Category: ஷுஅபுல் ஈமான்

Shuabul-Iman

Shuabul-Iman-6687

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6687.


” يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ: يَا بَنِي آدَمَ كُلُّكُمْ مُذْنِبٌ إِلَّا مَنْ عَفَيْتُ، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، وَكُلُّكُمْ فَقِيرٌ إِلَّا مَنْ أَغْنَيْتُ، فَسَلُونِي أُعْطِكُمْ، يَا بَنَى آدَمَ كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُ، فَسَلُونِي الْهُدَى أَهْدِكُمْ، وَمَنِ اسْتَغْفَرَنِي وَعَلِمَ أَنِّي ذُو قُدْرَةٍ عَلَى أَنْ أَغْفِرَ لَهُ غَفَرْتُ لَهُ وَلَا أُبَالِي، وَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ، وَحَيَّكُمْ وَمَيِّتَكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمُ، اجْتَمَعُوا عَلَى قَلْبِ أَشْقَى وَاحِدٍ مِنْكُمْ مَا نَقَصَ ذَلِكَ مِنْ سُلْطَانِي مِثْلَ جَنَاحِ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ، وَحَيَّكُمْ وَمَيِّتَكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمُ، اجْتَمَعُوا عَلَى قَلْبِ أَتْقَى وَاحِدٍ مِنْكُمْ مَا زَادُوا فِي سُلْطَانِي مِثْلَ جَنَاحِ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ، وَحَيَّكُمْ وَمَيِّتَكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ، سَأَلُونِي حَتَّى يَنْتَهُوا مَسْأَلَةَ كُلِّ وَاحِدٍ مِنْهُمْ فَأَعْطَيْتُهُمْ مَا سَأَلُونِي مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي كَغَرْزِ إِبْرَةٍ لَوْ غَمَسَهَا أَحَدُكُمْ فِي الْبَحْرِ، وَذَلِكَ أَنِّي جَوَادٌ وَمَاجِدٌ، وَأَجِدُ عَطَائِي كَلَامًا وَعَذَابِي كَلَامًا، إِنَّمَا أَمْرِي لِشَيْءٍ إِذَا أَرَدْتُهُ أَنْ أَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ “


Shuabul-Iman-7379

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

7379. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும்.

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் தன் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்.

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் கீழாடையின்றி (பொதுக்) குளிப்பிடங்களில் நுழைய வேண்டாம். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட உங்களது பெண்களில் எவரும் (பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் பொதுக்) குளிப்பிடங்களில் நுழைய வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


(அறிவிப்பாளர்) கூறுகிறார்: …

நான் இந்தச் செய்தியை உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களின் ஆட்சி காலத்தில் (அவர்களுக்குத்) தெரியப்படுத்தினேன். அப்போது அவர்கள், அபூபக்ர் பின் அம்ர் பின் ஹஸ்ம் அவர்களுக்கு, “முஹம்மது பின் ஸாபித் அவர்களிடம் அவர் அறிவிக்கும் இந்த ஹதீஸ் பற்றி கேளுங்கள். ஏனெனில் அவர் திருப்திக்குரியவர்,” என்று எழுதினார்கள். அவர், அவரை விசாரித்து உமர் (ரஹ்) அவர்களுக்கு எழுதினார். அதன் பிறகு, உமர் (ரஹ்) அவர்கள் பெண்கள் (பொதுக்) குளிப்பிடங்களில் நுழைவதற்கு

” مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ مِنْ نِسَائِكُمْ فَلَا يَدْخُلْنَ الْحَمَّامَ “

قَالَ: فَنَمَيْتُ ذَلِكَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي خِلَافَتِهِ، فَكَتَبَ إِلَى أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ: أَنْ سَلْ مُحَمَّدَ بْنَ ثَابِتٍ عَنْ حَدِيثِهِ فَإِنَّهُ رِضًا، فَسَأَلَهُ ثُمَّ كَتَبَ إِلَى عُمَرَ فَمَنَعَ عُمَرُ النِّسَاءَ مِنَ الْحَمَّامِ،


Shuabul-Iman-9878

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9878. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தன் கூட்டத்தாரிடையே அச்சமில்லாமலும், தன் உடல் ஆரோக்கியமாகவும் இருந்து, அன்றைய உணவைச் சேர்த்துவிட்டால் அவருக்கு உலகமே கிடைத்து விட்டது போலாகும்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் (ரலி)?


பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்தக் கருத்தில் வந்துள்ள செய்திகளிலேயே இதுதான் மிகவும் சரியானது. இமாம் புகாரி அவர்கள் இதை ஜாமிஉஸ் ஸஹீஹ் அல்லாத வேறு நூலில் பிஷ்ர் பின் மர்ஹூம் —> மர்வான் பின் முஆவியா —> அப்துர்ரஹ்மான் பின் அபூஷுமைலா-அல்அன்ஸாரி-அல்ஹுனாஈ —> ஸலமா பின் உபைதுல்லாஹ் —> உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். அபூஈஸா-திர்மிதீ இமாம் அவர்களும் இவ்வாறுதான் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பாளர்தொடரில் அப்துர்ரஹ்மான் பின் அபூஷுமைலா அவர்களுக்கும் ஸலமா அவர்களுக்கும் இடையில் அப்துர்ரஹ்மான் அவர்களின் தந்தையான அபூஷுமைலா என்பவரை குறிப்பிடவில்லை.


مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ , فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا


Shuabul-Iman-9767

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9767.

 

 


பைஹகீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் தான் (இப்னு அபுத்துன்யா அவர்களின்) கிஸருல் அமல் என்ற நூலில் நான் பார்த்தேன். மேலும் இப்னு அபுத்துன்யா அவர்களிடமிருந்து மற்றவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளனர். என்றாலும் இந்தச் செய்தி (இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது) தவறாகும்.

பின்வரும் ஹதீஸ் எண்-9768 இல் வரும் செய்தி தான் இந்த அறிவிப்பாளர்தொடர் வழியாக அறியப்பட்டுள்ளது.


قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ , شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شُغُلُكَ , وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ “


Shuabul-Iman-1580

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1580.


” الدُّنْيَا مَلْعُونَةٌ، مَلْعُونٌ مَا فِيهَا إِلَّا ذِكْرَ اللهِ أَوْ عَالِمًا أَوْ مُتَعَلِّمًا “


Shuabul-Iman-4532

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4532. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாகப் பேச்சில் கவர்ச்சி உள்ளது. உங்களில் ஒருவர் தனது சகோதரரிடம் ஏதேனும் உதவிக் கேட்பதாக இருந்தால் அவரைப் புகழ ஆரம்பித்து; அவரின் முதுகை முறித்துவிடவேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا، فَإِذَا طَلَبَ أَحَدُكُمْ مِنْ أَخِيهِ حَاجَةً، فَلَا يَبْدَأْ بِالْمَدْحِ فَيَقْطَعَ ظَهْرَهُ


Shuabul-Iman-206

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

206. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவருக்கு (மற்றவரிடமிருந்து) உதவி தேவையிருந்தால் அதை சாதாரணமாகக் கேட்கட்டும். ஏனெனில் அவருக்கு விதியில் எழுதப்பட்டதே கிடைக்கும். உதவி செய்பவரிடம் வந்து அவரைப் புகழ்ந்து; அவரின் முதுகை முறித்து விடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)


إِذَا طَلَبَ أَحَدُكُمُ الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا طَلَبًا يَسِيرًا، فَإِنَّمَا لَهُ مَا قَدَّرَ لَهُ، وَلَا يَأْتِي أَحَدُكُمْ صَاحِبَهُ فَيَمْدَحَهُ فَيَقْطَعَ ظَهْرَهُ


Shuabul-Iman-8855

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8855. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மண்ணறையில் இருக்கும் மரணித்தவர், “யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா?” என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கி தத்தளிப்பவரைப் போன்றவர் ஆவார்.

தனது தந்தை, அல்லது தாய், அல்லது சகோதரன், அல்லது நண்பர்கள் ஆகியோரிடமிருந்து தமக்கு வந்து சேரும் துஆவை (பிராத்தனையை) எதிர்பார்க்கின்றார்.

அந்தப் பிரார்த்தனை அவரை வந்தடைந்தால், உலகையும், அதில் உள்ள அனைத்தையும் விட அது அவருக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.

நிச்சயமாக, அல்லாஹ் மண்ணறையிலுள்ளவர்களுக்கு, பூமியில் வாழ்பவர்களின் பிரார்த்தனையால் மலைகளைப் போன்ற நன்மைகளை வழங்குவான். மேலும், உயிருள்ளவர்கள் மரணித்தவர்களுக்குச் செய்யும் அன்பளிப்பு, அவர்களுக்காகப் பாவமன்னிப்பு தேடுவதுதான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


مَا الْمَيِّتُ فِي الْقَبْرِ إِلَّا كَالْغَرِيقِ الْمُتَغَوِّثِ يَنْتَظِرُ دَعْوَةً تَلْحَقُهُ مِنْ أَبٍ أَوْ أُمٍّ أَوْ أَخٍ أَوْ صَدِيقٍ فَإِذَا لَحِقَتْهُ كَانَ أَحَبُّ إِلَيْهِ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيُدْخِلُ عَلَى أَهْلِ الْقُبُورِ مِنْ دُعَاءِ أَهْلِ الْأَرْضِ أَمْثَالَ الْجِبَالِ وَإِنَّ هَدِيَّةَ الْأَحْيَاءِ إِلَى الْأَمْوَاتِ الِاسْتِغْفَارُ لَهُمْ


Next Page » « Previous Page