Category: திர்மிதீ

Tirmidhi-3603

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3603. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மாண்பும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியார் என்னைப் பற்றி நினைக்கும் விதத்தில் நான் நடந்துகொள்வேன். அவர் என்னை நினைவுகூரும் போது நான் அவருடன் இருப்பேன். அவர் என்னைத் தன் மனதில் நினைவு கூர்ந்தால் நானும் அவரை என் மனதில் நினைவுகூருவேன்.

அவர் என்னை ஓர் அவையில் நினைவு கூர்ந்தால் அவர்களை விட சிறந்த அவையினரிடம் அவரை நான் நினைவுகூருவேன். அவர் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவரை நெருங்குவேன். அவர் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் (விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவரை நான் நெருங்குவேன். அவர் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவரை நோக்கி விரைந்து செல்வேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


 


أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ حِينَ يَذْكُرُنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ اقْتَرَبَ إِلَيَّ شِبْرًا اقْتَرَبْتُ مِنْهُ ذِرَاعًا، وَإِنْ اقْتَرَبَ إِلَيَّ ذِرَاعًا اقْتَرَبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً “


Tirmidhi-3604

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரக வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.


«اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ القَبْرِ. اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ»


Tirmidhi-3966

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3966. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் மாலை நேரத்தில், “அஊது பி கலிமாதில்லாஹித் தாம்மாதி மின் ஷர்ரி மா கலக்” என்று மூன்று முறை கூறினால் அந்த இரவில் எந்த விஷக்கடியும் அவரை துன்புறுத்தாது.

(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலமாக அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருகின்றேன்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எங்களின் குடும்பத்தினர் இப்பிரார்த்தனையை கற்றுக் கொண்டார்கள். மேலும் அதனை ஒவ்வொரு இரவிலும் வழக்கமாகச் சொல்லி வந்தார்கள். அந்நிலையில் அவர்களிலுள்ள பெண்ணொருத்தியை விஷ ஜந்து தீண்டிவிட்டது. அதனால் அவளுக்கு வலியேதும் ஏற்படவில்லை.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இதே அறிவிப்பாளர்தொடரில் ஸுஹைல் பின் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களும் இந்த நபிமொழியை அறிவித்துள்ளார்கள். இவ்வாறே ஸுஹைல் (ரஹ்) அவர்களிடமிருந்து உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களும் மற்றவர்களும் இந்த நபிமொழியை அறிவித்துள்ளார்கள். எனினும் அவர்கள் (அறிவிப்பாளர்தொடரில்) அபூஹுரைரா (ரலி) அவர்களைக் குறிப்பிடவில்லை.


” مَنْ قَالَ حِينَ يُمْسِي ثَلَاثَ مَرَّاتٍ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّهُ حُمَةٌ تِلْكَ اللَّيْلَةَ ” قَالَ سُهَيْلٌ: فَكَانَ أَهْلُنَا تَعَلَّمُوهَا فَكَانُوا يَقُولُونَهَا كُلَّ لَيْلَةٍ فَلُدِغَتْ جَارِيَةٌ مِنْهُمْ فَلَمْ تَجِدْ لَهَا وَجَعًا


Tirmidhi-3967

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

3967. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு பிரார்த்தனையை நான் மனனம் செய்து கொண்டேன். நான் அதனை விடாமல் கூறுவேன். அது,

“அல்லாஹும்மஜ்னீ உ அள்ளிமு ஷுக்ரக, வ உக்ஸிரு திக்ரக, வ அத்தபிஉ நஸீஹதக, வஅஹ்ஃபளு வஸிய்யதக”

(பொருள்: அல்லாஹ்வே! உனக்கு நான் கண்ணியமான முறையில் நன்றி செலுத்துபவனாகவும், உன்னை அதிகமாக நினைவுகூர்பவனாகவும், உனது அறிவுரையை பின்பற்றுபனாகவும், உனது சட்ட திட்டங்களை பேணி நடப்பவனாகவும் என்னை ஆக்குவாயாக)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


دُعَاءٌ حَفِظْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا أَدَعُهُ: «اللَّهُمَّ اجْعَلْنِي أُعَظِّمُ شُكْرَكَ، وَأُكْثِرُ ذِكْرَكَ، وَأَتَّبِعُ نَصِيحَتَكَ، وَأَحْفَظُ وَصِيَّتَكَ»


Tirmidhi-2346

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

2346. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தன் கூட்டத்தாரிடையே அச்சமில்லாமலும், தன் உடல் ஆரோக்கியமாகவும் இருந்து, அன்றைய உணவைச் சேர்த்துவிட்டால் அவருக்கு உலகமே கிடைத்து விட்டது போலாகும்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் (ரலி)?


