Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-357

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

357. ‘அகீக்” என்ற இடத்தில் ஒருவர் மக்களுக்கு இமாமத் செய்து கொண்டிருந்தார். உமர் இப்னு அப்து;ல அஜீஸ் அவர்கள் அவரிடம் ஆள் அனுப்பி அவரை (தொழ வைக்க வேண்டாம் என) தடை செய்தார்கள் என யஹ்யா இப்னு ஸாமித் கூறுகின்றார்கள்.

அவரைத் தடுத்ததற்கு அவரின் தந்தை யாரென்றே அறியப்படாததே காரணமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ رَجُلًا كَانَ يَؤُمُّ النَّاسَ بِالْعَقِيقِ، «فَأَرْسَلَ إِلَيْهِ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ فَنَهَاهُ»

قَالَ مَالِكٌ: «وَإِنَّمَا نَهَاهُ لِأَنَّهُ كَانَ لَا يُعْرَفُ أَبُوهُ»


muwatta-malik-356

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

356. ஒரு தொழுகையின் போது அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களின் பின்னால் நான் நின்றேன். என்னைத் தவிர வேறு எவரும் அவர்களுடன் இல்லை. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் கையைப் பின்னோக்கி (என்னைப் பிடித்து) தன் வலது புறத்தில் நேராக என்னை ஆக்கினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


قُمْتُ وَرَاءَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي صَلَاةٍ مِنَ الصَّلَوَاتِ، وَلَيْسَ مَعَهُ أَحَدٌ غَيْرِي، «فَخَالَفَ عَبْدُ اللَّهِ بِيَدِهِ، فَجَعَلَنِي حِذَاءَهُ»


muwatta-malik-355

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 79

கூட்டுத் தொழுகையின் ஒழுங்கு

355. உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழ வைத்தால் அவர் இலகுவாக்கட்டும். ஏனெனில், பின்பற்றித் தொழுவோரில் பலவீனரும், நோயாளிகளும், முதியவர்களும் உள்ளனர். உங்களில் ஒருவர் தனித்துத் தொழுதால் விருப்பப்படி நீட்டிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவாகள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«إِذَا صَلَّى أَحَدُكُمْ بِالنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالسَّقِيمَ وَالْكَبِيرَ، وَإِذَا صَلَّى أَحَدُكُمْ لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ»


muwatta-malik-353

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

353. ஒருவர் மஹ்ரிபையோ அல்லது சுப்ஹையோ தொழுது விட்டு, பின்பு அவ்விரண்டையும் இமாம் தொழ வைக்கக் கண்டால் மீண்டும் தொழ வேண்டாம் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


«مَنْ صَلَّى الْمَغْرِبَ أَوِ الصُّبْحَ، ثُمَّ أَدْرَكَهُمَا مَعَ الْإِمَامِ، فَلَا يَعُدْ لَهُمَا»


muwatta-malik-352

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

352. பனீ அஸத் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அபூ அய்யூப் அன்சாரி(ரலி) அவர்களிடம் நான் என் வீட்டில் தொழுகிறேன். பின்பு பள்ளிக்கு வருகிறேன். அங்கு இமாம் தொழ வைப்பதைப் பார்க்கின்றேன். அவருடன் நான் தொழ வேண்டுமா? எனக் கேட்டார். ‘ஆம்” அவருடன் தொழு.அவ்வாறு ஒருவர் செய்தால் அவருக்கு ஜமாஅத்தின் பங்குண்டு அல்லது ஜமாஅத்தைப் போன்ற பங்குண்டு என அபூ அய்யூப்(ரலி) கூறினார்கள் என அஃபீஃப் இப்னு அம்ருஸ் ஸஹ்மீ கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَأَلَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ فَقَالَ: إِنِّي أُصَلِّي فِي بَيْتِي، ثُمَّ آتِي الْمَسْجِدَ فَأَجِدُ الْإِمَامَ يُصَلِّي، أَفَأُصَلِّي مَعَهُ؟ فَقَالَ أَبُو أَيُّوبَ: «نَعَمْ فَصَلِّ مَعَهُ فَإِنَّ مَنْ صَنَعَ ذَلِكَ فَإِنَّ لَهُ سَهْمَ جَمْعٍ»، أَوْ «مِثْلَ سَهْمِ جَمْعٍ»


