Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-946

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

946. முஹம்மத் பின் அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் ‘அஸ்ஸுக்யா’ எனும் இடத்தில் அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் தம்முடைய இளம் ஒட்டகங்களுக்கு மாவையும் இலைகளையும் கலந்து தீவனம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.

மிக்தாத் (ரலி) அவர்கள், “இதோ உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வதற்கு (ஹஜ்ஜுத் தமத்துஃக்கும், கிரானுக்கும்) தடை விதிக்கிறார்கள்” என்று கூறினார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் தமது கைகளில் ஒட்டியிருந்த மாவு மற்றும் இலைகளின் துகள்களுடன் அங்கிருந்து புறப்பட்டார்கள். (அறிவிப்பாளர் கூறுகிறார்: அலீ (ரலி) அவர்களின் கைகளில் இருந்த அந்த மாவு மற்றும் இலைகளின் அடையாளத்தை நான் இப்போதும் மறக்கவில்லை).

அலீ (ரலி) அவர்கள், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் சென்று, “ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வதற்கு நீங்களா தடை விதிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “அது எனது கருத்து” என்று கூறினார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் கோபத்துடன் வெளியேறி, “லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் பிஹஜ்ஜதின் வ உம்ரதின் மஅன்” (இறைவா! உனது அழைப்பை ஏற்று இதோ ஹஜ் மற்றும் உம்ராவைச் சேர்த்துச்

أَنَّ الْمِقْدَادَ بْنَ الأَسْوَدِ دَخَلَ عَلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ بِالسُّقْيَا، وَهُوَ يَنْجَعُ بَكَرَاتٍ لَهُ دَقِيقًا وَخَبَطًا، فَقَالَ: هَذَا عُثْمَانُ بْنُ عَفَّانَ يَنْهَى عَن أَنْ يُقْرَنَ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ، فَخَرَجَ عَلِيٌّ، وَعَلَى يَدَيْهِ أَثَرُ الدَّقِيقِ وَالْخَبَطِ، فَمَا أَنْسَى أَثَرَ الدَّقِيقِ وَالْخَبَطِ عَلَى ذِرَاعَيْهِ، حَتَّى دَخَلَ عَلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَقَالَ: أَنْتَ تَنْهَى عَن أَنْ يُقْرَنَ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ؟ فَقَالَ عُثْمَانُ: ذَلِكَ رَأْيِي، فَخَرَجَ عَلِيٌّ مُغْضَبًا، وَهُوَ يَقُولُ: لَبَّيْكَ اللهُمَّ لَبَّيْكَ بِحَجَّةٍ وَعُمْرَةٍ مَعًا.


Muwatta-Malik-2542

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2542. மாலிக் இமாம் கூறுகிறார்:

“(கால்நடைகளை முன்னால் இருந்து) இழுத்துச் செல்பவர், பின்னால் இருந்து ஓட்டிச் செல்பவர், அதன் மீது ஏறிச் செல்பவர் ஆகிய அனைவரும் அந்த விலங்கு (மற்றவர்களுக்கு) ஏற்படுத்தும் சேதங்களுக்குப் பொறுப்பாளிகளாவர். (அதாவது அதற்கான நட்டஈட்டை அவர்கள் வழங்க வேண்டும்).

ஆனால், அந்த விலங்கு தூண்டப்படாத நிலையில், தானாகவே தனது கால்களால் உதைத்து அதனால் சேதம் ஏற்பட்டால் அதற்கு நட்டஈடு கிடையாது.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், குதிரையை வேகமாக ஓட்டிச் சென்ற ஒருவருக்கு ‘அக்ல்-இழப்பீடு, இரத்தப்பணம்) வழங்குமாறு தீர்ப்பளித்துள்ளார்கள்.


மேலும் மாலிக் இமாம் கூறுகிறார்:

“குதிரையை கால்நடையாக நடத்திச் செல்பவரை விட அதை முன்னால் இருந்து வேகமாக இழுத்துச் செல்பவர், அதன் மீது ஏறிச் செல்பவர், அதை பின்னால் இருந்து வேகமாக ஓட்டிச் செல்பவர் ஆகியோர் (அவற்றால் ஏற்படும் சேதங்களுக்கு) அபராதம்-நட்டஈடு செலுத்த அதிகத் தகுதியுடையவர்கள்.


الْقَائِدُ وَالسَّائِقُ وَالرَّاكِبُ كُلُّهُمْ ضَامِنٌ لِمَا أَصَابَتِ الدَّابَّةُ، إِلاَّ أَنْ تَرْمَحَ الدَّابَّةُ مِنْ غَيْرِ أَنْ يُفْعَلَ بِهَا شَيْءٌ تَرْمَحُ لَهُ، وَقَدْ قَضَى عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي الَّذِي أَجْرَى فَرَسَهُ بِالْعَقْلِ.
قَالَ مَالِكٌ: فَالْقَائِدُ وَالرَّاكِبُ وَالسَّائِقُ أَحْرَى أَنْ يَغْرَمُوا مِنَ الَّذِي أَجْرَى فَرَسَهُ.