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும். மர்வான் பின் முஆவியா என்பவரின் வழியாகவே இந்தச் செய்தியை நாம் அறிகிறோம்.

“ஹீஸத் – حِيزَتْ” என்பதற்கு திரட்டப்பட்டது, சேகரிக்கப்பட்டது என்று பொருள்.

இதே செய்தியை முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ அவர்கள், ஹுமைதீ —> மர்வான் பின் முஆவியா … என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அபுத்தர்தா (ரலி) அவர்களின் வழியாகவும் வந்துள்ளது.


«مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»


Tirmidhi-3291

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

அத்தியாயம்: 55

அர்ரஹ்மான் – அளவிலா அருளாளன்.

3291. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் சென்று (அல்குர்ஆன்: 55:1-78) எனும் அர்ரஹ்மான் அத்தியாயத்தை அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை ஓதிக் காட்டினார்கள். ஆனால் அவர்கள் அமைதியாக இருந்தனர்.

உடனே, நபி (ஸல்) அவர்கள், “நான் இதை ஜின்களிடம் ‘ஜின்களின் இரவில்’ ஓதிக்காட்டினேன். அவர்கள் உங்களைவிடச் சிறப்பாகப் பதிலளித்தார்கள். நான், ‘(மக்களே, ஜின்களே!) உங்கள் இருவரின் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்யாக்குவீர்கள்?’ என்ற வசனத்தைக் கடக்கும்போதெல்லாம், ‘எங்களின் இரட்சகனே! உனது அருட்கொடைகளில் எதையும் நாங்கள் பொய்யாக்கவில்லை. உனக்கே எல்லாப் புகழும்’ என்று அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதை வலீத் பின் முஸ்லிம் —> ஸுஹைர் பின் முஹம்மத் என்ற அறிவிப்பாளர்தொடர் வழியாகவே நாம் அறிகிறோம்.

அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ஷாம் நாட்டின் ஸுஹைர் பின் முஹம்மத் என்பவர் வேறு. ஈராக் நாட்டின் ஸுஹைர் பின் முஹம்மத் என்பவர் வேறு. (இவ்வாறு அஹ்மத் அவர்கள் கூறிய காரணம்) ஷாம்

خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ، فَقَرَأَ عَلَيْهِمْ سُورَةَ الرَّحْمَنِ مِنْ أَوَّلِهَا إِلَى آخِرِهَا فَسَكَتُوا، فَقَالَ: ” لَقَدْ قَرَأْتُهَا عَلَى الجِنِّ لَيْلَةَ الجِنِّ فَكَانُوا أَحْسَنَ مَرْدُودًا مِنْكُمْ، كُنْتُ كُلَّمَا أَتَيْتُ عَلَى قَوْلِهِ {فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ} [الرحمن: 13] قَالُوا: لَا بِشَيْءٍ مِنْ نِعَمِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الحَمْدُ “


Tirmidhi-2304

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2304.


«نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالفَرَاغُ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ،


Tirmidhi-3974

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3974. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தேவையைத் தம் இறைவனிடமே கேட்கட்டும். எந்த அளவிற்கெனில் உப்பையும் அவனிடமே கேட்கட்டும். தன் செருப்பு வார் அறுந்தாலும் அவனிடமே கேட்கட்டும்.

அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ (ரஹ்)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதுவே (இதற்கு முன் வந்துள்ள) கதன் பஸரீ அறிவிக்கும் ஹதீஸ் எண்-3973 ஐ விட மிகச் சரியானது ஆகும்.


«لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ حَتَّى يَسْأَلَهُ المِلْحَ، وَحَتَّى يَسْأَلَهُ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ»


Tirmidhi-3973

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

3973. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தேவையைத் தம் இறைவனிடமே கேட்கட்டும். எந்தளவுக்கெனில் தன் செருப்பு வார் அறுந்தாலும் அவனிடமே கேட்க வேண்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இந்தச் செய்தியை பலரும் ஜஅஃபர் பின் ஸுலைமான் —> ஸாபித் அல்புனானீ —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். அவர்கள் இதில் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களைக் குறிப்பிடவில்லை.


«لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ كُلَّهَا حَتَّى يَسْأَلَ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ»


Tirmidhi-3970

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

3970. அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொள்வது, அழகிய முறையில் அவனை வணங்குவதில் அடங்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தி ஆகும்.

 


«إِنَّ حُسْنَ الظَّنِّ بِاللَّهِ مِنْ حُسْنِ عِبَادَةِ اللَّهِ»


Next Page » « Previous Page