Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-630

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

630. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ், அபூஅப்துர் ரஹ்மானை மன்னிப்பானாக! அவர் நிச்சயமாக பொய்யுரைக்கவில்லை; எனினும், அவர் மறந்திருக்கலாம். அல்லது தவறாக விளங்கியிருக்கலாம்; (நடந்தது இதுதான்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதப் பெண்ணின் பிரேதத்தைக் கடந்துசென்றார்கள். அவளுக்காகச் சிலர் அழுதுகொண்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இவர்கள் இவளுக்காக அழுகின்றனர். இவளோ தனது சவக்குழியில் வேதனை செய்யப்படுகிறாள்” என்றுதான் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.


وَذُكِرَ لَهَا أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ يَقُولُ: إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ، فَقَالَتْ عَائِشَةُ: يَغْفِرُ اللهُ لأَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَمَا إِنَّهُ لَمْ يَكْذِبْ، وَلَكِنَّهُ نَسِيَ أَوْ أَخْطَأَ، إِنَّمَا مَرَّ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ بِيَهُودِيَّةٍ يَبْكِي عَلَيْهَا أَهْلُهَا، فَقَالَ: إِنَّكُمْ لَتَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا.


Muwatta-Malik-2806

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அடிமையிடம் கருணையோடு நடந்துக்கொள்ள வந்துள்ள கட்டளை.

2806. அடிமைக்கு நல்ல முறையில் ஆடையும் உணவும் வழங்க வேண்டும். அவர்களுக்கு இயலாத காரியத்தில் அவர்களை ஈடுப்படுத்தக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.

அறிவிப்பவர்: மாலிக் (ரஹ்)


لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ بِالْمَعْرُوفِ، وَلاَ يُكَلَّفُ مِنَ الْعَمَلِ إِلاَّ مَا يُطِيقُ.


Muwatta-Malik-2805

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2805.


السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ نَوْمَهُ وَطَعَامَهُ وَشَرَابَهُ، فَإِذَا قَضَى أَحَدُكُمْ نَهْمَتَهُ مِنْ وَجْهِهِ، فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ.


Muwatta-Malik-53

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

53. வாந்திக்காக ஒளுச் செய்வது அவசியமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, இல்லை. எனினும், அதற்காக வாய் கொப்பளித்து, தன் வாயைக் கழுவட்டும். அவர் மீது ஒளு கடமை இல்லை என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ، هَلْ فِي الْقَيْءِ وُضُوءٌ؟ قَالَ: لاَ، وَلَكِنْ لِيَتَمَضْمَضْ مِنْ ذَلِكَ، وَلْيَغْسِلْ فَاهُ، وَلَيْسَ عَلَيْهِ وُضُوءٌ.


Muwatta-Malik-51

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

51. ஒருவர் உணவை வாந்தி எடுக்கிறார். அவர் மீது ஒளு கடமையா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ”அவர் மீது ஒளு கடமை இல்லை. அதற்காக அவர் வாய் கொப்பளித்து விட்டு, தன் வாயை கழுவிக் கொள்ளட்டும்”” என (பதில்) கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ قَلَسَ طَعَامًا، هَلْ عَلَيْهِ وُضُوءٌ؟ فَقَالَ: لَيْسَ عَلَيْهِ وُضُوءٌ، وَلْيَتَمَضْمَضْ مِنْ ذَلِكَ، وَلْيَغْسِلْ فَاهُ.


Muwatta-Malik-77

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

77. தலைப்பாகை, முக்காடு மீது மஸஹ் செய்யலாமா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ தலைப்பாகை, முக்காடு மீது மஸஹ் செய்ய அனுமதி இல்லை. அவ்விருவரும் தங்களின் தலைகள் மீதே மஸஹ் செய்வார்கள்”” என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَنِ الْمَسْحِ عَلَى الْعِمَامَةِ وَالْخِمَارِ، فَقَالَ: لاَ يَنْبَغِي أَنْ يَمْسَحَ الرَّجُلُ وَلاَ الْمَرْأَةُ عَلَى عِمَامَةٍ وَلاَ خِمَارٍ، وَلْيَمْسَحَا عَلَى رُؤُوسِهِمَا.


Muwatta-Malik-78

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

78. ஒருவர் உளூச் செய்கிறார். தன் தலைக்கு மஸஹ் செய்ய மறந்து விடுகிறார். அவர் தன் உளூவை முடித்தும் விடுகிறார். (இவர் நிலை எப்படி?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”தன் தலைக்கு அவர் மஸஹ் செய்ய வேண்டும். தொழுதிருந்தால், தன் தொழுகையை திரும்ப நிறைவேற்ற வேண்டும்”” என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مالكٌ عَن رَجُلٍ تَوَضَّأَ فَنَسِيَ أَنْ يَمْسَحَ عَلَى رَأْسِهِ، حَتَّى جَفَّ وَضُوءُهُ؟ قَالَ: أَرَى أَنْ يَمْسَحَ بِرَأْسِهِ، وَإِنْ كَانَ قَدْ صَلَّى، أَنْ يُعِيدَ الصَّلاَةَ.


