Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-19600

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19600. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளருடன் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ கொண்டு வந்து பிறகு இறைநம்பிக்கையாளரிடம் அவரை ஒப்படைத்து, “இவர்தான் உனக்கு பதிலாக நரகில் இருப்பார்” என்று சொல்லப்படும்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அபூபுர்தா (ரஹ்) கூறுகிறார்:

இந்த செய்தியை நான் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், வணக்கத்திற்குரியவன் யாரைத் தவிர வேறு யாருமில்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதை உம்முடைய தந்தை (அபூமூஸா (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக உம்மிடம் கூறினார்களா?” என்று மூன்று முறை கேட்டார்கள். நான், அவ்வாறே சத்தியமிட்டுக் கூறினேன். அதனால் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.


إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ لَمْ يَبْقَ مُؤْمِنٌ إِلَّا أُتِيَ بِيَهُودِيٍّ أَوْ نَصْرَانِيٍّ حَتَّى يُدْفَعَ إِلَيْهِ. يُقَالُ لَهُ: هَذَا فِدَاؤُكَ مِنَ النَّارِ “

قَالَ أَبُو بُرْدَةَ فَاسْتَحْلَفَنِي عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ: أَسَمِعْتَ أَبَا مُوسَى يَذْكُرُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ. فَسُرَّ بِذَلِكَ عُمَرُ


Musnad-Ahmad-19560

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19560. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்:

இதை அபூபுர்தா (ரஹ்) அவர்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், “எவனைத் தவிர வேறு இறைவனில்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீது சத்தியமாக! இதை உம்முடைய தந்தை (அபூமூசா (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக உம்மிடம் கூறினார்களா?” என்று மூன்று முறை கேட்டார்கள். அபூபுர்தா (ரஹ்) அவர்கள், அவ்வாறே சத்தியமிட்டுக் கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகினார்:

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அபூபுர்தா (ரஹ்) அவர்களைச் சத்தியமிட்டுக் கூறச் சொன்னதாக ஸயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் என்னிடம் அறிவிக்கவில்லை. ஆனால், அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அவ்வாறு அறிவித்தபோது, அதற்கு ஸயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை.


«لَا يَمُوتُ رَجُلٌ مُسْلِمٌ إِلَّا أَدْخَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ مَكَانَهُ النَّارَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا»

قَالَ: فَاسْتَحْلَفَهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ ثَلَاثَ مَرَّاتٍ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: فَحَلَفَ لَهُ.

قَالَ: فَلَمْ يُحَدِّثْنِي سَعِيدٌ أَنَّهُ اسْتَحْلَفَهُ، وَلَمْ يُنْكِرْ عَلَى عَوْنٍ قَوْلَهُ


Musnad-Ahmad-19486

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19486. (இந்த செய்தியின் தொடர்ச்சி பார்க்க: அஹ்மத்-19485 ) இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அபூபுர்தா (ரஹ்) அவர்களைச் சத்தியமிட்டுக் கூறச் சொன்னதாக ஸயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் என்னிடம் அறிவிக்கவில்லை. ஆனால், அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அவ்வாறு அறிவித்தபோது, அதற்கு ஸயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை.


أَنَّهُمَا شَهِدَا أَبَا بُرْدَةَ يُحَدِّثُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ بِهَذَا الْحَدِيثِ، قَالَ عَوْنٌ: فَاسْتَحْلَفَهُ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ سَعِيدٌ عَلَى عَوْنٍ أَنَّهُ اسْتَحْلَفَهُ


Musnad-Ahmad-19485

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்.

19485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«لَا يَمُوتُ مُسْلِمٌ، إِلَّا أَدْخَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ مَكَانَهُ النَّارَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا»


Musnad-Ahmad-7815

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7815. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தமது கையை மூன்று முறை கழுவாமல் உளூச் செய்யும் பாத்திரத்திற்குள் இட வேண்டாம். ஏனெனில், இரவில் அவரது கை எங்கே இருந்தது என்பதை அவர் அறியமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي إِنَائِهِ – أَوْ قَالَ: فِي وَضُوئِهِ – حَتَّى يَغْسِلَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ


Musnad-Ahmad-9238

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9238.


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ، فَلْيُفْرِغْ عَلَى يَدَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا فِي الْإِنَاءِ، فَإِنَّهُ لَا يَدْرِي فِيمَ بَاتَتْ يَدُهُ»


Musnad-Ahmad-10497

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10497.


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ فَلَا يَضَعَنَّ يَدَهُ فِي الْغِسْلِ حَتَّى يَغْسِلَهَا، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»


Musnad-Ahmad-8586

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8586. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் (உளூச் செய்யும் பாத்திரத்திற்குள் கையை விடுவதற்கு முன்) மூன்று முறை கழுவிக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلْيُفْرِغْ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ ثَلَاثَ مَرَّاتٍ»


Musnad-Ahmad-8965

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8965. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் (உளூச் செய்யும் பாத்திரத்திற்குள் கையை விடுவதற்கு முன்) மூன்று முறை கழுவிக் கொள்ளட்டும். ஏனெனில், இரவில் அவரது கை எங்கே இருந்தது என்பதை அவர் அறியமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

….

 


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيُفْرِغْ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»

فَقَالَ قَيْسٌ الْأَشْجَعِيُّ: يَا أَبَا هُرَيْرَةَ، فَكَيْفَ إِذَا جَاءَ مِهْرَاسُكُمْ؟ قَالَ: «أَعُوذُ بِاللَّهِ مِنْ شَرِّكَ يَا قَيْسُ»


Musnad-Ahmad-10091

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10091. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (இரவில் உறங்கி) விழித்தெழுந்தால் மூன்று முறை (கைகளில் தண்ணீர் ‎ஊற்றிக்) கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம். ஏனெனில் இரவில் ‎அவரது கை எங்கெங்கு பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»


Next Page » « Previous Page