Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-18470

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18470. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையிலும் மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதிவந்தார்கள்.


«أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَقْنُتُ فِي صَلَاةِ الصُّبْحِ، وَالْمَغْرِبِ»


Musnad-Ahmad-12657

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12657. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தினமும்) சுப்ஹுத் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«مَا زَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْنُتُ فِي الْفَجْرِ حَتَّى فَارَقَ الدُّنْيَا»


Musnad-Ahmad-23606

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23606. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஏற்றுக் கொண்டு, உங்கள் தோல்களும், முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணிந்து, அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுத்து, உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடி, அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்கள் : அபூ ஹுமைத் (ரலி), அபூ உஸைத் (ரலி)


«إِذَا سَمِعْتُمُ الْحَدِيثَ عَنِّي تَعْرِفُهُ قُلُوبُكُمْ، وَتَلِينُ لَهُ أَشْعَارُكُمْ وَأَبْشَارُكُمْ، وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ قَرِيبٌ فَأَنَا أَوْلَاكُمْ بِهِ، وَإِذَا سَمِعْتُمُ الْحَدِيثَ عَنِّي تُنْكِرُهُ قُلُوبُكُمْ، وَتَنْفِرُ مِنْهُ أَشْعَارُكُمْ وَأَبْشَارُكُمْ، وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ بَعِيدٌ، فَأَنَا أَبْعَدُكُمْ مِنْهُ» وَشَكَّ فِيهِمَا عُبَيْدُ بْنُ أَبِي قُرَّةَ فَقَالَ: عَنْ أَبِي حُمَيْدٍ، أَوْ أَبِي أُسَيْدٍ، وَقَالَ: «تَرَوْنَ أَنَّكُمْ مِنْهُ قَرِيبٌ» وَشَكَّ أَبُو سَعِيدٍ فِي أَحَدِهِمَا فِي «إِذَا سَمِعْتُمُ الْحَدِيثَ عَنِّي»


Musnad-Ahmad-1072

ஹதீஸின் தரம்: More Info

1072. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர் : அலீ (ரலி)


«مِفْتَاحُ الصَّلاةِ الْوُضُوءُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»


Musnad-Ahmad-1006

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1006. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையின் திறவுகோல் உளூ எனும் அங்கத் தூய்மையாகும். (தொழுகையில் இல்லாத ஏனைய செயல்களை) தடையாக ஆக்குவது (அல்லாஹு அக்பர் எனக் கூறும்) முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) அனுமதிப்பது, (தொழுகையை நிறைவு செய்ய கொடுக்கும்) ஸலாம் ஆகும்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


«مِفْتَاحُ الصَّلاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»


Musnad-Ahmad-23121

ஹதீஸின் தரம்: Pending

23121. நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடன் ஒருவர் எழுந்து தொழ ஆரம்பித்தார். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அவரிடம் (சென்று) அமர்வீராக. வேதக்காரர்கள் தங்களுடைய தொழுகைகளுக்கு இடையே பிரிவின்றி அவற்றை (சோந்தாற்போல்) நிறைவேற்றியதால் தான் அழிந்து போனார்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் சரியாகச் சொன்னார் என்று கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الْعَصْرَ فَقَامَ رَجُلٌ يُصَلِّي، فَرَآهُ عُمَرُ فَقَالَ لَهُ: اجْلِسْ، فَإِنَّمَا هَلَكَ أَهْلُ الْكِتَابِ أَنَّهُ لَمْ يَكُنْ لِصَلَاتِهِمْ فَصْلٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْسَنَ ابْنُ الْخَطَّابِ»


Musnad-Ahmad-7125

ஹதீஸின் தரம்: Pending

7125. அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப் பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும்தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«إِذَا كَانَتِ الدَّابَّةُ مَرْهُونَةً، فَعَلَى الْمُرْتَهِنِ عَلَفُهَا، وَلَبَنُ الدَّرِّ يُشْرَبُ، وَعَلَى الَّذِي يَشْرَبُهُ نَفَقَتُهُ، وَيَرْكَبُ»


Musnad-Ahmad-22414

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22414. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையை) நிலைநாட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! உங்களுடைய நல்லறங்களில் மிகவும் சிறந்தது தொழுகைதான். முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


«اسْتَقِيمُوا تُفْلِحُوا، وَخَيْرُ أَعْمَالِكُمُ الصَّلَاةُ، وَلَنْ يُحَافِظَ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ» وَقَالَ عِصَامٌ: «وَلَا يُحَافِظُ»


Musnad-Ahmad-11538

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11538. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து நபர்களைத் தவிர வேறு எந்த செல்வந்தருக்கும் ஸகாத் பொருள் ஆகுமானதல்ல. (அவர்கள் யாரென்றால்)

  1. ஸகாத்தை வசூல் செய்யக் கூடியவர்.
  2. தன்னுடைய செல்வத்தைக் கொண்டு ஸகாத் பொருளை விலைக்கு வாங்கியவர்.
  3. கடன் பட்டவர்.
  4. அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்.
  5. ஏழைஒருவருக்கு வழங்கப்பட்ட ஸகாத் பொருளை அந்த ஏழையிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற செல்வந்தர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا لِخَمْسَةٍ: لِعَامِلٍ عَلَيْهَا، أَوْ رَجُلٍ اشْتَرَاهَا بِمَالِهِ، أَوْ غَارِمٍ، أَوْ غَازٍ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ مِسْكِينٍ تُصُدِّقَ عَلَيْهِ مِنْهَا، فَأَهْدَى مِنْهَا لِغَنِيٍّ


Musnad-Ahmad-17972

ஹதீஸின் தரம்: Pending

17972. …இரண்டு மனிதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தர்மப் பொருளிலிருந்து கேட்டு வந்தனர். நபியவர்கள் அந்த இருவரின் மீதும் பார்வையை (மேலும் கீழுமாகப்) பார்த்தார்கள். அந்த இருவரையும் திடகாத்திரமானவர்களாகக் கண்டார்கள். பிறகு நீங்கள் இருவரும் விரும்பினால் உங்களுக்கு நான் வழங்குகிறேன். ஆனால் இதில் செல்வந்தருக்கும், சம்பாதிக்கும் வலிமை பெற்றவருக்கும் எந்த பாத்தியதையும் கிடையாது என்று கூறினார்கள்…


أَنَّهُمَا أَتَيَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلَانِهِ مِنَ الصَّدَقَةِ، فَقَلَّبَ فِيهِمَا الْبَصَرَ، وَرَآهُمَا جَلْدَيْنِ، فَقَالَ: «إِنْ شِئْتُمَا أَعْطَيْتُكُمَا، وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ، وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ»


Next Page » « Previous Page