Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-4213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4213. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) பற்றித் தான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)


«أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فِي الدِّمَاءِ»


Musnad-Ahmad-4200

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4200. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) பற்றித் தான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)


«إِنَّ أَوَّلَ مَا يُحْكَمُ بَيْنَ الْعِبَادِ فِي الدِّمَاءِ»


Musnad-Ahmad-3674

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3674. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) பற்றித் தான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)


«أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فِي الدِّمَاءِ»


Musnad-Ahmad-475

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

475. யஸீத் பின் மவ்ஹப் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை)ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், நான் இருவருக்கும் கூட தீர்ப்பளிக்கும் பொறுப்பை ஏற்கமாட்டேன். இருவருக்கும் கூட இமாமாக ஆகமாட்டேன். “யார் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்டாரோ அவர் சிறந்த புகழிடத்தை பெற்றுக்கொண்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூற நீங்கள் கேட்டுள்ளீர்கள் அல்லவா? என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் ஆம், கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

இப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், நீங்கள் என்னை நீதிபதி பதவிக்கு நியமிப்பதைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறினார்கள்.

உடனே உஸ்மான் (ரலி) அவர்கள், காரணத்தை ஏற்று அவரை நியமிக்கவில்லை. மேலும், இந்த செய்தியை வேறு யாரிடமும் சொல்லாதீர்கள் என்றும் கூறினார்கள்.


أَنَّ عُثْمَانَ، قَالَ لِابْنِ عُمَرَ: اقْضِ بَيْنَ النَّاسِ، فَقَالَ: لَا أَقْضِي بَيْنَ اثْنَيْنِ وَلا أَؤُمُّ رَجُلَيْنِ، أَمَا سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ عَاذَ بِاللَّهِ فَقَدْ عَاذَ بِمَعَاذٍ» قَالَ عُثْمَانُ: بَلَى، قَالَ: فَإِنِّي أَعُوذُ بِاللَّهِ أَنْ تَسْتَعْمِلَنِي فَأَعْفَاهُ، وَقَالَ: لَا تُخْبِرْ بِهَذَا أَحَدًا


Musnad-Ahmad-8940

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

8940. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பயணத்தில் தனது ஒட்டகத்தை களைப்படையச் செய்வது போன்று, ஒரு இறைநம்பிக்கையாளர் தனது ஷைத்தான்களை (எதிர்த்துப் போராடி) களைப்படையச் செய்து விடுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ الْمُؤْمِنَ لَيُنْضِي شَيَاطِينَهُ، كَمَا يُنْضِي أَحَدُكُمْ بَعِيرَهُ فِي السَّفَرِ»


Musnad-Ahmad-27210

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

27210. “என் தந்தையே! (தாரிக் பின் அஷ்யம் (ரலி) நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி) யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?” என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் “அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்” என விடையளித்தார்.

அறிவிப்பவர் : அபூமாலிக் அஷ்ஜயீ (ரஹ்)


كَانَ أَبِي قَدْ «صَلَّى خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ سِتَّ عَشْرَةَ سَنَةً، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ» ، قَالَ: لَا أَيْ بُنَيَّ مُحْدَثٌ


Musnad-Ahmad-27209

ஹதீஸின் தரம்: More Info

27209. “என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி) யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?” என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் “அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்” என விடையளித்தார்.

அறிவிப்பவர் : அபூ மாலிக் அஷ்ஜயீ


كَانَ أَبِي قَدْ «صَلَّى خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ سِتَّ عَشْرَةَ سَنَةً، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ» ، فَقُلْتُ لَهُ: أَكَانُوا يَقْنُتُونَ؟ قَالَ: لَا أَيْ بُنَيَّ مُحْدَثٌ


Musnad-Ahmad-18652

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18652. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையிலும் மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதிவந்தார்கள்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْنُتْ فِي الصُّبْحِ وَالْمَغْرِبِ»

قَالَ: شُعْبَةُ مِثْلَهُ


Musnad-Ahmad-18661

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18661. நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆசிப் (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ فِي الْفَجْرِ»


Musnad-Ahmad-18520

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18520. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும், மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆசிப் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَنَتَ فِي الصُّبْحِ، وَفِي الْمَغْرِبِ»


Next Page » « Previous Page