Category: நஸாயி

Nasaayi-5089

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

மருதாணி பெண்களே வைக்கவேண்டும்.

5089. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, தனது கையை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையில் கடிதம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள், அவரின் கையைப் பிடித்தார்கள். அதற்கு அந்தப்பெண், அல்லாஹ்வின் தூதரே! நான் என் கையில் வைத்திருந்த கடிதத்தை நீட்டினேன். அதை நீங்கள் வாங்கிக்கொள்ளவில்லையே! (ஏன்?) என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், இது ஆணின் கரமா? அல்லது பெண்ணின் கரமா? என்று எனக்குத் தெரியவில்லையே! என்று கூறினார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்ணின் கரம்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை மருதாணி (போன்றதைக்) கொண்டு மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.


أَنَّ امْرَأَةً، مَدَّتْ يَدَهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكِتَابٍ فَقَبَضَ يَدَهُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، مَدَدْتُ يَدِي إِلَيْكَ بِكِتَابٍ فَلَمْ تَأْخُذْهُ، فَقَالَ: «إِنِّي لَمْ أَدْرِ أَيَدُ امْرَأَةٍ هِيَ أَوْ رَجُلٍ» قَالَتْ: بَلْ يَدُ امْرَأَةٍ، قَالَ: «لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ بِالْحِنَّاءِ»


Nasaayi-4009

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4009.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் அவனை மட்டும் வணங்கியும் தொழுகையை நிலைநாட்டியும் ஸகாத்தைக் கொடுத்தும் பெரும்பாவங்களைச் செய்யாமல் (மறுமையில்) வருபவருக்கு சொர்க்கம் கிடைக்கும்.

அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி)


«مَنْ جَاءَ يَعْبُدُ اللَّهَ، وَلَا يُشْرِكُ بِهِ شَيْئًا، وَيُقِيمُ الصَّلَاةَ، وَيُؤْتِي الزَّكَاةَ، وَيَجْتَنِبُ الْكَبَائِرَ كَانَ لَهُ الْجَنَّةُ» فَسَأَلُوهُ عَنِ الْكَبَائِرِ، فَقَالَ: «الْإِشْرَاكُ بِاللَّهِ، وَقَتْلُ النَّفْسِ الْمُسْلِمَةِ، وَالْفِرَارُ يَوْمَ الزَّحْفِ»


Nasaayi-1600

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1600.

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தொழுகையை (உங்கள்) வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப் (ரஹ்)


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْمَغْرِبِ فِي مَسْجِدِ بَنِي عَبْدِ الْأَشْهَلِ، فَلَمَّا صَلَّى قَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِهَذِهِ الصَّلَاةِ فِي الْبُيُوتِ»


Nasaayi-1598

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 20

இரவிலும், பகலிலும் உபரியானத் தொழுகையைத் தொழுதல்.

பாடம்:

இல்லங்களில் (சிலதொழுகைகளைத்) தொழுவதற்கு வந்துள்ள தூண்டலும், அதன்  சிறப்பும்.

1598. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் (உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத்) தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«صَلُّوا فِي بُيُوتِكُمْ وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Nasaayi-2189

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2189. ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஒருநாள் அது ரமளானின் முதல் நாளா? அல்லது ஷஅபான் மாதத்தின் இறுதி நாளா? என சந்தேகத்திற்குரிய நாளில் இக்ரிமா (ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ரொட்டி, காய்கறி, பால் ஆகியவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (என்னைப் பார்த்ததும்) ‘சாப்பிட வாருங்கள்’ என்று அழைத்தார்கள். அதற்கு, நான் நோன்பு வைத்துள்ளேன் என்று சொன்னேன். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, (இந்த நாள் சந்தேகத்திற்குரிய நாள்; இந்த நாளில் நோன்பு வைக்கக் கூடாது. ஆகவே) நீ நோன்பை விட்டுவிட வேண்டும் என வலியுறுத்திக் கூறினார்கள். (அவர்கள் ஆணையிட்டுக் கூறியதைக் கண்டு) நான், ஸுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) என இரண்டு முறை கூறினேன். அவர்கள் இன்ஷா அல்லாஹ்! (அல்லாஹ் நாடினால்) என்று கூறாமல் சத்தியம் செய்வதை நான் கண்டபோது, நான் (அவர்கள்) முன்னால் சென்று, ‘தற்போது (நீங்கள் கூறும் கூற்றிற்கு) உங்களிடம் உள்ள (ஆதாரத்)தைக் கொடுங்கள்’ என்று கேட்டேன்.

