Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-411

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

411. தன் மகன் உபைதுல்லா பயணத்தின் போதும் நபில் தொழுததைக் கண்ட அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஏதும் ஆட்சேபணை செய்யவில்லை என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «كَانَ يَرَى ابْنَهُ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ يَتَنَفَّلُ فِي السَّفَرِ فَلَا يُنْكِرُ عَلَيْهِ»


muwatta-malik-409

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

409. காஸிம் இப்னு முஹம்மத், உர்வா இப்னு சுபைர், அபூபக்கர் இப்னு அப்துர் ரஹ்மான் ஆகியோர் பயணத்தில் நபில் தொழுவார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ وَعُرْوَةَ بْنَ الزُّبَيْرِ وَأَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ كَانُوا: «يَتَنَفَّلُونَ فِي السَّفَرِ»


muwatta-malik-408

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 92

பயணத்தில் இரவும் பகலும் நபில் தொழுதல், வாகனத்தில் தொழுதல்

408. அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் பயணத்தில் பர்லுத் தொழுகைக்கு முன்போ பின்போ எதையும் தொழ மாட்டார்கள். ஆனால் இரவின் நடுப் பகுதியிலோ அவர்கள் தரை மீதும் தொழுவார்கள். வாகனத்தின் மீதும் அது செல்லும் திசை நோக்கித் தொழுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّهُ «لَمْ يَكُنْ يُصَلِّي مَعَ صَلَاةِ الْفَرِيضَةِ فِي السَّفَرِ شَيْئًا، قَبْلَهَا وَلَا بَعْدَهَا، إِلَّا مِنْ جَوْفِ اللَّيْلِ، فَإِنَّهُ كَانَ يُصَلِّي عَلَى الْأَرْضِ وَعَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ»


muwatta-malik-407

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

407. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள், அப்துல்லா இப்னு ஸஃப்வான்(ரலி) அவர்களை நோய் விசாரிக்க வந்தார்கள். அது சமயம் எங்களுக்கு (நான்கு ரக்அத்தில்) இரண்டு ரக்அத்தை தொழ வைத்ததும் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். நாங்கள் எழுந்து (மற்ற ரக்அத்களைப் ) பூர்த்தி செய்தோம் என அப்துல்லா இப்னு ஸஃப்வான்(ரலி) அவர்களின் மகன் ஸஃப்வான் கூறுகின்றார்கள்.


جَاءَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَعُودُ عَبْدَ اللَّهِ بْنَ صَفْوَانَ «فَصَلَّى لَنَا رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ فَقُمْنَا فَأَتْمَمْنَا»


muwatta-malik-406

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

406. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் மினாவில் இமாமுக்குப் பின்னே நான்கு ரக்அத் களாக தொழுவார்கள். அதையே தனித்துத் தொழுதால் இரண்டு ரக்அத்தாக தொழுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يُصَلِّي وَرَاءَ الْإِمَامِ بِمِنًى أَرْبَعًا، فَإِذَا صَلَّى لِنَفْسِهِ صَلَّى رَكْعَتَيْنِ»


muwatta-malik-405

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

405. உமர்(ரலி) அவர்கள் பற்றிய இந்தச் செய்தியை அஸ்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.


وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ مِثْلَ ذَلِكَ


muwatta-malik-404

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 91

ஒரு பயணி இமாமாக தொழ வைத்தால் அல்லது உள்;ர்வாசி பின்னே நின்று தொழுதால்..

404. உமர்(ரலி) அவர்கள் மக்காவிற்கு வந்தா; மக்களுக்கு (நான்கில்) இரண்டு ரக்அத் தொழ வைப்பார்கள். பின்பு, மக்காவாசிகளே! நாங்கள் பயணிகள். எனவே, நீங்கள் உங்கள் தொழுகையைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள் என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ إِذَا قَدِمَ مَكَّةَ صَلَّى بِهِمْ رَكْعَتَيْنِ، ثُمَّ يَقُولُ: «يَا أَهْلَ مَكَّةَ أَتِمُّوا صَلَاتَكُمْ، فَإِنَّا قَوْمٌ سَفْرٌ»


muwatta-malik-402

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 90

சேர்ந்து (சில நாட்கள்) தங்கும் பயணி ‘கஸ்ர்” செய்யாமல் தொழுவது

402. ஒரு பயணி நான்கு இரவுகள் சேர்ந்து தங்க முடிவு செய்து விட்டால் அவன் தொழுகையை முழுமையாக்கட்டும் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறியதாக அதாஉ அல் ரோஸானீ அறிவிக்கின்றார்.

இது நான் கேட்டதில் எனக்கு விருப்பமானது என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


«مَنْ أَجْمَعَ إِقَامَةً أَرْبَعَ لَيَالٍ وَهُوَ مُسَافِرٌ، أَتَمَّ الصَّلَاةَ» قَالَ مَالِكٌ: «وَذَلِكَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ»


muwatta-malik-401

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

401. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் பத்து இரவுகள் மக்காவில் தங்கி இருந்த போது, தொழுகையை கஸ்ர் செய்வார்கள். ஆனால் அதே தொழுகையை ஜமாத்துடன் தொழுதாலோ, இமாமின் தொழுகையாகவே தொழுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ ابْنَ عُمَرَ «أَقَامَ بِمَكَّةَ عَشْرَ لَيَالٍ يَقْصُرُ الصَّلَاةَ، إِلَّا أَنْ يُصَلِّيَهَا مَعَ الْإِمَامِ فَيُصَلِّيهَا بِصَلَاتِهِ»


muwatta-malik-400

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 89

சில நாட்கள் சேர்ந்து தங்காத பயணி தொழுகையை சுருக்குதல்

400. 12 இரவுகள் நான் தங்கினாலும் சேர்ந்தாற் போல் (ஒரு ஊரில்) நான் தங்க முடிவு செய்யவில்லையாயின் பயணத் தொழுகையே தொழுவேன் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறியதாக அவர்களின் மகன் ஸாலிம் கூறுகின்றார்கள்.


«أُصَلِّي صَلَاةَ الْمُسَافِرِ، مَا لَمْ أُجْمِعْ مُكْثًا وَإِنْ حَبَسَنِي ذَلِكَ اثْنَتَيْ عَشْرَةَ لَيْلَةً»


Next Page » « Previous Page