Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-1291

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1291.


أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ رَأَى فِي بَعْضِ مَغَازِيهِ امْرَأَةً مَقْتُولَةً، فَأَنْكَرَ ذَلِكَ، وَنَهَى عَن قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ.


Muwatta-Malik-1292

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1292. யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நோக்கிப் படைகளை அனுப்பி வைத்தபோது, யஸீத் பின் அபூஸுஃப்யான் அவர்களுடன் நடந்து சென்றார்கள். யஸீத் (ரலி) அவர்கள் அந்தப் படைகளின் ஒரு பகுதிக்குத் தலைவராக இருந்தார்கள்.

அப்பொழுது யஸீத் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “ஒன்று நீங்கள் சவாரி செய்யுங்கள், இல்லையேல் நான் (சவாரியிலிருந்து) இறங்கிக் கொள்கிறேன்” என்று சொன்னார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “நீர் இறங்க வேண்டியதில்லை, நானும் சவாரி செய்யப் போவதில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் நான் எடுத்து வைக்கும் இந்த அடிகள் மூலம் நற்கூலியை நாடி நான் நடக்கிறேன்” என்று கூறினார்கள்.

பின்னர் (அபூபக்ர்-ரலி அவர்கள்) யஸீத் (ரலி) அவர்களிடம், “நீங்கள் சில கூட்டத்தாரைச் சந்திப்பீர்கள். அவர்கள் தங்களை அல்லாஹ்வுக்காகவே (வணக்கத்தில்) ஈடுபடுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அவர்கள் தங்களை எதற்காக ஈடுபடுத்திக் கொண்டதாகக் கருதுகிறார்களோ, அதற்காக அவர்களை விட்டுவிடுங்கள்.

மேலும், சில கூட்டத்தாரைச் சந்திப்பீர்கள். அவர்கள் தங்கள் தலையின் நடுப்பகுதியிலுள்ள முடிகளைச் சுத்தமாக நீக்கியிருப்பார்கள். அவர்கள் நீக்கிய அந்தப் பகுதியை வாளால் வெட்டுங்கள்.

أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ بَعَثَ جُيُوشًا إِلَى الشَّامِ، فَخَرَجَ يَمْشِي مَعَ يَزِيدَ بْنِ أَبِي سُفْيَانَ، وَكَانَ أَمِيرَ رُبْعٍ مِنْ تِلْكَ الأَرْبَاعِ، فَزَعَمُوا أَنَّ يَزِيدَ قَالَ لأَبِي بَكْرٍ: إِمَّا أَنْ تَرْكَبَ، وَإِمَّا أَنْ أَنْزِلَ، فَقَالَ أَبُو بَكْرٍ: مَا أَنْتَ بِنَازِلٍ، وَمَا أَنَا بِرَاكِبٍ، إِنِّي أَحْتَسِبُ خُطَايَ هَذِهِ فِي سَبِيلِ اللهِ، ثُمَّ قَالَ لَهُ: إِنَّكَ سَتَجِدُ قَوْمًا زَعَمُوا أَنَّهُمْ حَبَّسُوا أَنْفُسَهُمْ لِلَّهِ، فَذَرْهُمْ وَمَا زَعَمُوا أَنَّهُمْ حَبَّسُوا أَنْفُسَهُمْ لَهُ، وَسَتَجِدُ قَوْمًا فَحَصُوا عَن أَوْسَاطِ رُؤُوسِهِمْ مِنَ الشَّعَرِ، فَاضْرِبْ مَا فَحَصُوا عَنهُ بِالسَّيْفِ، وَإِنِّي مُوصِيكَ بِعَشْرٍ: لاَ تَقْتُلَنَّ امْرَأَةً، وَلاَ صَبِيًّا، وَلاَ كَبِيرًا هَرِمًا، وَلاَ تَقْطَعَنَّ شَجَرًا مُثْمِرًا، وَلاَ تُخَرِّبَنَّ عَامِرًا، وَلاَ تَعْقِرَنَّ شَاةً، وَلاَ بَعِيرًا، إِلاَّ لِمَأْكَلَةٍ، وَلاَ تَحْرِقَنَّ نَحْلاً، وَلاَ تُغَرِّقَنَّهُ، وَلاَ تَغْلُلْ، وَلاَ تَجْبُنْ.


Muwatta-Malik-1220

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1220.


أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَرْخَصَ لِرِعَاءِ الإِبِلِ فِي الْبَيْتُوتَةِ عَن مِنًى، يَرْمُونَ يَوْمَ النَّحْرِ، ثُمَّ يَرْمُونَ الْغَدَ، وَمِنْ بَعْدِ الْغَدِ لِيَوْمَيْنِ، ثُمَّ يَرْمُونَ يَوْمَ النَّفْرِ.


Muwatta-Malik-2698

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2698. வஹ்ப் இப்னு கைசான் அபீ நுஐம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உணவொன்று கொண்டுவரப்பட்டது. அவர்களுடன் (அவர்களின் வளர்ப்பு மகன்) உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்’ என்று கூறினார்கள்.


