Category: திர்மிதீ

Tirmidhi-1900

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1900. ஒரு மனிதர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் வந்து, “எனக்குத் துணைவி ஒருத்தி இருக்கிறாள்; அவளை மண விலக்குச் செய்யுமாறு என் தாய் என்னைப் பணிக்கிறார் (நான் என்ன செய்யட்டும்?)” என்று வினவினார். அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

“தந்தை, (தம் பிள்ளைகளுக்குச்) சொர்க்கத்தின் முதன்மையான வாயில் ஆவார். எனவே, விரும்பினால் அந்த வாயிலை நீ பாழாக்கலாம்; அல்லது அதைப் பாதுகாத்துக்கொள்ளலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஅப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் ஐந்தாமவராக இடம்பெறும்) இப்னு அபூஉமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், இந்த ஹதீஸை அறிவிக்கும்போது சில நேரங்களில், ‘என் தாய் (இன்ன உம்மீ) என்னைப் பணிக்கிறார்’ என்றும், சில நேரங்களில், ‘என் தந்தை (இன்ன அபீ) என்னைப் பணிக்கிறார்’ என்றும் அறிவித்தார்கள்.

அபுத்தர்தா (ரலி) அவர்(களிடமிருந்து அபூஅப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்)

أَنَّ رَجُلًا أَتَاهُ فَقَالَ: إِنَّ لِيَ امْرَأَةً وَإِنَّ أُمِّي تَأْمُرُنِي بِطَلَاقِهَا، قَالَ أَبُو الدَّرْدَاءِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الجَنَّةِ، فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذَلِكَ البَابَ أَوْ احْفَظْهُ»

قَالَ: وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ: رُبَّمَا قَالَ سُفْيَانُ: إِنَّ أُمِّي وَرُبَّمَا قَالَ: أَبِي،


Tirmidhi-1883

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1883. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிலவேளை) நின்றும், (சிலவேளை) அமர்ந்தும் பருகியதை நான் பார்த்துள்ளேன்.


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا»


Tirmidhi-1212

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1212.


«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا»، قَالَ: وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً، أَوْ جَيْشًا، بَعَثَهُمْ أَوَّلَ النَّهَارِ، وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا، وَكَانَ إِذَا بَعَثَ تِجَارَةً بَعَثَهُمْ أَوَّلَ النَّهَارِ، فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ


Tirmidhi-1668

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1668. அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) கூறினார்கள்:

உங்களில் ஒருவர் எறும்பு கடியின் காரணமாக அடையும் வேதனையை போன்றே, இறைவழியில் மரணத்தை அடைந்தவர் மரண வேதனையை அடைவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


«مَا يَجِدُ الشَّهِيدُ مِنْ مَسِّ القَتْلِ إِلَّا كَمَا يَجِدُ أَحَدُكُمْ مِنْ مَسِّ القَرْصَةِ»


Tirmidhi-2333

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 22

எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக வந்துள்ளவை.

2333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உடலின் ஒரு பகுதியை (தோளை)ப் பிடித்துக்கொண்டு, “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு;

உன்னை மண்ணறைவாசிகளில் ஒருவனாகக் கருதிக்கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இந்த ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளரான) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீ காலை நேரத்தை அடைந்தால், மாலை நேரத்தை அடைவாய் என எண்ணாதே! நீ மாலை நேரத்தை அடைந்தால், காலை நேரத்தை அடைவாய் என எண்ணாதே! நீ நோய்வாய்ப்படுவதற்குமுன் உன் உடல்நலத்தில் சிறிதளவையேனும் (நன்மைக்குப்) பயன்படுத்திக் கொள். உன் இறப்புக்கு முன் ஜீவியத்தில் சிறிதளைவையேனும் (நன்மைக்காக) எடுத்துக்கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் அடியானே! நாளைக்கு உனது பெயர் என்ன (இறந்தவனா, இருப்பவனா) என்பதை நீ அறிய மாட்டாய்” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி இப்னு உமர் (ரலி) அவர்களின் வழியாக மேலும் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعْضِ جَسَدِي فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ وَعُدَّ نَفْسَكَ فِي أَهْلِ القُبُورِ»

فَقَالَ لِي ابْنُ عُمَرَ: «إِذَا أَصْبَحْتَ فَلَا تُحَدِّثْ نَفْسَكَ بِالمَسَاءِ، وَإِذَا أَمْسَيْتَ فَلَا تُحَدِّثْ نَفْسَكَ بِالصَّبَاحِ، وَخُذْ مِنْ صِحَّتِكَ قَبْلَ سَقَمِكَ وَمِنْ حَيَاتِكَ قَبْلَ مَوْتِكَ فَإِنَّكَ لَا تَدْرِي يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ غَدًا»


Tirmidhi-652

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஸகாத் பொருளை பெற யாருக்கு அனுமதியில்லை?

652. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள; ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெற அனுமதியில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ، وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ»


Tirmidhi-2675

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2675. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் ஒரு நல்ல நடைமுறையை உருவாக்கி அது பிறரால் பின்பற்றப்பட்டால் அவருக்கு அதற்குரிய நன்மையும் கிடைக்கும். அவரைப் பின்பற்றுவோருக்குக் கிடைப்பதைப் போன்ற நன்மையும் கிடைக்கும். அதற்காக அ(வர்களைப் பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. ஒருவர் ஒரு தீய நடைமுறையை உருவாக்கி அது பிறரால் பின்பற்றப்பட்டால் அவருக்கு அதற்குரிய பாவமும் உண்டு; அவரைப் பின்பற்றுவோருக்குக் கிடைப்பதைப் போன்ற பாவமும் உண்டு. அதற்காக அ(வர்களைப் பின்தொடர்ந்த)வர்களின் பாவத்தில் எதுவும் குறைந்துவிடாது.

இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி, ஹுதைஃபா (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட நபிமொழி வேறு அறிவிப்பாளர்தொடர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட நபிமொழி ஜரீர் (ரலி) அவர்களின் புதல்வர் முன்திர் பின் ஜரீர் (ரஹ்) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நபிமொழி ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்து

«مَنْ سَنَّ سُنَّةَ خَيْرٍ فَاتُّبِعَ عَلَيْهَا فَلَهُ أَجْرُهُ وَمِثْلُ أُجُورِ مَنْ اتَّبَعَهُ غَيْرَ مَنْقُوصٍ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنْ سَنَّ سُنَّةَ شَرٍّ فَاتُّبِعَ عَلَيْهَا كَانَ عَلَيْهِ وِزْرُهُ وَمِثْلُ أَوْزَارِ مَنْ اتَّبَعَهُ غَيْرَ مَنْقُوصٍ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا»


Tirmidhi-1158

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1158.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى امْرَأَةً، فَدَخَلَ عَلَى زَيْنَبَ، فَقَضَى حَاجَتَهُ، وَخَرَجَ، وَقَالَ: «إِنَّ المَرْأَةَ إِذَا أَقْبَلَتْ أَقْبَلَتْ فِي صُورَةِ شَيْطَانٍ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ امْرَأَةً فَأَعْجَبَتْهُ، فَلْيَأْتِ أَهْلَهُ فَإِنَّ مَعَهَا مِثْلَ الَّذِي مَعَهَا»


Tirmidhi-19

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 15

தண்ணீரால் துப்புரவு செய்வது பற்றி வந்துள்ளவை.

19. முஆதா பின்த் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (எங்களிடம்), “உங்கள் கணவர்களிடம் தண்ணீரால் துப்புரவு செய்யச் சொல்லுங்கள். நான் அவர்களிடம் இதைக் கூற வெட்கப்படுகிறேன். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் (தண்ணீர் மூலமே துப்புரவு) செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி), அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர்; கற்களால் துப்புரவு செய்வது போதுமானதாக இருப்பினும், தண்ணீரால் துப்புரவு செய்வதையே அவர்கள் சிறந்ததாகவும் விருப்பமானதாகவும் கருதுகின்றனர். ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, அப்துல்லாஹ் பின் அல்முபாரக், ஷாஃபிஈ,
அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோர் இவ்வாறே கூறியுள்ளனர்.


مُرْنَ أَزْوَاجَكُنَّ أَنْ يَسْتَطِيبُوا بِالمَاءِ، فَإِنِّي أَسْتَحْيِيهِمْ، «فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُهُ»


Tirmidhi-18

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 14

எதைக் கொண்டு துப்புரவு செய்யலாகாது என்பது குறித்து வந்துள்ளவை.

18. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மலஜலம் கழித்தபின்) கெட்டிச் சாணம், எலும்பு
ஆகியவற்றால் துப்புரவு செய்யாதீர்கள்.
ஏனெனில், அவை உங்கள் சகோதர (இனத்தா)ரான ஜின்களின் உணவாகும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அபூஹுரைரா (ரலி), ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி), ஜாபிர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “ஜின்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த இரவில் அவர்களுடன் யாரும் இருந்தார்களா?” என்று அல்கமா (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்…என்று தொடங்கும் நீண்ட ஹதீஸ், ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்து இஸ்மாயீல் பின் இப்ராஹீம் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

அதில், “நபி (ஸல்) அவர்கள் கெட்டிச் சாணம், எலும்பு ஆகியவற்றால் (மலஜலம் கழித்தபின்) துப்புரவு செய்யாதீர்கள். ஏனெனில் அவை, உங்கள் சகோதர (இனத்தா)ரான ஜின்களின் உணவாகும்” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

இவ்விரு அறிவிப்புகளில் இஸ்மாயீல் அவர்கள் வழியாக வந்துள்ள (இந்த) அறிவிப்பே,

«لَا تَسْتَنْجُوا بِالرَّوْثِ، وَلَا بِالْعِظَامِ، فَإِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ»


Next Page » « Previous Page