Muwatta-Malik-2541

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

நட்ட ஈடு-இழப்பீடு வழங்குதல்

2541. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கால்நடைகளால் ஏற்படும் காயங்களுக்கு இழப்பீடு கிடையாது;

(பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் தவறி விழுந்தால்) கிணறு (மற்றும்) சுரங்கங்களுக்கு இழப்பீடு கிடையாது;

புதையல்களில் ஐந்தில் ஒரு பங்கு (அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி) உண்டு.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


மாலிக் இமாம் கூறுகிறார்:

‘ஜுபார்’ (جبار) என்பதன் விளக்கம் என்னவென்றால், அதில் நட்டஈடு (தியத்) ஏதுமில்லை என்பதாகும்.


جَرْحُ الْعَجْمَاءِ جُبَارٌ، وَالْبِئْرُ جُبَارٌ، وَالْمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الْخُمُسُ.
قَالَ مَالِكٌ: وَتَفْسِيرُ الْجُبَارِ، أَنَّهُ لاَ دِيَةَ فِيهِ.


Muwatta-Malik-611

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

611. இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையில் (அல்-ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓத மாட்டார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)


أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ لاَ يَقْرَأُ فِي الصَّلاَةِ عَلَى الْجَنَازَةِ.


Muwatta-Malik-951

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

951. முஹம்மத் பின் அபூபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது அனஸ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடன் நீங்கள் எவ்வாறு தல்பியா கூறிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “தல்பியா” சொல்பவர் தல்பியா சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்பட வில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை” என்று பதிலளித்தார்கள்.


أَنَّهُ سَأَلَ أَنَسَ بْنَ مَالِكٍ وَهُمَا غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَةَ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا الْيَوْمِ مَعَ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ؟ قَالَ: كَانَ يُهِلُّ الْمُهِلُّ مِنَّا فَلاَ يُنْكَرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ الْمُكَبِّرُ فَلاَ يُنْكَرُ عَلَيْهِ.


Muwatta-Malik-1202

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1202.


الأَمْرُ عِنْدَنَا، أَنَّ التَّكْبِيرَ فِي أَيَّامِ التَّشْرِيقِ دُبُرَ الصَّلَوَاتِ، وَأَوَّلُ ذَلِكَ تَكْبِيرُ الإِمَامِ وَالنَّاسُ مَعَهُ، دُبُرَ صَلاَةِ الظُّهْرِ مِنْ يَوْمِ النَّحْرِ، وَآخِرُ ذَلِكَ تَكْبِيرُ الإِمَامِ وَالنَّاسُ مَعَهُ، دُبُرَ صَلاَةِ الصُّبْحِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ، ثُمَّ يَقْطَعُ التَّكْبِيرَ.


Muwatta-Malik-1201

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1201.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ الْغَدَ مِنْ يَوْمِ النَّحْرِ حِينَ ارْتَفَعَ النَّهَارُ شَيْئًا، فَكَبَّرَ، فَكَبَّرَ النَّاسُ بِتَكْبِيرِهِ، ثُمَّ خَرَجَ الثَّانِيَةَ مِنْ يَوْمِهِ ذَلِكَ بَعْدَ ارْتِفَاعِ النَّهَارِ، فَكَبَّرَ، فَكَبَّرَ النَّاسُ بِتَكْبِيرِهِ، ثُمَّ خَرَجَ الثَّالِثَةَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، فَكَبَّرَ، فَكَبَّرَ النَّاسُ بِتَكْبِيرِهِ، حَتَّى يَتَّصِلَ التَّكْبِيرُ، وَيَبْلُغَ الْبَيْتَ، فَيُعْلَمَ أَنَّ عُمَرَ قَدْ خَرَجَ يَرْمِي.


Muwatta-Malik-2706

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2706.


أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، قَالَ: فَأَرْسَلَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ رَسُولاً، قَالَ عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرٍ: حَسِبْتُ أَنَّهُ قَالَ وَالنَّاسُ فِي مَقِيلِهِمْ: لاَ تَبْقَيَنَّ فِي رَقَبَةِ بَعِيرٍ قِلاَدَةٌ مِنْ وَتَرٍ، أَوْ قِلاَدَةٌ، إِلاَّ قُطِعَتْ.

قَالَ يَحيَى: سَمِعْتُ مُالكا يَقُولُ: أَرَى ذَلِكَ مِنَ الْعَيْنِ.


Muwatta-Malik-987

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

987.


الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ.


Muwatta-Malik-2673

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2673. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கொடுக்க ஏதும் இல்லாவிட்டால் குறைந்த பட்சம் கால்நடைப் பிராணிகளின்) கரிந்த கால்குளம்பே இருந்தாலும் அதைக் கொடுத்தேனும் ஏழையைத் திருப்பி அனுப்புங்கள்.

அறிவிப்பவர்: உம்மு புஜைத் (ரலி)


رُدُّوا الْمِسْكِينَ وَلَوْ بِظِلْفٍ مُحْرَقٍ.


Next Page »