பாடம்:
கலகம் செய்வோரின் பண்புகள்.
2188. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கடைசிக்காலத்தில் சில மக்கள் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராகவும், அறிவுக்குறைவுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால் அது அவர்களின் தொண்டைக்கு அப்பால் செல்லாது. அவர்கள் மனிதர்களில் மிகச் சிறந்தவரான (நபியின்) வார்த்தைகளைப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் அம்பு, வேட்டையாடிய விலங்கைத் துளைத்து வெளியேறுவதைப் போல மார்க்கத்திலிருந்து (வேகமாக) வெளியேறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ (ரலி), அபூஸயீத் (ரலி), அபூதர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
குர்ஆனை ஓதி, அது அவர்களின் தொண்டைக் குழியைத் தாண்டாமல், (அம்பு இலக்கிலிருந்து வெளியேறுவது போல்) மார்க்கத்திலிருந்து வெளியேறும் இந்த மக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வேறு ஹதீஸ்களும் உள்ளன.
நிச்சயமாக இந்தச் செய்தி காரிஜிய்யா, ஹரூரிய்யா மற்றும் இவர்களைப் போன்ற பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களைப் பற்றியே தெரிவிக்கிறது.
«يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ أَحْدَاثُ الأَسْنَانِ سُفَهَاءُ الأَحْلَامِ، يَقْرَءُونَ القُرْآنَ، لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَقُولُونَ مِنْ قَوْلِ خَيْرِ البَرِيَّةِ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ»
சமீப விமர்சனங்கள்