Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-10066

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10066. இஸ்லாத்தில் மார்க்க அறிவோடு நற்குணத்தையும் பெற்றிருப்பவரே உங்களில் சிறந்தவர்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«خَيْرُكُمْ إِسْلَامًا أَحَاسِنُكُمْ أَخْلَاقًا، إِذَا فَقِهُوا»


Musnad-Ahmad-10022

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10022. மார்க்க அறிவோடு நற்குணத்தையும் பெற்றிருப்பவரே உங்களில் சிறந்தவர்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«خِيَارُكُمْ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا، إِذَا فَقِهُوا»


Musnad-Ahmad-16806

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

16806. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அறியாமைக்காலத்தில் விபச்சாரியாக இருந்த ஒரு பெண்ணை (எதிர்பாராத விதமாக) சந்தித்தார். உடனே அவளிடம் கை நீட்டி சீண்ட ஆரம்பித்தார். அதற்கு அந்தப் பெண் விட்டுவிடு! அல்லாஹ் இணைவைப்பை நீக்கி இஸ்லாத்தை கொண்டு வந்துள்ளான் என்று கூறினார்.

அதனால் அவர் அவளை விட்டுவிட்டு திரும்பிச் செல்ல ஆரம்பித்தார். செல்லும் போது பின்னால் அந்தப்பெண்ணை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார். அதனால் அவரின் முகம் சுவற்றில் மோதி இரத்தம் வடிய ஆரம்பித்தது. அந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு நலவை நாடிவிட்ட ஒரு அடியாராக நீ இருக்கிறாய் என்று கூறிவிட்டு, “ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய அல்லாஹ் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை மலைப்போன்ற அளவு நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أَنَّ رَجُلًا لَقِيَ امْرَأَةً كَانَتْ بَغِيًّا فِي الْجَاهِلِيَّةِ، فَجَعَلَ يُلَاعِبُهَا حَتَّى بَسَطَ يَدَهُ إِلَيْهَا، فَقَالَتِ الْمَرْأَةُ: مَهْ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ ذَهَبَ بِالشِّرْكِ – وَقَالَ عَفَّانُ مَرَّةً: ذَهَبَ بِالْجَاهِلِيَّةِ – وَجَاءَنَا بِالْإِسْلَامِ. فَوَلَّى الرَّجُلُ، فَأَصَابَ وَجْهَهُ الْحَائِطُ، فَشَجَّهُ، ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ، فَقَالَ: «أَنْتَ عَبْدٌ أَرَادَ اللَّهُ بِكَ خَيْرًا. إِذَا أَرَادَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ لَهُ عُقُوبَةَ ذَنْبِهِ، وَإِذَا أَرَادَ بِعَبْدٍ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ بِذَنْبِهِ حَتَّى يُوَافِى بِهِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ عَيْرٌ»


Musnad-Ahmad-25742

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25742. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்தபோது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை” என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்” என்று கூறினார்கள்.


دُعِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنَازَةِ غُلَامٍ مِنَ الْأَنْصَارِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ، لَمْ يُدْرِكِ الشَّرَّ، وَلَمْ يَعْمَلْهُ، قَالَ: أَوَ غَيْرُ ذَلِكَ يَا عَائِشَةُ «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ لِلْجَنَّةِ أَهْلًا، خَلَقَهَا لَهُمْ، وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ، وَخَلَقَ لِلنَّارِ أَهْلًا، خَلَقَهَا لَهُمْ، وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ»


Musnad-Ahmad-24132

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24132.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ صَبِيًّا لِلْأَنْصَارِ لَمْ يَبْلُغِ السِّنَّ عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ؟ قَالَ: «أَوْ غَيْرَ ذَلِكَ يَا عَائِشَةُ، خَلَقَ اللَّهُ الْجَنَّةَ، وَخَلَقَ لَهَا أَهْلًا، وَخَلَقَ النَّارَ، وَخَلَقَ لَهَا أَهْلًا، وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ»


