தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-1641

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

மக்ஹூல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சகுனம் என்பது வீடு, பெண், குதிரை ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், இந்தச் செய்தியை அபூஹுரைரா (ரலி) (முழுமையாக) மனனமிடவில்லை.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், “யூதர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக! அவர்கள் சகுனம் என்பது வீடு, பெண், குதிரை ஆகியவற்றில் இருக்கிறது என்று கூறுகின்றனர்” என கூறிய சமயம் (இடையில்) அபூஹுரைரா வந்தார்.

இந்தச் செய்தியின் கடைசி பகுதியை தான் அபூஹுரைரா கேட்டார். இதனின் ஆரம்பத்தை அபூஹுரைரா கேட்கவில்லை என்று பதிலளித்தார்கள்.

(tayalisi-1641: 1641)

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَاشِدٍ، عَنْ مَكْحُولٍ،

 قِيلَ لِعَائِشَةَ إِنَّ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الشُّؤْمُ فِي ثَلَاثَةٍ: فِي الدَّارِ وَالْمَرْأَةِ وَالْفَرَسِ ” فَقَالَتْ عَائِشَةُ: لَمْ يَحْفَظْ أَبُو هُرَيْرَةَ لِأَنَّهُ دَخَلَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ” قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، يَقُولُونَ إِنَّ الشُّؤْمَ فِي ثَلَاثَةٍ: فِي الدَّارِ وَالْمَرْأَةِ وَالْفَرَسِ ” فَسَمِعَ آخِرَ الْحَدِيثِ وَلَمْ يَسْمَعْ أَوَّلَهُ


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-1641.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-1630.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45233-மக்ஹூல் அவர்கள் நபித்தோழர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளாரா? என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது. சிலர் குறைந்த பட்சம் அனஸ் (ரலி), வாஸிலா பின் அஸ்கஃ (ரலி), அபூஹின்த் அத்தாரீ (ரலி) ஆகியோரிடம் மட்டுமே கேட்டுள்ளார் என்று கூறியுள்ளனர்.

(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/515)

எனவே இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


மேலும் பார்க்க: அஹ்மத்-26088 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.