أُتِيَ رَسُولُ اللَّهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ بِطَعَامٍ، وَمَعَهُ رَبِيبُهُ عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: سَمِّ اللهَ، وَكُلْ مِمَّا يَلِيكَ.


Muwatta-Malik-2744

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2744.


دَخَلْتُ مَسْجِدَ دِمَشْقَ، فَإِذَا فَتًى شَابٌّ بَرَّاقُ الثَّنَايَا، وَإِذَا النَّاسُ مَعَهُ، إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَسْنَدُوا إِلَيْهِ، وَصَدَرُوا عَن قَوْلِهِ، فَسَأَلْتُ عَنهُ، فَقِيلَ: هَذَا مُعَاذُ بْنُ جَبَلٍ، فَلَمَّا كَانَ الْغَدُ، هَجَّرْتُ، فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي بِالتَّهْجِيرِ، وَوَجَدْتُهُ يُصَلِّي، قَالَ: فَانْتَظَرْتُهُ حَتَّى قَضَى صَلاَتَهُ، ثُمَّ جِئْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ، ثُمَّ قُلْتُ: وَاللَّهِ إِنِّي لأُحِبُّكَ لِلَّهِ، فَقَالَ: آللَّهِ؟ فَقُلْتُ: آللَّهِ، فَقَالَ: آللَّهِ؟ فَقُلْتُ: آللَّهِ، فَقَالَ: آللَّهِ؟ فَقُلْتُ: آللَّهِ، قَالَ: فَأَخَذَ بِحُبْوَةِ رِدَائِي، فَجَبَذَنِي إِلَيْهِ، وَقَالَ: أَبْشِرْ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ يَقُولُ: قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: وَجَبَتْ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ، وَالْمُتَجَالِسِينَ فِيَّ، وَالْمُتَزَاوِرِينَ فِيَّ، وَالْمُتَبَاذِلِينَ فِيَّ.


Muwatta-Malik-457

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

457. ஸஃது இப்னு உபாதா (ரலி) அவர்களது வீட்டில் இருந்த எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே! உங்கள் மீது ஸலவாத் கூறும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவோம் என்று அவர்களிடம் பஷீர் இப்னு ஸஃது (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் இதைக் கேட்டிருக்கக் கூடாது என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். பின்பு அவர்கள், ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம ஃபில் ஆலமீன், இன்னக்க ஹமீதுன் மஜீத்””, என்று கூறுங்கள். ஸலாம் கூறுவது, நீங்கள் அறிந்தது போல் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமஸ்ஊத் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَتَانَا رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فِي مَجْلِسِ سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ لَهُ بَشِيرُ بْنُ سَعْدٍ: أَمَرَنَا اللهُ أَنْ نُصَلِّيَ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: فَسَكَتَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، حَتَّى تَمَنَّيْنَا أَنَّهُ لَمْ يَسْأَلْهُ، ثُمَّ قَالَ: قُولُوا: اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَالسَّلاَمُ كَمَا قَدْ عَلِمْتُمْ.


Muwatta-Malik-456

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 107

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவது

456. இறைத்தூதர்(ஸல்) அவர்களே! (தொழும் போது) நாங்கள் உங்கள் மீது ஸலவாத் கூறுவது எப்படி? என நபித்தோழர்கள் கேட்டார்கள். ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி, வ துர்ரியாத்திஹி, கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி. வ துர்ரியத்திஹி கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்”” என்று கூறுங்கள் என்று கூறினார்கள்.


أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللهِ، كَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ فَقَالَ: قُولُوا: اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَأَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَأَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.


Muwatta-Malik-2743

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2743. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!’ என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

ஒரு அடியானை அல்லாஹ் வெறுக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை வெறுக்கிறான். எனவே, நீங்களும் அவரை வெறுங்கள்!’ என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘அல்லாஹ் இன்னாரை வெறுக்கிறான்; நீங்களும் அவரை வெறுங்கள்!’ என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை வெறுப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அந்நிலை ஏற்படுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

மாலிக் அவர்கள், “ஒரு அடியானை அல்லாஹ் வெறுக்கும் பொழுது” என்ற வாசகத்திற்கு முதல் பகுதியில் உள்ளது போன்றே ஸுஹைல் பின் அபூஸாலிஹ் கூறினார் என்று கருதுகிறேன் என்று கூறுகிறார்.


إِذَا أَحَبَّ اللهُ الْعَبْدَ، قَالَ لِجِبْرِيلَ: قَدْ أَحْبَبْتُ فُلاَنًا، فَأَحِبَّهُ، فَيُحِبُّهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي فِي أَهْلِ السَّمَاءِ: إِنَّ اللهَ قَدْ أَحَبَّ فُلاَنًا، فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الأَرْضِ، وَإِذَا أَبْغَضَ اللهُ الْعَبْدَ.


Muwatta-Malik-2803

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2803. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ، تُسَافِرُ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ، إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ مِنْهَا.


Next Page » « Previous Page