Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-168

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

168. சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் காரணமாக மறைவுறுப்பை கழுவியும், அதிலே ஏதேனும் சிறிதளவு இருந்தால் என்ன செய்வது? என்பது பற்றி மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. முன் சென்றோரில் சிலர், மலம் கழித்தல் காரணமாக ஒளுச் செய்தார்கள். நான் சிறுநீர் காரணமாக மறைவுறுப்பைக் கழுவுவதையே விரும்புகின்றேன் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறியதாக யஹ்யா கூறுகிறார்கள்.


قَالَ يَحيَى: وَسُئِلَ مَالِكٌ، عَن غَسْلِ الْفَرْجِ مِنَ الْبَوْلِ وَالْغَائِطِ، هَلْ جَاءَ فِيهِ أَثَرٌ؟ فَقَالَ: بَلَغَنِي أَنَّ بَعْضَ مَنْ مَضَى كَانُوا يَتَوَضَّؤُونَ مِنَ الْغَائِطِ، وَأَنَا أُحِبُّ أَنْ أَغْسِلَ الْفَرْجَ مِنَ الْبَوْلِ.


Muwatta-Malik-179

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

179. ஜும்ஆ நாளில், நேரம் வரும் முன்னர் பாங்கு கூறுவது கூடுமா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, சூரியன் உச்சிக்கு வந்தப் பின்னாலேயே தவிர கூடாது என்று கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَنِ النِّدَاءِ يَوْمَ الْجُمُعَةِ، هَلْ يَكُونُ قَبْلَ أَنْ يَحِلَّ الْوَقْتُ؟ فَقَالَ: لاَ يَكُونُ إِلاَّ بَعْدَ أَنْ تَزُولَ الشَّمْسُ.


Muwatta-Malik-180

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

180. பாங்கு இகாமத்தில் இரண்டிரண்டு வாசகங்களாக கூறுவது பற்றி கேட்கப்பட்டதற்கு, மதீனாவாசிகள் பாங்கு – இகாமத் விஷயத்தில் கடைபிடிப்பதே எனக்கு செய்தியாகக் கிடைத்தது. இகாமத்தின் வாசகம் இரண்டிரண்டாகக் கூறப்படக் கூடாது. இது தான் நம் ஊர் அறிஞர்களின் நிலையாகும்.

தொழுகைக்காக இகாமத் கூறப்படும் போது மக்கள் எழுவது என்பது. இது விஷயமாக இதற்கான அளவு எதையும் நான் கேட்கவில்லை. எனினும் இதில் மக்களுக்கு இயலும் நிலை தான் நேரம் என்றே கருதுகின்றேன். காரணம் அவர்களில் வலிமையானவரும், பலவீனரும் உள்ளனர். ஒரே மனிதன் போல் எல்லோரும் இருக்க இயல மாட்டார்கள் என்று மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن تَثْنِيَةِ الأَذَانِ وَالإِقَامَةِ، وَمَتَى يَجِبُ الْقِيَامُ عَلَى النَّاسِ حِينَ تُقَامُ الصَّلاَةُ؟ فَقَالَ: لَمْ يَبْلُغْنِي فِي النِّدَاءِ وَالإِقَامَةِ إِلاَّ مَا أَدْرَكْتُ النَّاسَ عَلَيْهِ، فَأَمَّا الإِقَامَةُ، فَإِنَّهَا لاَ تُثَنَّى، وَذَلِكَ الَّذِي لَمْ يَزَلْ عَلَيْهِ أَهْلُ الْعِلْمِ بِبَلَدِنَا،

وَأَمَّا قِيَامُ النَّاسِ حِينَ تُقَامُ الصَّلاَةُ، فَإِنِّي لَمْ أَسْمَعْ فِي ذَلِكَ بِحَدٍّ يُقَامُ لَهُ، إِلاَّ أَنِّي أَرَى ذَلِكَ عَلَى قَدْرِ طَاقَةِ النَّاسِ، فَإِنَّ مِنْهُمُ الثَّقِيلَ وَالْخَفِيفَ، وَلاَ يَسْتَطِيعُونَ أَنْ يَكُونُوا كَرَجُلٍ وَاحِدٍ.


