلَدُهَا جَمْعَا شَهَادَةٌ»


Musnad-Ahmad-22702

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22702.


أَتَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَرِيضٌ فِي نَاسٍ مِنَ الْأَنْصَارِ يَعُودُونِي فَقَالَ: «هَلْ تَدْرُونَ مَا الشَّهِيدُ؟» فَسَكَتُوا. فَقَالَ: «هَلْ تَدْرُونَ مَا الشَّهِيدُ؟» فَسَكَتُوا. قَالَ: «هَلْ تَدْرُونَ مَا الشَّهِيدُ؟» فَقُلْتُ لِامْرَأَتِي: أَسْنِدِينِي فَأَسْنَدَتْنِي فَقُلْتُ: مَنْ أَسْلَمَ، ثُمَّ هَاجَرَ، ثُمَّ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ شَهَادَةٌ، وَالْبَطْنُ شَهَادَةٌ، وَالْغَرَقُ شَهَادَةٌ، وَالنُّفَسَاءُ شَهَادَةٌ»


Next Page » « Previous Page