Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-136

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

136. தயம்மும் செய்த ஒருவர், ஒளுச் செய்துள்ள தன் தோழர்களுக்கு இமாமத் செய்யலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர் அல்லாத மற்றொருவர் அவர்களுக்கு இமாமத் செய்வதே எனக்கு விருப்பமானதாகும். அவர்களுக்கு இவர் இமாமத் செய்தால் அதை குற்றமாக நான் கருதவில்லை”” என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ تَيَمَّمَ أَيَؤُمُّ أَصْحَابَهُ وَهُمْ عَلَى وُضُوءٍ؟ قَالَ: يَؤُمُّهُمْ غَيْرُهُ أَحَبُّ إِلَيَّ، وَلَوْ أَمَّهُمْ هُوَ لَمْ أَرَ بِذَلِكَ بَأْسًا.


Muwatta-Malik-137

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

137. ஒருவர் தண்ணீர் கிடைக்காமல் தயம்மும் செய்து, எழுந்து, தக்பீர் கூறி, தொழ ஆரம்பித்து விட்டார். அதுசமயம் தண்ணீருடன் ஒருவன் வருகிறான். (அப்போது இவர் தன் தொழுகையை முறிக்க வேண்டுமா?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர் தன் தொழுகையை முறிக்க வேண்டாம். எனினும் தயம்மும் மூலமே அதைப் பூர்த்தி செய்து விட்டு, அடுத்து வரும் தொழுகைகளுக்காக ஒளுச் செய்ய வேண்டும்”” என்று பதிலளித்தார்கள்.


قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: فِي رَجُلٍ تَيَمَّمَ حِينَ لَمْ يَجِدْ الْمَاءَ، فَقَامَ وَكَبَّرَ، وَدَخَلَ فِي الصَّلاَةِ، فَطَلَعَ عَلَيْهِ إِنْسَانٌ مَعَهُ مَاءٌ؟ قَالَ: لاَ يَقْطَعُ صَلاَتَهُ، بَلْ يُتِمُّهَا بِالتَّيَمُّمِ، وَلْيَتَوَضَّأْ لِمَا يُسْتَقْبَلُ مِنَ الصَّلَوَاتِ.


Muwatta-Malik-138

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

138. ஒருவர் தொழுகைக்காக தயாராகி தண்ணீர் கிடைக்கவில்லை. அது சமயம் தயம்மும் செய்தல் என்ற அல்லாஹ்வின் சட்டத்தைச் செய்தால் அவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு விட்டார். தண்ணீர் பெற்றவன் தயம்மும் செய்தவனை விட அதிகத் தூய்மை ஆனவன் என்பதும், பூரணமான தொழுகையுடையவன் என்பதுமில்லை. ஏனெனில், இரு காரியங்களும் இறைவனால் உத்தரவிடப்பட்டவையே! ஒவ்வொரு அமல்களும் அல்லாஹ்வின் கட்டளையின் படியே உள்ளதாகும். தண்ணீர் கிடைத்தால் ஒளுச் செய்வது என்பதும், தொழ ஆரம்பிக்கு முன் தண்ணீர் கிடைக்கவில்லையானால் தயம்மும் செய்வது என்பதும் அல்லாஹ் ஏவிய கடமைகள் தான் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: مَنْ قَامَ إِلَى الصَّلاَةِ فَلَمْ يَجِدْ مَاءً، فَعَمِلَ بِمَا أَمَرَهُ اللهُ بِهِ مِنَ التَّيَمُّمِ، فَقَدْ أَطَاعَ اللهَ، وَلَيْسَ الَّذِي وَجَدَ الْمَاءَ بِأَطْهَرَ مِنْهُ، وَلاَ أَتَمَّ صَلاَةً، لأَنَّهُمَا أُمِرَا جَمِيعًا، فَكُلٌّ عَمِلَ بِمَا أَمَرَهُ اللهُ بِهِ، وَإِنَّمَا الْعَمَلُ بِمَا أَمَرَ اللهُ بِهِ مِنَ الْوُضُوءِ لِمَنْ وَجَدَ الْمَاءَ، وَالتَّيَمُّمِ لِمَنْ لَمْ يَجِدِ الْمَاءَ، قَبْلَ أَنْ يَدْخُلَ فِي الصَّلاَةِ.


Muwatta-Malik-139

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

139.


وقَالَ مَالِكٌ فِي الرَّجُلِ الْجُنُبِ: إِنَّهُ يَتَيَمَّمُ وَيَقْرَأُ حِزْبَهُ مِنَ الْقُرْآنِ، وَيَتَنَفَّلُ، مَا لَمْ يَجِدْ مَاءً، وَإِنَّمَا ذَلِكَ فِي الْمَكَانِ الَّذِي يَجُوزُ لَهُ أَنْ يُصَلِّيَ فِيهِ بِالتَّيَمُّمِ.


Muwatta-Malik-142

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

142. தயம்மும் செய்வது எப்படி? அதை எதில் செய்வது? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”தன் முகத்துக்காக ஒரு முறையும், கைகளுக்காக ஒரு முறையும் (மண்ணில்) அடித்து முழங்கை உட்பட அவ்விரண்டையும் மஸஹு செய்வது என பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ كَيْفَ التَّيَمُّمُ وَأَيْنَ يَبْلُغُ بِهِ؟ فَقَالَ: يَضْرِبُ ضَرْبَةً لِلْوَجْهِ، وَضَرْبَةً لِلْيَدَيْنِ، وَيَمْسَحُهُمَا إِلَى الْمِرْفَقَيْنِ.


