Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-18550

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18550. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) 16 மாத குழந்தையாக இருக்கும் போது மரணித்தார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்கள், அவரை ஜன்னத்துல் பகீஉ எனும் மையவாடியில் அடக்கம் செய்ய உத்தவிட்டார்கள். இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு’ எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ ابْنُ سِتَّةَ عَشَرَ شَهْرًا، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يُدْفَنَ فِي الْبَقِيعِ وَقَالَ: «إِنَّ لَهُ مُرْضِعًا يُرْضِعُهُ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-18502

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18502. (நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) மரணித்தபோது) நபி (ஸல்) அவர்கள், ‘இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


«لِإِبْرَاهِيمَ مُرْضِعٌ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-18497

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

18497. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், 16 மாதத்தில் மரணித்த போது அவருக்கு  நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

மேலும், “இவருக்குச் சொர்க்கத்தில் இவரின் பால்குடியை நிறைவு செய்யும்  பாலூட்டும் அன்னை உண்டு; இவர் உண்மையாளர்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنِهِ إِبْرَاهِيمَ وَمَاتَ، وَهُوَ ابْنُ سِتَّةَ عَشَرَ شَهْرًا، وَقَالَ: «إِنَّ لَهُ فِي الْجَنَّةِ مَنْ تُتِمُّ رَضَاعَهُ وَهُوَ صِدِّيقٌ»


Musnad-Ahmad-18687

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18687. (நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) மரணித்தபோது) நபி (ஸல்) அவர்கள், ‘இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


أَنَّهُ قَالَ فِي ابْنِهِ إِبْرَاهِيمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-18664

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18664. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

(தம் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இவருக்குப் பாலூட்டக் கூடிய செவிலித் தாய் சொர்க்கத்தில் இருக்கிறார்’ என்றார்கள்.


لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-12358

ஹதீஸின் தரம்: More Info

12358. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், உயிரோடு இருந்திருந்தால் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்திருப்பார் என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இஸ்மாயீல் அஸ்ஸுத்தீ (ரஹ்)


«لَوْ عَاشَ إِبْرَاهِيمُ ابْنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَكَانَ صِدِّيقًا نَبِيًّا»


Musnad-Ahmad-13985

ஹதீஸின் தரம்: More Info

13985. இஸ்மாயீல் அஸ்ஸுத்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் தனது மகன் இப்ராஹீம், மரணித்த போது அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்களா? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ” எனக்குத் தெரியாது. இப்ராஹீம் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! அவர் உயிரோடு இருந்திருந்தால் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்திருப்பார் என்று பதிலளித்தார்கள்.

மேலும் இஸ்மாயீல் அஸ்ஸுத்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்:

நான், அனஸ் (ரலி) அவர்களிடம், நான் தொழுத பின் வலப்பக்கம் திரும்ப வேண்டுமா? அல்லது இடப்பக்கம் திரும்ப வேண்டுமா? என்றுக் கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (தொழுது முடித்த பின்) தமது வலப் பக்கம் திரும்புவதை பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

 


سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قُلْتُ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنِهِ إِبْرَاهِيمَ؟ قَالَ: «لَا أَدْرِي، رَحْمَةُ اللَّهِ عَلَى إِبْرَاهِيمَ، لَوْ عَاشَ كَانَ صِدِّيقًا نَبِيًّا»

قَالَ: قُلْتُ: كَيْفَ أَنْصَرِفُ إِذَا صَلَّيْتُ عَنْ يَمِينِي، أَوْ عَنْ يَسَارِي؟ قَالَ: «أَمَّا أَنَا فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ»


Musnad-Ahmad-26305

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

26305. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், 18 மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா ரலி)


«لَقَدْ تُوُفِّيَ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ وَهُوَ ابْنُ ثَمَانِيَةَ عَشَرَ شَهْرًا فَلَمْ يُصَلِّ عَلَيْهِ»


Musnad-Ahmad-9272

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9272. நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்தவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டபின் அவரின்) மண்ணறைக்குச் (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى قَبْرٍ»


Musnad-Ahmad-9037

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9037. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த “பெண்” அல்லது “ஆண்” ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். “அவர் இறந்துவிட்டார்” என அவர்களுக்கு கூறப்பட்டது. “நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு மக்கள் அது இரவு நேரம் (என்பதால் தங்களுக்கு தெரிவிக்கவில்லை) என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

 

அறிவிப்பாளர் ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) கூறினார்:

இந்த நேரத்தில் தான் “இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக்காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்தக் கருத்து வேறுஅறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது)


أَنَّ إِنْسَانًا كَانَ يَقُمُّ الْمَسْجِدَ أَسْوَدَ فمَاتَ – أَوْ مَاتَتْ – فَفَقَدَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا فَعَلَ الْإِنْسَانُ الَّذِي كَانَ يَقُمُّ الْمَسْجِدَ؟» ، قَالَ: فَقِيلَ لَهُ: مَاتَ، قَالَ: «فَهَلَّا آذَنْتُمُونِي بِهِ؟» فَقَالُوا: إِنَّهُ كَانَ لَيْلًا، قَالَ: «فَدُلُّونِي عَلَى قَبْرِهَا» ، قَالَ: فَأَتَى الْقَبْرَ، فَصَلَّى عَلَيْهَا

قَالَ ثَابِتٌ – عِنْدَ ذَاكَ، أَوْ فِي حَدِيثٍ آخَرَ -: «إِنَّ هَذِهِ الْقُبُورَ مَمْلُوءَةٌ ظُلْمَةً عَلَى أَهْلِهَا، وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُنَوِّرُهَا بِصَلَاتِي عَلَيْهِمْ»


Next Page » « Previous Page