Muwatta-Malik-181

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

181. பர்ளான தொழுகையை நிறைவேற்ற தயாராகும் சிலர் பாங்கு கூறாமல், இகாமத் மட்டும் கூறுவதை விரும்புகிறார்கள் (சரியா) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதுவே அவர்களுக்கு போதும். தொழுகைக்காக ஒன்று கூடப்படும் பள்ளிவாசல்களில் தான் பாங்கு கூறுவது கடமையாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن قَوْمٍ حُضُورٍ أَرَادُوا أَنْ يَجْمَعُوا الْمَكْتُوبَةَ، فَأَرَادُوا أَنْ يُقِيمُوا وَلاَ يُؤَذِّنُوا؟ قَالَ مَالِكٌ: ذَلِكَ مُجْزِئٌ عَنهُمْ، وَإِنَّمَا يَجِبُ النِّدَاءُ فِي مَسَاجِدِ الْجَمَاعَاتِ الَّتِي تُجْمَعُ فِيهَا الصَّلاَةُ.


Muwatta-Malik-182

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

182. பாங்கு கூறுபவர், இமாமிடம் ஸலாம் கூறுவது பற்றியும், தொழுகைக்கு அவரை அவர் அழைப்பது பற்றியும், பாங்கு கூறுபவர் எவருக்கு ஸலாம் கொடுப்பவரே யார் முதன்மையானவர்? என்று மாலிக் (ரஹ்) கேட்கப்பட்டதற்கு, முந்திய காலத்தில் ஸலாம் கூறியது இருந்ததாக எனக்கு தொரியவில்லை என்று கூறினார்கள்.

 


وَسُئِلَ مَالِكٌ عَن تَسْلِيمِ الْمُؤَذِّنِ عَلَى الإِمَامِ، وَدُعَائِهِ إِيَّاهُ لِلصَّلاَةِ، وَمَنْ أَوَّلُ مَنْ سُلِّمَ عَلَيْهِ؟ فَقَالَ: لَمْ يَبْلُغْنِي أَنَّ التَّسْلِيمَ كَانَ فِي الزَّمَانِ الأَوَّلِ.


Muwatta-Malik-183

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

183. பாங்கு கூறுபவர், மக்களுக்கு பாங்கு கூறுகிறார். பின்பு எவரேனும் அவரிடம் வருவாரா? என எதிர்பார்க்கிறார். ஆனால் அவரிடம் எவரும் வரவில்லை. உடனே தொழுகைக்கு அவர் இகாமத் கூறி, தனித்துத் தொழுகிறார். பின்பு அவர் தொழுகையை முடித்த பின் மக்கள் வந்தனர். அவர்களுடன் தொழுகையை இவர் மீண்டும் தொழ வேண்டுமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் தொழுகையை மீண்டும் தொழ வேண்டியதில்லை. அவர் தொழுகையை முடித்தபின் ஒருவர் வந்தார். அவர் தனக்கு மட்டுமே தொழுது கொள்ளட்டும் என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகின்றார்கள்.


قَالَ يَحيَى: وَسُئِلَ مَالِكٌ عَن مُؤَذِّنٍ أَذَّنَ لِقَوْمٍ، ثُمَّ انْتَظَرَ هَلْ يَأْتِيهِ أَحَدٌ؟ فَلَمْ يَأْتِهِ أَحَدٌ، فَأَقَامَ الصَّلاَةَ، وَصَلَّى وَحْدَهُ، ثُمَّ جَاءَ النَّاسُ بَعْدَ أَنْ فَرَغَ، أَيُعِيدُ الصَّلاَةَ مَعَهُمْ؟ قَالَ: لاَ يُعِيدُ الصَّلاَةَ، وَمَنْ جَاءَ بَعْدَ انْصِرَافِهِ، فَلْيُصَلِّ لِنَفْسِهِ وَحْدَهُ.