Muwatta-Malik-144

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

144. பயணத்தில் உள்ள ஒருவர் கனவில் விந்து வெளியாகிறது. ஒளுவிற்குரிய அளவுக்கே தவிர தண்ணீர் அவரிடம் இல்லை. வேறு தண்ணீர் கிடைக்கும் வரை அவன் தாகித்தும் இருக்க முடியாது. (இப்போது அவர் என்ன செய்வது?) என்று கேட்டதற்கு, ”அந்த தண்ணீர் மூலம் தன் மறைவுறுப்பையும், அதில் உள்ள அசுத்தத்தையும் கழுவுவார். பின்பு அல்லாஹ் கட்டளையிட்டது போல் தூய்மையான மண்ணால் தயம்மும் செய்வார்”” என்று மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


قَالَ مَالِكٌ: فِيمَنِ احْتَلَمَ وَهُوَ فِي سَفَرٍ وَلاَ يَقْدِرُ عَلَى الْمَاءِ، إِلاَّ قَدْرَ الْوُضُوءِ وَهُوَ لاَ يَعْطَشُ حَتَّى يَأْتِيَ الْمَاءَ، قَالَ: يَغْسِلُ بِذَلِكَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ مِنْ ذَلِكَ الأَذَى، ثُمَّ يَتَيَمَّمُ صَعِيدًا طَيِّبًا كَمَا أَمَرَهُ اللهُ.


Muwatta-Malik-145

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

145. குளிப்புக்கடமையான ஒருவர் தயம்மும் செய்ய விரும்புகிறார். உப்பு மண்ணைத் தவிர வேறு மண்ணை அவர் பெற்றுக் கொள்ளவில்லை. இவர் உப்பு மண் மூலம் தயம்மும் செய்யலாமா? உப்பு மணலில் தொழுவது வெறுக்கத்தக்க செயலா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”உப்பு மண்ணில் தொழுவதோ, அதில் தயம்மும் செய்வதோ குற்றமில்லை, ஏனெனில், தூய்மையான மண்ணால் தயம்மும் செய்யுங்கள்”” என்று தான் அல்லாஹ் கூறியுள்ளான். உப்பு மண்ணாயினும், அது அல்லாததாயினும் தூய்மையான அனைத்திலும் அவன் தயம்மும் செய்யலாம்”” என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ جُنُبٍ، أَرَادَ أَنْ يَتَيَمَّمَ فَلَمْ يَجِدْ تُرَابًا إِلاَّ تُرَابَ سَبَخَةٍ، هَلْ يَتَيَمَّمُ بِالسِّبَاخِ؟ وَهَلْ تُكْرَهُ الصَّلاَةُ فِي السِّبَاخِ؟.
قَالَ مَالِكٌ: لاَ بَأْسَ بِالصَّلاَةِ فِي السِّبَاخِ وَالتَّيَمُّمِ مِنْهَا، لأَنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ: {فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا} فَكُلُّ مَا كَانَ صَعِيدًا فَهُوَ يُتَيَمَّمُ بِهِ سِبَاخًا كَانَ أَوْ غَيْرَهُ.


Muwatta-Malik-152

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

152. மாதவிடாய்க் காரி சுத்தமாகின்றாள். தண்ணீரை அவள் பெறவில்லை. தயம்மும் செய்யலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆம்! அவள் தயம்மும் செய்யலாம். அவள், தண்ணீர் கிடைக்காமல் தயம்மும் செய்யும் குளிப்புக் கடமையானவன் போலாவாள் என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ: عَنِ الْحَائِضِ تَطْهُرُ فَلاَ تَجِدُ مَاءً، هَلْ تَتَيَمَّمُ؟ قَالَ: نَعَمْ لِتَتَيَمَّمْ، فَإِنَّ مِثْلَهَا مِثْلُ الْجُنُبِ إِذَا لَمْ يَجِدْ مَاءً تَيَمَّمَ.


Muwatta-Malik-162

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

162. தொடர் இரத்தப் போக்கு உள்ள பெண் தொழுது விட்டால், அவளின் கணவனுக்கு அவளிடம் உடலுறவு கொள்வது கூடும். இவ்வாறே, குழந்தை பெற்ற பெண்கள், அவளுக்கு வெளிப்படும் இரத்தம் முடியும் நாள் அடைந்ததும், அதன் பின்னும் ரத்தத்தை அவள் பார்த்தால், அவளை அவளது கணவன் உடலுறவு கொள்ளலாம். அவள், இரத்தப் போக்குடையவளின் நிலையில் உள்ளவள் ஆவாள். இதுவே எம்மிடம் உள்ள சட்டமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா கூறுகின்றார்கள்.


قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: الأَمْرُ عِنْدَنَا، أَنَّ الْمُسْتَحَاضَةَ إِذَا صَلَّتْ، أَنَّ لِزَوْجِهَا أَنْ يُصِيبَهَا، وَكَذَلِكَ النُّفَسَاءُ إِذَا بَلَغَتْ أَقْصَى مَا يُمْسِكُ النِّسَاءَ الدَّمُ، فَإِنْ رَأَتِ الدَّمَ بَعْدَ ذَلِكَ، فَإِنَّهُ يُصِيبُهَا زَوْجُهَا، وَإِنَّمَا هِيَ بِمَنْزِلَةِ الْمُسْتَحَاضَةِ.


Muwatta-Malik-163

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

163. ஹிஸாம் இப்னு உர்வா என்பவர் தன் தந்தை உர்வா வழியாக அறிவிக்கும் இந்த ஹதீஸே, நான் கேட்டதில் எனக்கு மிக விருப்பமானது. இரத்தப் போக்குடையவள் விஷயமாக நம்மிடமும் இதுவே சட்டமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: الأَمْرُ عِنْدَنَا فِي الْمُسْتَحَاضَةِ عَلَى حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، وَهُوَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ.


Next Page » « Previous Page