2597.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள; ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெற அனுமதியில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ، وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ»
2597.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள; ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெற அனுமதியில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ، وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ»
பாடம்:
அநாதைகளின் சொத்துக்களை (அநியாயமாக) உண்பதை விட்டு விலகியிருப்பது.
3671. “அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,
1 . “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . கஞ்சத்தனம் செய்வதும்,
3 . நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும்,
4 . வட்டியை உண்பதும்,
5 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
6 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
7 . கற்புள்ள அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَا هِيَ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالشُّحُّ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ»
பாடம்:
ஒருவருக்கு உளூச் செய்ய போதுமான தண்ணீரின் அளவு.
73. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள்; ஐந்து முத்து அளவுத் தண்ணீரில் குளிப்பார்கள்.
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَتَوَضَّأُ بِمَكُّوكٍ وَيَغْتَسِلُ بِخَمْسِ مَكَاكِيَّ»
பாடம்:
குளிப்புக் கடமையானவரின் சிறப்பு.
72. நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரே பாத்திரத்தில் (சேர்ந்து) குளிப்பேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْإِنَاءِ الْوَاحِدِ
71. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து (ஓரிடத்தில்) உளூச் செய்வார்கள்.
كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيعًا
பாடம்:
மாதவிடாய்ப் பெண் வாய் வைத்து, மீதம்வைத்த தண்ணீர்.
70. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள்.
كُنْتُ أَتَعَرَّقُ الْعَرْقَ «فَيَضَعُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاهُ حَيْثُ وَضَعْتُ وَأَنَا حَائِضٌ، وَكُنْتُ أَشْرَبُ مِنَ الْإِنَاءِ فَيَضَعُ فَاهُ حَيْثُ وَضَعْتُ وَأَنَا حَائِضٌ»
பாடம்:
கழுதை வாய் வைத்து மீதமுள்ள தண்ணீர்.
69. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் பொது அறிவிப்புச் செய்பவர் எங்களிடம் வந்து, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், உங்களை நாட்டுக்கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்கிறார்கள். ஏனெனில், அவை அசுத்தமானவையாகும்” என்று பொதுஅறிப்பு செய்தார்.
أَتَانَا مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَاكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ؛ فَإِنَّهَا رِجْسٌ»
பாடம்:
நாய் வாய் வைத்த பாத்திரத்தை மண்ணிட்டுக் கழுவுதல்.
67. அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْكِلَابِ، وَرَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ وَالْغَنَمِ وَقَالَ: إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ، وَعَفِّرُوهُ الثَّامِنَةَ بِالتُّرَابِ
பாடம்:
ஆலங்கட்டியால் உளூச் செய்தல்.
62. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் “அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வ ஆஃபிஹி, வஃ-ஃபு அன்ஹு, வ அக்ரிம் நுஸுலஹு, வ அவ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத், வ நக்கிஹீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ்” என்று ஓதுவதை நான் செவியேற்றேன்.
(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; இவருடைய பாவங்களை மாய்த்து இவரைக் காப்பாயாக! இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்ல தாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் கழுவி, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று தூய்மையாக்குவாயாக!)
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى مَيِّتٍ فَسَمِعْتُ مِنْ دُعَائِهِ وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَأَوْسِعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ»
பாடம்:
பனிக்கட்டியால் உளூச் செய்தல்.
61. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹும் மஃக்சில் கத்தாயாய பிமாஇஸ்ஸல்ஜி வவல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
(பொருள்: இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை கழுவுவாயாக! வெண்மையான ஆடையை, அழுக்கிலிருந்து நீ தூய்மைப்படுத்துவது போன்று என்னுடைய உள்ளத்தை தவறுகளிலிருந்து நீ தூய்மைப்படுத்துவாயாக!)
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ»
சமீப விமர்சனங்கள்