தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-26486

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

(முஸ்னது அஹமது: 26486)

حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبْعٍ وَبِخَمْسٍ لَا يَفْصِلُ بَيْنَهُنَّ بِسَلَامٍ وَلَا بِكَلَامٍ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-25281.
Musnad-Ahmad-Shamila-26486.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-25891.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين مقسم بن بجرة وأم سلمة زوج النبي ، وباقي رجاله ثقات عدا مقسم بن بجرة وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45224-மிக்ஸம் பின் புஜ்ரா, உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லையென்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். நஸாயீ-1715 இலும் வேறு சில நூல்களிலும் விடுப்பட்ட அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) என்று இடம்பெற்றுள்ளது.

طعن فيه بانقطاعه
فتح الباري شرح صحيح البخاري لابن رجب: (6 / 188)

3 . இந்தக் கருத்தில் உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-26486 , 26641 , 26725 , இப்னு மாஜா-1192 , நஸாயீ-1714 , 1715 ,


இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் வழியாக சரியான ஹதீஸ்கள் உள்ளன.

பார்க்க : முஸ்லிம்-1341 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.