Category: ஷுஅபுல் ஈமான்

Shuabul-Iman

Shuabul-Iman-8283

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8283. உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களை தொழுகையை நிறைவேற்ற கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அவர்களை அதற்காக அடியுங்கள். மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்.…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)


مُرُوا الصِّبْيَانَ بِالصَّلَاةِ لِسَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا فِي عَشْرٍ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ


Shuabul-Iman-1932

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1932. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குர்ஆனின்) 15 ஸஜ்தா வசனங்களை என்னிடம் ஓதிக்காட்ட சொன்னார்கள். அவற்றில் (காஃப் எனும் 50 வது அத்தியாயத்தி­லிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம்பெறும் மூன்று வசனங்களும், சூரத்துல் ஹஜ் (எனும்) 22 வது அத்தியாயத்தில் இடம் பெறும் இரண்டு வசனங்களும் (அல்குர்ஆன்: 22:18 , 22:77) அடங்கும்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி­)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِيهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ، وَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ


Shuabul-Iman-3542

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3542. ஷஅபான் மாதத்தின் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அதன் பகலில் நோன்பு பிடியுங்கள். ஏனெனில் சூரியன் மறைந்ததும் முதல் வானத்துக்கு அல்லாஹ் இறங்கி வந்து, என்னிடம் பாவமன்னிப்பு தேடுபவர் உண்டா? நான் அவரின் பாவங்களை மன்னிக்கிறேன்.

வாழ்வாதாரத்தை தேடுபவர் உண்டா? நான் அவருக்கு வாழ்வாதாரம் வழங்குகிறேன். துன்பத்துக்கு ஆளானவர் உண்டா? நான் அவரின் துன்பங்களை நீக்குகின்றேன். இவ்வாறு இதைக் கேட்பவர் உண்டா? அதைக் கேட்பவர் உண்டா? என்று காலை வரை கூறிக் கொண்டே இருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَتَهَا، وَصُومُوا يَوْمَهَا، فَإِنَّ اللهَ تَعَالَى يَقُولُ: أَلَا مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ، أَلَا مِنْ مُسْتَرْزِقٍ فَأَرْزُقَهُ، أَلَا مِنْ سَائِلٍ فَأُعْطِيَهُ، أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ

وأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَمْشَاذَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي طَالِبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، فَذَكَرَهُ بِإِسْنَادِهِ، وَذَكَرَ فِيهِ لَفْظُ النُّزُولِ، وَقَالَ بَدَلَ السَّائِلِ: ” أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ “، أَلَا كَذَا، غَيْرَ أَنَّهُ قَالَ: عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، وَلَمْ يَذْكُرْ عَلِيًّا، قَالَ إِبْرَاهِيمُ بْنُ أَبِي طَالِبٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ مَوْلَى زَيْنَبَ بِنْتِ جَحْشٍ


Shuabul-Iman-3539

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3539. அல்லாஹ்வின் தூதரே! எந்த நோன்பு மிகச் சிறந்து? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஅபான் மாத நோன்பு” என்று பதிலளித்தார்கள்.

(பிறகு) எந்த தர்மம் மிகச் சிறந்தது? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளான் மாதத்தில் வழங்கப்படும் தர்மம் (மிகச் சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


قِيلَ: يَا رَسُولَ اللهِ أَيُّ الصَّوْمِ أَفْضَلُ؟، قَالَ: ” صَوْمُ شَعْبَانَ تَعْظِيمًا لِرَمَضَانَ “، قِيلَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟، قَالَ: ” صَدَقَةٌ فِي رَمَضَانَ


Shuabul-Iman-3534

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3534. நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் நுழைந்தால், இரட்சகனே! எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் பரகத் செய்வாயாக மேலும், ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக’ என்று பிரார்த்திப்பார்கள்”

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ، قَالَ: ” اللهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ


Shuabul-Iman-2270

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2270. ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)


مَنْ قَرَأَ فِي كُلِّ لَيْلَةٍ إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ لَمْ تُصِبْهُ فَاقَةٌ أَبَدًا


Shuabul-Iman-2269

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2269. ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், ஒவ்வொரு இரவும் தனது மகள்களுக்கு அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதக் கூறுவார்கள்.


مَنْ قَرَأَ سُورَةَ الْوَاقِعَةِ فِي كُلِّ لَيْلَةٍ لَمْ تُصِبْهُ فَاقَةٌ أَبَدًا

وَكَانَ ابْنُ مَسْعُودٍ يَأْمُرُ بَنَاتِهِ يَقْرَأْنَ بها كُلَّ لَيْلَةٍ


Shuabul-Iman-2268

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2268. ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது…

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)


مَنْ قَرَأَ سُورَةَ الْوَاقِعَةِ فِي كُلِّ لَيْلَةٍ لَمْ تُصِبْهُ فَاقَةٌ


Shuabul-Iman-9535

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9535. அல்லாஹ்வின் அருட்கொடையை அவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான். (இறைவன் அல்லாதவர்களிடம் கையேந்திவிடாமல்) துன்பம் நீங்கும் வரை (பிரார்த்தித்தவனாக இறையருளை) எதிர்பார்ப்பதுதான் வணக்கங்களில் மிகச் சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


سَلِ اللهَ مِنْ فَضْلِهِ , فَإِنَّ اللهَ يُحِبُّ أَنْ يُسْأَلَ , وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ


Shuabul-Iman-1086

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1086. அல்லாஹ்வின் அருட்கொடையை அவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான். (இறைவன் அல்லாதவர்களிடம் கையேந்திவிடாமல்) துன்பம் நீங்கும் வரை (பிரார்த்தித்தவனாக இறையருளை) எதிர்பார்ப்பதுதான் வணக்கங்களில் மிகச் சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


سَلُوا اللهَ مِنْ فَضْلِهِ، فَإِنَّ اللهَ يُحِبُّ أَنْ يُسْأَلَ مِنْ فَضْلِهِ، وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ


Next Page » « Previous Page