Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-182

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

182. பாங்கு கூறுபவர், இமாமிடம் ஸலாம் கூறுவது பற்றியும், தொழுகைக்கு அவரை அவர் அழைப்பது பற்றியும், பாங்கு கூறுபவர் எவருக்கு ஸலாம் கொடுப்பவரே யார் முதன்மையானவர்? என்று மாலிக் (ரஹ்) கேட்கப்பட்டதற்கு, முந்திய காலத்தில் ஸலாம் கூறியது இருந்ததாக எனக்கு தொரியவில்லை என்று கூறினார்கள்.

 


وَسُئِلَ مَالِكٌ عَن تَسْلِيمِ الْمُؤَذِّنِ عَلَى الإِمَامِ، وَدُعَائِهِ إِيَّاهُ لِلصَّلاَةِ، وَمَنْ أَوَّلُ مَنْ سُلِّمَ عَلَيْهِ؟ فَقَالَ: لَمْ يَبْلُغْنِي أَنَّ التَّسْلِيمَ كَانَ فِي الزَّمَانِ الأَوَّلِ.


Muwatta-Malik-183

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

183. பாங்கு கூறுபவர், மக்களுக்கு பாங்கு கூறுகிறார். பின்பு எவரேனும் அவரிடம் வருவாரா? என எதிர்பார்க்கிறார். ஆனால் அவரிடம் எவரும் வரவில்லை. உடனே தொழுகைக்கு அவர் இகாமத் கூறி, தனித்துத் தொழுகிறார். பின்பு அவர் தொழுகையை முடித்த பின் மக்கள் வந்தனர். அவர்களுடன் தொழுகையை இவர் மீண்டும் தொழ வேண்டுமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் தொழுகையை மீண்டும் தொழ வேண்டியதில்லை. அவர் தொழுகையை முடித்தபின் ஒருவர் வந்தார். அவர் தனக்கு மட்டுமே தொழுது கொள்ளட்டும் என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகின்றார்கள்.


قَالَ يَحيَى: وَسُئِلَ مَالِكٌ عَن مُؤَذِّنٍ أَذَّنَ لِقَوْمٍ، ثُمَّ انْتَظَرَ هَلْ يَأْتِيهِ أَحَدٌ؟ فَلَمْ يَأْتِهِ أَحَدٌ، فَأَقَامَ الصَّلاَةَ، وَصَلَّى وَحْدَهُ، ثُمَّ جَاءَ النَّاسُ بَعْدَ أَنْ فَرَغَ، أَيُعِيدُ الصَّلاَةَ مَعَهُمْ؟ قَالَ: لاَ يُعِيدُ الصَّلاَةَ، وَمَنْ جَاءَ بَعْدَ انْصِرَافِهِ، فَلْيُصَلِّ لِنَفْسِهِ وَحْدَهُ.


Muwatta-Malik-184

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

184. பாங்கு கூறுபவர் மக்களுக்கு பாங்கு கூறுகிறார். பின்பு நபில் தொழுகிறார். அப்போது மக்களோ அது அல்லாத மற்றொரு இகாமத் மூலம் தொழுதிட விரும்புகிறார்கள். (இது சரியா) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அதனால் குற்றமில்லை. அவரின் இகாமத்தும், அவர் அல்லாத இகாமத்தும் சமமானதே! என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.


قَالَ يَحيَى: وَسُئِلَ مَالِكٌ عَن مُؤَذِّنٍ أَذَّنَ لِقَوْمٍ، ثُمَّ تَنَفَّلَ، فَأَرَادُوا أَنْ يُصَلُّوا بِإِقَامَةِ غَيْرِهِ؟ فَقَالَ: لاَ بَأْسَ بِذَلِكَ، إِقَامَتُهُ وَإِقَامَةُ غَيْرِهِ سَوَاءٌ.


Muwatta-Malik-185

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

185. பஜ்ர் நேரம் தோன்றும் முன்பே சுப்ஹு தொழுகைக்காக பாங்கு கூறுவது இருந்து வந்தது. சுப்ஹு அல்லாத மற்றத் தொழுகைகளில் அவர்களின் நேரம் வந்த பின்பே தவிர பாங்கு கூறுவதை நாம் பார்த்ததில்லை என மாலிக் (ரஹ்) கூறியதாக யஹ்யா கூறுகிறார்கள்.


قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: لَمْ تَزَلِ الصُّبْحُ يُنَادَى لَهَا قَبْلَ الْفَجْرِ، فَأَمَّا غَيْرُهَا مِنَ الصَّلَوَاتِ، فَإِنَّا لَمْ نَرَهَا يُنَادَى لَهَا، إِلاَّ بَعْدَ أَنْ يَحِلَّ وَقْتُهَا.


Muwatta-Malik-192

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

192. பயணம் செய்பவர் பாங்கு கூறுவது குற்றமில்லை என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா கூறுகின்றார்கள்.


قَالَ يَحيَى: سَمِعْتُ مَالِكًا يَقُولُ: لاَ بَأْسَ أَنْ يُؤَذِّنَ الرَّجُلُ وَهُوَ رَاكِبٌ.