அதற்கவர்கள், “(ரமளான் முதல்) பிறையைக் கண்டு நோன்பு வையுங்கள். (அடுத்த மாதம் ஷவ்வால்) பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கும், பிறை காண்பதற்குமிடையே மேகமூட்டமோ, இருளோ குறுக்கிடுமானால் ஷஅபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பது நாள்களாக நிறைவு செய்யுங்கள்.

ரமளான்

دَخَلْتُ عَلَى عِكْرِمَةَ فِي يَوْمٍ قَدْ أُشْكِلَ مِنْ رَمَضَانَ هُوَ أَمْ مِنْ شَعْبَانَ، وَهُوَ يَأْكُلُ خُبْزًا وَبَقْلًا وَلَبَنًا، فَقَالَ لِي: هَلُمَّ، فَقُلْتُ: إِنِّي صَائِمٌ، قَالَ وَحَلَفَ بِاللَّهِ: لَتُفْطِرَنَّ، قُلْتُ: سُبْحَانَ اللَّهِ مَرَّتَيْنِ، فَلَمَّا رَأَيْتُهُ يَحْلِفُ لَا يَسْتَثْنِي تَقَدَّمْتُ قُلْتُ: هَاتِ الْآنَ مَا عِنْدَكَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَ بَيْنَكُمْ وَبَيْنَهُ سَحَابَةٌ أَوْ ظُلْمَةٌ، فَأَكْمِلُوا الْعِدَّةَ عِدَّةَ شَعْبَانَ، وَلَا تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالًا، وَلَا تَصِلُوا رَمَضَانَ بِيَوْمٍ مِنْ شَعْبَانَ»


Nasaayi-2110

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2110.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِامْرَأَةٍ مِنَ الْأَنْصَارِ: «إِذَا كَانَ رَمَضَانُ فَاعْتَمِرِي فِيهِ، فَإِنَّ عُمْرَةً فِيهِ تَعْدِلُ حَجَّةً»


Nasaayi-5067

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தாடியில் முடிச்சுப் போடுவது.

5067. ருவைஃபிஉ பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ருவைபிஃஉவே! எனக்கு பின் உன் வாழ்நாள் நீடிக்கலாம்! அப்போது நீர் மக்களிடம், “யார் ‎தனது தாடிக்கு முடிச்சுப் போட்டு கொள்கின்றாரோ அல்லது யார் கயிற்றை கழுத்தில் (தாயத் போன்று) மாலையாக போட்டுக் கொள்கிறாரோ அல்லது யார் மிருகங்களின் விட்டை அல்லது எலும்பைக் கொண்டு (மலம் கழித்தப் பின்) சுத்தம் செய்கின்றாரோ நிச்சயமாக அவரிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்கள் விலகி ‎விட்டார்கள் என்று அறிவித்துவிடுக!‎ என்று கூறினார்கள்.


«يَا رُوَيْفِعُ، لَعَلَّ الْحَيَاةَ سَتَطُولُ بِكَ بَعْدِي، فَأَخْبِرِ النَّاسَ أَنَّهُ مَنْ عَقَدَ لِحْيَتَهُ، أَوْ تَقَلَّدَ وَتَرًا، أَوْ اسْتَنْجَى بِرَجِيعِ دَابَّةٍ أَوْ عَظْمٍ، فَإِنَّ مُحَمَّدًا بَرِيءٌ مِنْهُ»


Next Page » « Previous Page