Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-346

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

346. பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் ஒருவர், பாதையில் கண்ட ஒரு முள்ளை அப்புறப்படுத்தினால் அவருக்கு அல்லாஹ் கூலி கொடுத்து, அவரை மன்னிக்கின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உயிரை தியாகம் செய்தவர்கள் ஐவராவார்கள். (1) பிளேக் நோயால் இறந்தவர், (2) காலரா நோயால் இறந்தவர் (3)

பாங்கு கூறுவதிலும், (தொழுகையின்) முதல் வாரிசையிலும் உள்ளதை (சிறப்பை) மக்கள் அறிந்து. சீட்டுக் குலுக்கிப் போட்டேதவிர அதை அடைய முடியாத நிலை ஏற்பட்டால், சீட்டுக் குலுக்கி போட்டுக் கொள்வார்கள். மேலும் கோடை காலத்திலும் (பகல் தொழுகைக்கு வருவதின்) சிறப்பை அவர்கள் அறிந்து கொண்டால், அதற்காக முந்திக் கொள்வார்கள். மேலும் இஷாவிலும், சுப்ஹிலும் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தாவது அவர்கள் வருவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، إِذْ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ، فَأَخَّرَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ»

وَقَالَ: “الشُّهَدَاءُ خَمْسَةٌ: الْمَطْعُونُ، وَالْمَبْطُونُ، وَالْغَرِقُ، وَصَاحِبُ الْهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ ”
وَقَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لَاسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»


muwatta-malik-345

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 77

இஷாவிலும், சுப்ஹிலும் வந்து கலந்து கொள்ளுதல்

345. நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் வித்தியாசம், இஷாவிலும், சுப்ஹிலும் கலந்து கொள்வது தான். அவர்கள் அவ்விரண்டிலும் (கலந்து கொள்ள) சக்தி பெற மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸயித் இப்னு முஸய்யப்(ரலி) அவர்கள் கூறினார்கள்.


«بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ شُهُودُ الْعِشَاءِ وَالصُّبْحِ، لَا يَسْتَطِيعُونَهُمَا» أَوْ نَحْوَ هَذَا


muwatta-malik-344

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

344. கடமையான தொழுகைகளைத் தவிர மற்ற (உபாரியான) உங்களின் தொழுகைகளை உங்கள் வீடுகளில் நீங்கள் தொழுவது மிகச் சிறந்ததாகும் என்று ஸைத் இப்னு தாபித்(ரலி) கூறியதாக புஸ்ர் இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


«أَفْضَلُ الصَّلَاةِ صَلَاتُكُمْ فِي بُيُوتِكُمْ. إِلَّا صَلَاةَ الْمَكْتُوبَةِ»


muwatta-malik-343

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

343. என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விறகைச் சேகரித்து, அதை எரிக்கும்படி நான் கட்டளையிட்டு விட்டு, பின்பு தொழுகைக்கு பாங்கு கூறிடவும், ஒருவரை மக்களுக்கு இமாமத் செய்யும்படி கட்டளையிட்டும் அதற்கு வரமறுக்கும் ஆண்களின் வீட்டை எரித்திட நான் விரும்புகின்றேன். எனது உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவர் எலும்பையோ அல்லது ஆட்டின் இரண்டு குளம்புத் துண்டுகளோ கிடைக்கும் என அறிந்து கொண்டால் அவர் இஷாத் தொழுகையில் வந்து சேருவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْطَبَ، ثُمَّ آمُرَ بِالصَّلَاةِ فَيُؤَذَّنَ لَهَا، ثُمَّ آمُرَ رَجُلًا فَيَؤُمَّ النَّاسَ، ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَظْمًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ»


muwatta-malik-342

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

342. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 25 மடங்கு அதிக மதிப்புப் பெற்றதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«صَلَاةُ الْجَمَاعَةِ أَفْضَلُ مِنْ صَلَاةِ أَحَدِكُمْ وَحْدَهُ بِخَمْسَةٍ وَعِشْرِينَ جُزْءًا»


muwatta-malik-341

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 76

தனித்துத் தொழுவதை விட கூட்டுத் தொழுகையின் சிறப்பு

341. ஒரு மனிதன் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது).


«صَلَاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلَاةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً»


muwatta-malik-340

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

340. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் செய்தது போலவே காஸிம் இப்னு முஹம்மத் (ரஹ்) அவர்களும் செய்வார்கள் என அப்துர்ரஹ்மான் இப்னு காஸிம் கூறுகின்றார்கள்.


«أَنَّهُ صَنَعَ مِثْلَ الَّذِي صَنَعَ ابْنُ عُمَرَ»


muwatta-malik-339

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

339. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு பஜ்ரின் சுன்னத் தொழ முடியாமல் போய் விட்டது. சூரியன் உதயமான பிறகு அதை அவர்கள் திரும்பத் தொழுதார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «فَاتَتْهُ رَكْعَتَا الْفَجْرِ. فَقَضَاهُمَا بَعْدَ أَنْ طَلَعَتِ الشَّمْسُ»


muwatta-malik-338

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

338. நபித்தோழர்கள்! இகாமத்தைக் கேட்ட பின்பு (முன் சுன்னத்) தொழுவதற்காக நின்றார்கள். அவர்களிடம் வந்த நபி(ஸல்) அவா்கள் இரண்டு தொழுகைகளா? என்று கேட்டார்கள். சுப்ஹுத் தொழுகையின் போது சுப்ஹி(ன் பர்லு)க்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத் தொழுகையை தொழுத போதே இப்படி நடந்தது என அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


سَمِعَ قَوْمٌ الْإِقَامَةَ. فَقَامُوا يُصَلُّونَ. فَخَرَجَ عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَصَلَاتَانِ مَعًا؟ أَصَلَاتَانِ مَعًا؟»

وَذَلِكَ فِي صَلَاةِ الصُّبْحِ. فِي الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ الصُّبْحِ


muwatta-malik-337

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

337. ஃபாத்திஹா சூரா ஓதினார்களா? இல்லையா? என நான் கருதும் அளவுக்கு நபி(ஸல்) அவர்களது பஜ்ரின் முன் சுன்னத் சுருக்கமாக இருந்தது என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَيُخَفِّفُ رَكْعَتَيِ الْفَجْرِ حَتَّى إِنِّي لَأَقُولُ أَقَرَأَ بِأُمِّ الْقُرْآنِ أَمْ لَا»


Next Page » « Previous Page