Category: நஸாயி

Nasaayi-19

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கழிவறைக்குள் நுழையும் போது கூறவேண்டிய சொல்.

19. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸ்” (பொருள்: இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” إِذَا دَخَلَ الْخَلَاءَ قَالَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ


Nasaayi-1272

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1272.


أَنَّ رَجُلًا كَانَ يَدْعُو بِأُصْبُعَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحِّدْ، أَحِّدْ»


Nasaayi-2562

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.

2562. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று நபர்களை அல்லாஹ் மறுமை நாளில் (கருணைக் கண்கொண்டு) பார்க்க மாட்டான்.

1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவன்.
2. ஆண்களைப் போன்று வேடமிடக்கூடிய பெண்.
3. தன்னுடைய மனைவி தவறான நடத்தை கொண்டவளாக இருப்பதை அறிந்தும் ரோஷம் கொள்ளாத கணவன் ஆகியோராவர்.

இன்னும் மூன்று நபர்கள் சுவர்க்கம் புகமாட்டார்கள்.

1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவன்.
2. நிரந்தரமாக மது அருந்துபவன்.
3. கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ: الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمَرْأَةُ الْمُتَرَجِّلَةُ، وَالدَّيُّوثُ، وَثَلَاثَةٌ لَا يَدْخُلُونَ الْجَنَّةَ: الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمُدْمِنُ عَلَى الْخَمْرِ، وَالْمَنَّانُ بِمَا أَعْطَى


Nasaayi-5672

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

5672. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கொடுத்ததை சொல்லிக் காட்டுபவர்; தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர்; நிரந்தரமாக மது அருந்துபவர் ஆகியோர் சுவர்க்கம் புகமாட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنَّانٌ، وَلَا عَاقٌّ، وَلَا مُدْمِنُ خَمْرٍ»


Nasaayi-815

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

815.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(தொழுகையில்) உங்கள் வரிசைகளை நேராக்குங்கள். நெருக்கமாக நில்லுங்கள். (உங்கள்) கழுத்துகளை நேராக அமைத்துக்கொள்ளுங்கள். முஹம்மதுடைய உயிர் எவனது கைவசம் உள்ளதோ அந்த இறைவனின் மீதாணையாக ஆட்டுக்குட்டிகளைப் போன்று ஷைத்தான்கள் வரிசைகளுக்கிடையில் நுழைவதை நான் காண்கிறேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«رَاصُّوا صُفُوفَكُمْ وَقَارِبُوا بَيْنَهَا، وَحَاذُوا بِالْأَعْنَاقِ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنِّي لَأَرَى الشَّيَاطِينَ تَدْخُلُ مِنْ خَلَلِ الصَّفِّ كَأَنَّهَا الْحَذَفُ»


Nasaayi-5531

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5531.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு) பிரார்த்திப்பார்கள். இறைவா உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மரணிப்பதை விட்டும் இடிபாடுகளுக்குள் சிக்கி மரணிப்பதை விட்டும் நீருக்குள் மூழ்கி மரணிப்பதை விட்டும் நெருப்பில் கருகி மரணிப்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

மரண வேளையில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். உன்னுடைய வழியை விட்டு புறக்கணித்தவனாக நான் மரணிப்பதை விட்டும் (விஷ ஜந்துக்களால்) தீண்டப்பட்டு மரணிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

அறிவிப்பவர் : அபுல் யசர் (ரலி)


«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَرَقِ، وَالْحَرِيقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»


Nasaayi-5075

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5075.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள் சில புறாக்களின் நெஞ்சுப் பகுதியில் உள்ளதைப் போன்ற கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்கத்தின் வாடையைக் கூட பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி­)


«قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ، لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ»


Nasaayi-5056

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5056.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا»


Nasaayi-5055

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5055.

அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் விட்டு ஒருநாள் தலைவாருவதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி)  தலைவாருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا»


Next Page » « Previous Page