Muwatta-Malik-204

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

204. (தொழுகையில்) இமாமுடன் ஒருவர் சேர்கிறார். ஆரம்பத் தக்பீரையும், ருகூஉ வின் தக்பீரையும் மறந்து, ஒரு ரக்அத்தை தொழுதும் முடிக்கிறார். பின்பு தான் தக்பீர் கூறாததை நினைவு கூர்கிறார். இரண்டாவது ரக்அத்திலும் தக்பீர் கூறிக் கொள்ளலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. தன் தொழுகையை அவர்மீண்டும் ஆரம்பிப்பதே எனக்கு மிக விருப்பமானதாகும். மேலும் ஆரம்ப தக்பீரை இமாமுடன் சேர்ந்தவர் மறந்து, முதல் ருகூஉ வின் தக்பீர் கூறினால், ஆரம்ப தக்பீருக்கும் சேர்த்து அவர் (நிய்யத்) எண்ணி இருந்தால் அதுவே அவருக்குப் போதுமாகும் என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ دَخَلَ مَعَ الإِمَامِ، فَنَسِيَ تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ، وَتَكْبِيرَةَ الرُّكُوعِ، حَتَّى صَلَّى رَكْعَةً، ثُمَّ ذَكَرَ أَنَّهُ لَمْ يَكُنْ كَبَّرَ تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ، وَلاَ عِنْدَ الرُّكُوعِ، وَكَبَّرَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ؟ قَالَ: يَبْتَدِئُ صَلاَتَهُ أَحَبُّ إِلَيَّ، وَلَوْ سَهَا مَعَ الإِمَامِ عَن تَكْبِيرَةِ الاِفْتِتَاحِ، وَكَبَّرَ فِي الرُّكُوعِ الأَوَّلِ، رَأَيْتُ ذَلِكَ مُجْزِيًا عَنهُ، إِذَا نَوَى بِهَا تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ.


Muwatta-Malik-205

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

205. தனித்துத் தொழுபவர் ஆரம்பத் தக்பீரை மறந்து விட்டால், அவர்தன் தொழுகையை முழுமைப்படுத்துவார் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


قَالَ مَالِكٌ فِي الَّذِي يُصَلِّي لِنَفْسِهِ فَنَسِيَ تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ: إِنَّهُ يَسْتَأْنِفُ صَلاَتَهُ.


Muwatta-Malik-206

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

206. ஆரம்ப தக்பீர் கூறாமல், தொழுதும் முடித்த இமாமும் அவருக்குப் பின்னாலுள்ளோரும் தொழுகையை திருப்பித் தொழ வேண்டும். இமாமுக்கு பின்னுள்ளோர் தக்பீர் கூறி இருந்தாலும் அவர்களும் திருப்பித் தொழ வேண்டும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


وقَالَ مَالِكٌ فِي الإِمَامِ يَنْسَى تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ حَتَّى يَفْرُغَ مِنْ صَلاَتِهِ، قَالَ: أَرَى أَنْ يُعِيدَ، وَيُعِيدُ مَنْ خَلْفَهُ الصَّلاَةَ، وَإِنْ كَانَ مَنْ خَلْفَهُ قَدْ كَبَّرُوا فَإِنَّهُمْ يُعِيدُونَ.


Muwatta-Malik-229

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

229. இமாமுக்குப் பின்னே அவர் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் ஒருவர் சேர்ந்தால் அவர்ஓத வேண்டும். சப்தமிட்டு தொழும் தொழுகையில் ஓதுவதை விட்டு விட வேண்டும் என்பதே எம்மிடம் உள்ள சட்டமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறி தான் கேட்டதாக யஹ்யா கூறுகிறார்கள்.


قَالَ يَحيَى: سَمِعْتُ مَالِكًا يَقُولُ: الأَمْرُ عِنْدَنَا، أَنْ يَقْرَأَ الرَّجُلُ وَرَاءَ الإِمَامِ، فِيمَا لاَ يَجْهَرُ فِيهِ الإِمَامُ بِالْقِرَاءَةِ، وَيَتْرُكُ الْقِرَاءَةَ فِيمَا يَجْهَرُ فِيهِ الإِمَامُ بِالْقِرَاءَةِ.


Muwatta-Malik-246

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

246. ருகூஉவில் அல்லது ஸஜ்தாவில் இமாமுக்கு முன்னால் தன் தலையை மறந்து உயர்த்துபவன் விஷயத்தில் (பின்வருமாறு) மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ருகூஉவில் இமாமுக்கு மன் தன் தலையை உயர்த்தியவன் இமாமை எதிர் பார்க்காமல் திரும்பவும் ருகூஉவுக்குச் செல்லட்டும். இதுபோலவே ஸஜ்தாவிலும் செய்யட்டும். இதுவே சுன்னத்.

இமாமை முந்தி அவன் செய்தது தவறாகும். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள், இமாமை ஏற்படுத்தப்பட்டுள்ளது, அவரைப் பின்பற்றுவதற்காகவே. எனவே, அவருக்கு மாறு செய்யாதீர்கள் என்று கூறி உள்ளார்கள். மேலும் அபூஹுரைரா(ரலி) அவர்கள், ”இமாமுக்கு முன் தன் தலையை உயர்த்துபவன் அல்லது தாழ்த்துபவனின் முன் நெற்றி முடி ஷைத்தானின் கைப்பிடியில் உள்ளது” என்று கூறியுள்ளார்கள்.


قَالَ مَالِكٌ فِيمَنْ سَهَا فَرَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ فِي رُكُوعٍ أَوْ سُجُودٍ: إِنَّ السُّنَّةَ فِي ذَلِكَ، أَنْ يَرْجِعَ رَاكِعًا أَوْ سَاجِدًا، وَلاَ يَنْتَظِرُ الإِمَامَ، وَذَلِكَ خَطَأٌ مِمَّنْ فَعَلَهُ، لأَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَلاَ تَخْتَلِفُوا عَلَيْهِ، وَقَالَ أَبُو هُرَيْرَةَ: الَّذِي يَرْفَعُ رَأْسَهُ وَيَخْفِضُهُ قَبْلَ الإِمَامِ، إِنَّمَا نَاصِيَتُهُ بِيَدِ شَيْطَانٍ.


Next Page » « Previous Page