Muwatta-Malik-83

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

83. ஒருவர் தொழுகைக்கு ஒளுச் செய்கின்றார். பின்பு தன் காலுறைகளை அணிந்து கொண்டார். பின்பு சிறுநீர் கழித்தார். பின்பு காலுறை இரண்டையும் கழட்டிய பிறகு தன் கால்களில் மீண்டும் மாட்டிக் கொண்டார். இவர் ஒளுவை முறையாகச் செய்தவர் ஆவாரா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”தன் காலுறைகளை கழற்றி விட்டு, தன் கால்களைக் கழுவட்டும்! ஒளுச் செய்த நிலையில் தன் கால்களை காலுறைகளில் நுழைத்தவாரே காலுறை மீது மஸஹ் செய்ய வேண்டும். ஒளு இல்லாமல் தன் கால்களை காலுறைகளுக்குள் நுழைத்தவர், காலுறைகள் மீது மஸஹ் செய்ய மாட்டார்”” என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகின்றார்கள்.


قَالَ يَحيَى: وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ تَوَضَّأَ وُضُوءَ الصَّلاَةِ، ثُمَّ لَبِسَ خُفَّيْهِ، ثُمَّ بَالَ، ثُمَّ نَزَعَهُمَا، ثُمَّ رَدَّهُمَا فِي رِجْلَيْهِ، أَيَسْتَأْنِفُ الْوُضُوءَ؟ فَقَالَ: لِيَنْزِعْ خُفَّيْهِ، ثُمَّ لِيَتَوَضَّأَ وَلْيَغْسِلْ رِجْلَيْهِ، وَإِنَّمَا يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ مَنْ أَدْخَلَ رِجْلَيْهِ فِي الْخُفَّيْنِ وَهُمَا طَاهِرَتَانِ بِطُهْرِ الْوُضُوءِ، فَأَمَّا مَنْ أَدْخَلَ رِجْلَيْهِ فِي الْخُفَّيْنِ وَهُمَا غَيْرُ طَاهِرَتَيْنِ بِطُهْرِ الْوُضُوءِ، فَلاَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ.


Muwatta-Malik-84

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

84. ஒருவர் ஒளுச் செய்கிறார். அவரிடம் காலுறைகள் உள்ளது. அந்த காலுறைகள் மீது மஸஹ் செய்ய மறந்து விட்டார். தன் ஒளுவையும் முடித்து விட்டு தொழுதும் விடுகிறார். (இவர் என்ன செய்வது?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர் தன் காலுறை மீது மஸஹ் செய்யட்டும். தொழுகையை மீண்டும் தொழட்டும்! ”ஒளு மீண்டும் செய்ய வேண்டியதில்லை”” என பதில் கூறினார்கள்.


قَالَ: وَسُئِلَ مَالكٌ عَن رَجُلٍ تَوَضَّأَ وَعَلَيْهِ خُفَّاهُ، فَسَهَا عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، حَتَّى جَفَّ وَضُوءُهُ وَصَلَّى، قَالَ: لِيَمْسَحْ عَلَى خُفَّيْهِ، وَلْيُعِدِ الصَّلاَةَ، وَلاَ يُعِيدُ الْوُضُوءَ.


Muwatta-Malik-85

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

85. மாலிக் (ரஹ்) அவர்களிடம் ”ஒரு மனிதர் தன் கால்களை கழுவுகிறார். பின்பு தன் காலுறைகளை அணிகிறார். பின்பு ஒளுச் செய்ய விரும்புகிறார். (சரியா?) என்று கேட்கப்பட்டது. உடனே அவர்கள், ”அவர் தன் காலுறைகளைக் கழற்றட்டும். பின்பு அவர் ஒளுச் செய்யட்டும்! தன் கால்களைக் கழுவட்டும்”” என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ غَسَلَ قَدَمَيْهِ، ثُمَّ لَبِسَ خُفَّيْهِ، ثُمَّ اسْتَأْنَفَ الْوُضُوءَ، فَقَالَ: لِيَنْزِعْ خُفَّيْهِ، ثُمَّ لْيَتَوَضَّأْ، وَلْيَغْسِلْ رِجْلَيْهِ.


Next Page » « Previous Page