muwatta-malik-351

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

351. என் வீட்டில் நான் தொழுது விட்டேன். பின்பு பள்ளிக்கு வருகிறேன். அப்போது இமாமை தொழ வைக்கக் காண்கிறேன். அவருடன் நான் தொழ வேண்டுமா? என்று ஸயீத் இப்னு முஸய்யப் அவர்களிடம் ஒருவர் கேட்டார். ‘ஆம்” என்று ஸயீத் கூறினார்கள். அந்த இரண்டில் எது (பர்லான) என் தொழுகை”” என்பது அந்த மனிதர் கேட்டார். அவ்விரண்டையும் நீரா பொறுப்பேற்கப் போகிறீர்? அது அல்லாஹ் வின் பொறுப்பில் உள்ளது என ஸயீத் இப்னு முஸய்யப் பதில் கூறினார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


أَنَّ رَجُلًا سَأَلَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ فَقَالَ: إِنِّي أُصَلِّي فِي بَيْتِي، ثُمَّ آتِي الْمَسْجِدَ فَأَجِدُ الْإِمَامَ يُصَلِّي، أَفَأُصَلِّي مَعَهُ؟ فَقَالَ سَعِيدٌ: «نَعَمْ»، فَقَالَ الرَّجُلُ: فَأَيُّهُمَا صَلَاتِي؟ فَقَالَ سَعِيدٌ: «أَوَ أَنْتَ تَجْعَلُهُمَا. إِنَّمَا ذَلِكَ إِلَى اللَّهِ»


muwatta-malik-350

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

350. நான் என் வீட்டிலே தொழுது வருகிறேன். பின்பு இமாமுடன் தொழுகையை அடைந்து கொள்கின்றேன். அவருடன் சேர்ந்த நான் தொழ வேண்டுமா? என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். தொழ வேண்டும் என பதில் கூறினார்கள். இந்த இரண்டு தொழுகை(களில்) எதை (பர்லான) என் தொழுகையாக ஆக்குவேன்? என அவர் கேட்டார். அந்த வேலை உனக்கு ஏன்? அது அல்லாஹ்வின் வேலையாகும். அவன் விரும்பியதை (பர்லாக) ஆக்குவான் என்று இப்னு உமர்(ரலி) கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ رَجُلًا سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ فَقَالَ: إِنِّي أُصَلِّي فِي بَيْتِي، ثُمَّ أُدْرِكُ الصَّلَاةَ مَعَ الْإِمَامِ، أَفَأُصَلِّي مَعَهُ؟ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «نَعَمْ». فَقَالَ الرَّجُلُ: أَيَّتَهُمَا أَجْعَلُ صَلَاتِي؟ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: «أَوَ ذَلِكَ إِلَيْكَ. إِنَّمَا ذَلِكَ إِلَى اللَّهِ يَجْعَلُ أَيَّتَهُمَا شَاءَ»


muwatta-malik-349

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 78

தொழுத தொழுகையை மீண்டும் இமாமுடன் சேர்ந்து தொழுவது

349. நபி(ஸல்) அவர்களுடன் நான் ஒரு இடத்தில் இருந்தேன். அதுசமயம் பாங்கு கூறியதும், நபி(ஸல்) அவர்கள் நின்று தொழ வைத்தார்கள். நான் தொழாமல் அமர்ந்திருந்தேன். மக்களுடன் நீ சேர்ந்து தொழாமல் இருக்கக் காரணம் என்ன? நீர் முஸ்லிம் இல்லையா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே..! நான் முஸ்லிம் தான். எனினும் ”நான் என் வீட்டிலேயே தொழுது விட்டேன்”” என்று கூறினேன். நீ வீட்டிலே தொழுதிருந்தாலும் (ஜமாஅத் நடக்கும் இடத்திற்கு) நீ வந்தால் மக்களுடன் தொழுது கொள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக மிஹ்ஜன்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُذِّنَ بِالصَّلَاةِ. فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى، ثُمَّ رَجَعَ، وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ لَمْ يُصَلِّ مَعَهُ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ مَعَ النَّاسِ؟ أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ»؟ فَقَالَ: بَلَى. يَا رَسُولَ اللَّهِ. وَلَكِنِّي قَدْ صَلَّيْتُ فِي أَهْلِي، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ، وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ»


