Category: முஸ்னத் தயாலிஸீ

Musnad al Tayalisi
Musnad Abi Dawud Al Tayalisi

Tayalisi-2327

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2327. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம். இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்!

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«لَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ، وَلَا تَصْحَبْ إِلَّا مُؤْمِنًا»


Tayalisi-2696

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2696. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْمَرْءُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ»


Tayalisi-560

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் (வழியாக வரும்) ஹதீஸ்கள்.

560. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பும் போது, “ஏதேனும் வழக்கு ஏற்படும்போது நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். அதைப் பற்றி அல்லாஹ்வின் வேதத்தில் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு முடிந்தவரை ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களின் நெஞ்சில் அடித்து விட்டு, “அல்லாஹ்வின் தூதரை மகிழ்ச்சிப்படுத்தும் செயலின் பக்கம் அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு, நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த முஆத் (ரலி) அவர்களின் தோழர்கள்.

தயாலிஸீ இமாம் கூறுகிறார்:

ஷுஅபா அவர்கள், ஒரு தடவை ஹாரிஸ்

إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ قَالَ لَهُ: «كَيْفَ تَقْضِي إِنْ عَرَضَ لَكَ قَضَاءٌ؟» قَالَ: أَقْضِي بِكِتَابِ اللَّهِ قَالَ: «فَإِنْ لَمْ تَجِدْهُ فِي كِتَابِ اللَّهِ؟» قَالَ: أَقْضِي بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَإِنْ لَمْ تَجِدْهُ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ؟» قَالَ: أَجْتَهِدُ رَأْيِي لَا آلُو قَالَ: فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ لِمَا يُرْضِي رَسُولَ اللَّهِ»


Tayalisi-2010

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2010.


كَانَ عَلْقَمَةُ بْنُ عُلَاثَةَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” رُوَيْدًا يَا بِلَالُ، يَتَسَحَّرُعَلْقَمَةُ قَالَ: ” وَهُوَ يَتَسَحَّرُ بِرَأْسٍ


Tayalisi-1735

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1735. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, வானத்தை நோக்கி பார்த்துவிட்டு, “அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க அன் அஸில்ல அவ்அழில்ல அவ் அள்ளிம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய” என்று கூறும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! நான் பிறரை சறுகச் செய்யாமலும், வழிக்கெடுக்காமலும்; அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும்; மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِي رَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ، فَقَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ»


Tayalisi-2453

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2453.


«تَهَادَوْا، فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَغَرَ الصَّدْرِ، لَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ نِصْفَ فِرْسِنِ شَاةٍ»


Tayalisi-100

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

100.


لَمَّا بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ بَعَثْتَنِي وَأَنَا رَجُلٌ حَدِيثُ السِّنِّ لَا عِلْمَ لِي بِكَثِيرٍ مِنَ الْقَضَاءِ؟ قَالَ فَضَرَبَ يَدَهُ فِي صَدْرِي وَقَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ سَيُثَبِّتُ لِسَانَكَ وَيَهْدِي قَلْبَكَ» ، فَمَا أَعْيَانِي قَضَاءٌ بَيْنَ اثْنَيْنِ


Tayalisi-2667

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2667. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்வது (கப்று)மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் (முஹம்மது பின் கஃப்) கூறினார்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள், இதன் கருத்து மலம், ஜலம் கழிப்பதற்காக கப்ரின் மீது உட்காருவதாகும் என்று கூறினார்.


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»

قَالَ أَبُو هُرَيْرَةَ: يَعْنِي: أَنْ يَجْلِسَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ


Tayalisi-1905

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1905. கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும் அல்லது அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُجَصَّصَ الْقَبْرُ أَوْ يُبْنَى عَلَيْهِ»


Tayalisi-2633

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2633.


كَانَ رَجُلٌ يُدَايِنُ النَّاسَ، وَكَانَ يَقُولُ لِغُلَامِهِ إِذَا أَعْسَرَ الْمُعْسِرُ: تَجَاوَزْ عَنْهُ، لَعَلَّ اللَّهَ يَتَجَاوَزُ عَنَّا فَلَمَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ تَجَاوَزَ عَنْهُ


Next Page » « Previous Page