Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-398

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

398. அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்காவுக்கும், தாயிபுக்கும் இடைப்பட்ட அளவிலும், மக்காவுக்கும் அஸபானுக்கும் இடைப்பட்ட தூர அளவிலும், மக்காவுக்கும், ஜித்தாவுக்கும் இடைப்பட்ட தூர அளவிலும் தொழுகையை ‘கஸ்ர்” செய்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

அதன் தூரம் 48 மைல் என்றும், தொழுகையை கஸ்ர் செய்வதின் தூர அளவில் நான் கேட்டதில் எனக்கு இதுவே விருப்பமானது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ كَانَ «يَقْصُرُ الصَّلَاةَ فِي مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَالطَّائِفِ، وَفِي مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَعُسْفَانَ، وَفِي مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَجُدَّةَ»

قَالَ مَالِكٌ: «وَذَلِكَ أَرْبَعَةُ بُرُدٍ، وَذَلِكَ أَحَبُّ مَا تُقْصَرُ إِلَيَّ فِيهِ الصَّلَاةُ»


muwatta-malik-397

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

397. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் தான் ‘பரீத்” என்ற இடத்திற்கு சென்ற போது அவர்கள் தொழுகையை கஸ்ர் செய்யவில்லை என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّهُ كَانَ «يُسَافِرُ مَعَ ابْنِ عُمَرَ الْبَرِيدَ فَلَا يَقْصُرُ الصَّلَاةَ»


muwatta-malik-396

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

396. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஒருநாள் முழுவதும் பயணம் செல்லும் தூரத்தில் கஸ்ர் செய்வார்கள் என அவர்களின் மகன் ஸாலிம் கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَقْصُرُ الصَّلَاةَ فِي مَسِيرِهِ الْيَوْمَ التَّامَّ»


muwatta-malik-395

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

395. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கைபருக்கு பயணம் மேற்கொண்டால் (தொழுகையை) கஸ்ர் செய்வார்கள்.


أَنَّهُ كَانَ «يُسَافِرُ إِلَى خَيْبَرَ فَيَقْصُرُ الصَّلَاةَ»


muwatta-malik-394

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

394. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ‘தாதுன் நுஸுபு” என்ற இடத்திற்கு பயணம் செய்தார்கள். அது சமயம் ‘அதன் வழியிலேயே தொழுகையை கஸ்ர் செய்தார்கள் என ஸாலிம் அறிவிக்கின்றார்கள்.

மதீனாவிற்கும், தாதுன் நுஸுபுக்கும் மத்தியில் 48 மைல் தூரமாகும் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «رَكِبَ إِلَى ذَاتِ النُّصُبِ فَقَصَرَ الصَّلَاةَ فِي مَسِيرِهِ ذَلِكَ»،

قَالَ مَالِكٌ: «وَبَيْنَ ذَاتِ النُّصُبِ وَالْمَدِينَةِ أَرْبَعَةُ بُرُدٍ»


muwatta-malik-393

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

393. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ‘ரய்ம்” எனும் ஊருக்கு பயணம் செய்தார்கள். அதற்குப் போகும் வழியிலேயே ‘கஸ்ர்” தொழுதார்கள் என அவர்களின் மகன் ஸாலிம் அறிவிக்கின்றார்கள்.

”கஸ்ர்”” என்பது 48 மைல் தூர அளவுக்குத் தான் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்


أَنَّهُ «رَكِبَ إِلَى رِيمٍ، فَقَصَرَ الصَّلَاةَ فِي مَسِيرِهِ ذَلِكَ»، قَالَ مَالِكٌ: «وَذَلِكَ نَحْوٌ مِنْ أَرْبَعَةِ بُرُدٍ»


muwatta-malik-392

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 88

தொழுகையை சுருக்கிட வேண்டிய அவசியம்

392. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்யக் கிளம்பினால் ‘துல்ஹுலைஃபா” என்ற இடத்திலேயே ‘கஸ்ர்” செய்வார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «إِذَا خَرَجَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا قَصَرَ الصَّلَاةَ بِذِي الْحُلَيْفَةِ»


muwatta-malik-391

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

391. உங்களின் தந்தை (அப்துல்லா இப்னு உமர்) பயணத்தின் போது மஹ்ரிபுத் தொழுகையை மிகவும் தாமதப்படுத்திய சம்பவம் எது? என ஸாலிம் இப்னு அப்துல்லாவிடம் கேட்ட போது, நாங்கள் ‘தாத்ஜைத்” என்ற இடத்தில் இருந்த போது சூரியன் மறைந்து, (ஆனால்) ‘அகீக்” என்ற இடத்திற்கு வந்த போது (தான்) மஹ்ரிபை அவர்கள் தொழ வைத்தார்கள் என ஸாலிம் பதில் கூறியதாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


أَنَّهُ قَالَ لِسَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ: مَا أَشَدَّ مَا رَأَيْتَ أَبَاكَ أَخَّرَ الْمَغْرِبَ فِي السَّفَرِ، فَقَالَ سَالِمٌ: «غَرَبَتِ الشَّمْسُ وَنَحْنُ بِذَاتِ الْجَيْشِ فَصَلَّى الْمَغْرِبَ بِالْعَقِيقِ»


muwatta-malik-390

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

390. பயணத்தின் போதும், உள்ளூரில் இருக்கும் போதும் (ஒவ்வொரு நேரத்திற்கும்) இரண்டு ரக்அத் களாக தொழுகை கடமையாக்கப்பட்டது. பின்பு அது பயணத் தொழுகையில் உறுதி செய்யப்பட்டு, ஊரில் தங்கி தொழப்படும் தொழுகையில் (ரக்அத்) அதிகப்படுத்தப்பட்டது என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«فُرِضَتِ الصَّلَاةُ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ، فِي الْحَضَرِ وَالسَّفَرِ، فَأُقِرَّتْ صَلَاةُ السَّفَرِ، وَزِيدَ فِي صَلَاةِ الْحَضَرِ»


muwatta-malik-389

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 87

பயணத்தில் தொழுகையை சுருக்கித் தெழுதல்

389. அபூ அப்துர் ரஹ்மான் அவர்களே! ஊரில் இருக்கும் போது தொழும் தொழுகையை,பயத் தொழுகையை குர்ஆனில் கண்டு கொண்டோம். ஆனால் பயணத் தொழுகை பற்றி குர்ஆனில் நாம் அறியவில்லையே என காலித் இப்னு உஸைதின் குடும்பத்தினாரில் ஒருவர் கேட்ட போது ”என் சகோதரனின் மகனே! அல்லாஹ் நம்மின் பக்கம் முஹம்மது(ஸல்) அவர்களை (த் தூதராக) அனுப்பினான். நாமாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எதைச் செய்ய நாம் கண்டோமோ அதையே நாமும் செய்கிறோம் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் பதில் கூறினார்கள் என்று இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، فَقَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّا نَجِدُ صَلَاةَ الْخَوْفِ، وَصَلَاةَ الْحَضَرِ فِي الْقُرْآنِ، وَلَا نَجِدُ صَلَاةَ السَّفَرِ؟ فَقَالَ ابْنُ عُمَرَ: «يَا ابْنَ أَخِي إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ بَعَثَ إِلَيْنَا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا نَعْلَمُ شَيْئًا. فَإِنَّمَا نَفْعَلُ، كَمَا رَأَيْنَاهُ يَفْعَلُ»


Next Page » « Previous Page