muwatta-malik-348

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

348. உதுமான்(ரலி) அவர்கள் இஷாத் தொழுகைக்காக வந்த போது, பள்ளியில் மக்கள் குறைவாக இருக்கக் கண்டார்கள். மக்கள் அதிகமாக வரட்டும் என எதிர்பார்த்து பள்ளியின் பின் வளாகத்தில் ஒருக்களித்துப் படுத்தார்கள். அதுசமயம் அவர்களிடம் இப்னு அபீ அம்ரா வந்து அருகில் அமர்ந்தார். அவர் யார்? என்று அவரிடம் கேட்டார். தான் யார்? என்று கூறியதும், உனக்கு குர்ஆன் தொரியுமா? என்று கேட்டார்கள். தொரியம் என்று கூறினார். அவரிடம் ”ஒருவர் இஷாத் தொழுகைக்கு வந்தால், அவர் பாதி இரவு நின்று தொழுதவராவார். சுப்ஹுத் தொழுகைக்கு வந்தால் அவர் முழு இரவை நின்று தொழுதவர் போலாவார்”” என உதுமான்(ரலி) கூறினார்கள். இதை அப்துர் ரஹ்மான் இப்னு அபீ அம்ரா அல் அன்சாரி கூறுகின்றார்கள்.


جَاءَ عُثْمَانُ بْنُ عَفَّانَ إِلَى صَلَاةِ الْعِشَاءِ فَرَأَى أَهْلَ الْمَسْجِدِ قَلِيلًا، فَاضْطَجَعَ فِي مُؤَخَّرِ الْمَسْجِدِ، يَنْتَظِرُ النَّاسَ أَنْ يَكْثُرُوا. فَأَتَاهُ ابْنُ أَبِي عَمْرَةَ فَجَلَسَ إِلَيْهِ، فَسَأَلَهُ: «مَنْ هُوَ؟» فَأَخْبَرَهُ. فَقَالَ: مَا مَعَكَ مِنَ الْقُرْآنِ؟ فَأَخْبَرَهُ. فَقَالَ لَهُ عُثْمَانُ: «مَنْ شَهِدَ الْعِشَاءَ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ لَيْلَةٍ. وَمَنْ شَهِدَ الصُّبْحَ فَكَأَنَّمَا قَامَ لَيْلَةً»


muwatta-malik-347

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

347. சுலைமான் இப்னு அபீ ஹம்ஸா அவர்களை சுப்ஹுத் தொழுகையில் உமர்(ரலி) அவர்கள் பார்க்கவில்லை. உமர்(ரலி) அவர்கள் காலையில் கடை வீதிக்கு வந்தார்கள். கடைக்கும், பள்ளிக்கும் இடையில் தான் சுலைமான் அவர்களின் வீடு இருந்தது. சுலைமான் அ வர்களின் தாய் ஷிபாவைக் கண்ட உமர்(ரலி) அவர்கள், ‘நான் சுப்ஹில் சுலைமானைப் பார்க்கவில்லையே! என்று கேட்;டார்கள். ”அவர் இரவெல்லா; விழித்துத் தொழுதார். அவருக்கு தூக்கம் மிகைத்து விட்டது”” என்று அவாரின் தாயார் கூறினார். ”சுப்ஹுத் தொழுகைக்காக ஜமாஅத்தில் கலந்து கொள்வது, இரவெல்லாம் நின்று தொழுவதை விட எனக்கு மிக விருப்பமானதாக உள்ளது என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். இதை அபூபக்கர் இப்னு சுலைமான் இப்னு அபீ ஹம்ஸா கூறுகின்றார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَدَ سُلَيْمَانَ بْنَ أَبِي حَثْمَةَ فِي صَلَاةِ الصُّبْحِ، وَأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ غَدَا إِلَى السُّوقِ. وَمَسْكَنُ سُلَيْمَانَ بَيْنَ السُّوقِ وَالْمَسْجِدِ النَّبَوِيِّ فَمَرَّ عَلَى الشِّفَاءِ أُمِّ سُلَيْمَانَ، فَقَالَ لَهَا: «لَمْ أَرَ سُلَيْمَانَ فِي الصُّبْحِ». فَقَالَتْ: إِنَّهُ بَاتَ يُصَلِّي، فَغَلَبَتْهُ عَيْنَاهُ، فَقَالَ عُمَرُ: «لَأَنْ أَشْهَدَ صَلَاةَ الصُّبْحِ فِي الْجَمَاعَةِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُومَ لَيْلَةً»


Next Page » « Previous Page