Muwatta-Malik-184

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

184. பாங்கு கூறுபவர் மக்களுக்கு பாங்கு கூறுகிறார். பின்பு நபில் தொழுகிறார். அப்போது மக்களோ அது அல்லாத மற்றொரு இகாமத் மூலம் தொழுதிட விரும்புகிறார்கள். (இது சரியா) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அதனால் குற்றமில்லை. அவரின் இகாமத்தும், அவர் அல்லாத இகாமத்தும் சமமானதே! என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.


قَالَ يَحيَى: وَسُئِلَ مَالِكٌ عَن مُؤَذِّنٍ أَذَّنَ لِقَوْمٍ، ثُمَّ تَنَفَّلَ، فَأَرَادُوا أَنْ يُصَلُّوا بِإِقَامَةِ غَيْرِهِ؟ فَقَالَ: لاَ بَأْسَ بِذَلِكَ، إِقَامَتُهُ وَإِقَامَةُ غَيْرِهِ سَوَاءٌ.


Muwatta-Malik-185

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

185. பஜ்ர் நேரம் தோன்றும் முன்பே சுப்ஹு தொழுகைக்காக பாங்கு கூறுவது இருந்து வந்தது. சுப்ஹு அல்லாத மற்றத் தொழுகைகளில் அவர்களின் நேரம் வந்த பின்பே தவிர பாங்கு கூறுவதை நாம் பார்த்ததில்லை என மாலிக் (ரஹ்) கூறியதாக யஹ்யா கூறுகிறார்கள்.


قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: لَمْ تَزَلِ الصُّبْحُ يُنَادَى لَهَا قَبْلَ الْفَجْرِ، فَأَمَّا غَيْرُهَا مِنَ الصَّلَوَاتِ، فَإِنَّا لَمْ نَرَهَا يُنَادَى لَهَا، إِلاَّ بَعْدَ أَنْ يَحِلَّ وَقْتُهَا.


Muwatta-Malik-192

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

192. பயணம் செய்பவர் பாங்கு கூறுவது குற்றமில்லை என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா கூறுகின்றார்கள்.


قَالَ يَحيَى: سَمِعْتُ مَالِكًا يَقُولُ: لاَ بَأْسَ أَنْ يُؤَذِّنَ الرَّجُلُ وَهُوَ رَاكِبٌ.


Muwatta-Malik-204

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

204. (தொழுகையில்) இமாமுடன் ஒருவர் சேர்கிறார். ஆரம்பத் தக்பீரையும், ருகூஉ வின் தக்பீரையும் மறந்து, ஒரு ரக்அத்தை தொழுதும் முடிக்கிறார். பின்பு தான் தக்பீர் கூறாததை நினைவு கூர்கிறார். இரண்டாவது ரக்அத்திலும் தக்பீர் கூறிக் கொள்ளலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. தன் தொழுகையை அவர்மீண்டும் ஆரம்பிப்பதே எனக்கு மிக விருப்பமானதாகும். மேலும் ஆரம்ப தக்பீரை இமாமுடன் சேர்ந்தவர் மறந்து, முதல் ருகூஉ வின் தக்பீர் கூறினால், ஆரம்ப தக்பீருக்கும் சேர்த்து அவர் (நிய்யத்) எண்ணி இருந்தால் அதுவே அவருக்குப் போதுமாகும் என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ دَخَلَ مَعَ الإِمَامِ، فَنَسِيَ تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ، وَتَكْبِيرَةَ الرُّكُوعِ، حَتَّى صَلَّى رَكْعَةً، ثُمَّ ذَكَرَ أَنَّهُ لَمْ يَكُنْ كَبَّرَ تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ، وَلاَ عِنْدَ الرُّكُوعِ، وَكَبَّرَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ؟ قَالَ: يَبْتَدِئُ صَلاَتَهُ أَحَبُّ إِلَيَّ، وَلَوْ سَهَا مَعَ الإِمَامِ عَن تَكْبِيرَةِ الاِفْتِتَاحِ، وَكَبَّرَ فِي الرُّكُوعِ الأَوَّلِ، رَأَيْتُ ذَلِكَ مُجْزِيًا عَنهُ، إِذَا نَوَى بِهَا تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ.


Next Page » « Previous Page