Musnad-Ahmad-19109

ஹதீஸின் தரம்: More Info

19109. முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இறைத்தூதர் ஒருவர் இருப்பார் என (இறைவனால்) தீர்மானிக்கப்பட்டிருந்தால், நபி (ஸல்) அவர்களின் புதல்வர் (இப்ராஹீம் (ரலி) மரணித்திருக்கமாட்டார் என இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இஸ்மாயீல் இப்னு காலித் அல்பஜலீ (ரஹ்)


«لَوْ كَانَ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيٌّ مَا مَاتَ ابْنُهُ إِبْرَاهِيمُ»


Musnad-Ahmad-12102

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12102. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அதிகமாகத் தம் குடும்பத்தாரை நேசிக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குழந்தை) இப்ராஹீம் மதீனாவின் மேட்டுப் பாங்கான கிராமப்பகுதியில் பாலூட்டி வளர்க்கப்பட்டு வந்தார்.

(அங்கிருந்த குழந்தையைப் பார்ப்பதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செல்லும் போது அவர்களுடன் நாங்களும் செல்வோம். அவர்கள் வீட்டுக்குள் நுழைவார்கள். அப்போது வீட்டுக்குள் புகை மூட்டப்பட்டிருக்கும். குழந்தையின் பால்குடித் தந்தை (அபூசைஃப்) கொல்லராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கி முத்தமிட்டுவிட்டுத் திரும்புவார்கள்.

இதன் அறிவிப்பாளரான அம்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: குழந்தை இப்ராஹீம் இறந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்ராஹீம் என் புதல்வர். பால்குடிப் பருவத்திலேயே இறந்துவிட்டார். அவருக்கு அவரது பால்குடித் தவணையை முழுமையாக்கும் செவிலித் தாய்மார்கள் இருவர் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.


مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَرْحَمَ بِالْعِيَالِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِبْرَاهِيمُ مُسْتَرْضَعًا فِي عَوَالِي الْمَدِينَةِ، فَكَانَ يَنْطَلِقُ وَنَحْنُ مَعَهُ، فَيَدْخُلُ الْبَيْتَ وَإِنَّهُ لَيُدَّخَنُ، وَكَانَ ظِئْرُهُ قَيْنًا، فَيَأْخُذُهُ فَيُقَبِّلُهُ ثُمَّ يَرْجِعُ، قَالَ عَمْرٌو: فَلَمَّا تُوُفِّيَ إِبْرَاهِيمُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ إِبْرَاهِيمَ ابْنِي، وَإِنَّهُ مَاتَ فِي الثَّدْيِ، وَإِنَّ لَهُ ظِئْرَيْنِ يُكْمِلَانِ رَضَاعَهُ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-18705

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18705. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) பால்குடிமறவாத 16 மாத குழந்தையாக இருக்கும் போது மரணித்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள், இவருக்குச் சொர்க்கத்தில் இவரின் பால்குடியை நிறைவு செய்யும் பாலூட்டும் அன்னை உண்டு’ எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ ابْنٌ لَهُ، ابْنَ سِتَّةَ عَشَرَ شَهْرًا، وَهُوَ رَضِيعٌ. قَالَ: يَحْيَى أُرَاهُ إِبْرَاهِيمَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا يُتِمُّ رَضَاعَهُ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-18624

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18624. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) 16 மாத குழந்தையாக இருக்கும் போது மரணித்தார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்கள், அவரை ஜன்னத்துல் பகீஉ எனும் மையவாடியில் அடக்கம் செய்ய கூறினார்கள். இவருக்குச் சொர்க்கத்தில் இவரின் பால்குடியை  நிறைவு செய்யும் பாலூட்டும் அன்னை உண்டு’ எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


تُوُفِّيَ إِبْرَاهِيمُ ابْنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ابْنَ سِتَّةَ عَشَرَ شَهْرًا، فَقَالَ: «ادْفِنُوهُ بِالْبَقِيعِ، فَإِنَّ لَهُ مُرْضِعًا يُتِمُّ رَضَاعَهُ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-18551

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

18551. (நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) மரணித்தபோது) நபி (ஸல்) அவர்கள், ‘இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


 أَنَّهُ قَالَ فِي ابْنِهِ إِبْرَاهِيمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا يُرْضِعُهُ فِي الْجَنَّةِ»


Next Page » « Previous Page