Category: திர்மிதீ

Tirmidhi-1498

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1498.


«أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ العَيْنَ وَالأُذُنَ، وَأَنْ لَا نُضَحِّيَ بِمُقَابَلَةٍ، وَلَا مُدَابَرَةٍ، وَلَا شَرْقَاءَ، وَلَا خَرْقَاءَ»

حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شُرَيْحِ بْنِ النُّعْمَانِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ وَزَادَ، قَالَ: المُقَابَلَةُ: مَا قُطِعَ طَرَفُ أُذُنِهَا، وَالمُدَابَرَةُ: مَا قُطِعَ مِنْ جَانِبِ الأُذُنِ، وَالشَّرْقَاءُ: المَشْقُوقَةُ، وَالخَرْقَاءُ: المَثْقُوبَةُ.


Tirmidhi-3180

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3180.

…ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் விஷயத்தில் அவதூறு பரவியதை நினைத்து என் வீட்டில்) நான் அழுதேன். என் தந்தை (அபூபக்ர்) வீட்டிற்கு மேலே (குர்ஆன்) ஓதிக் கொண்டிருந்தார். என்னுடைய (அழும்) குரலை அவர் கேட்டு கீழே இறங்கி வந்தார். என் தாயிடத்தில் ஆயிஷாவிற்கு என்ன ஆனது? என்று கேட்டார்.

ஆயிஷா விஷயத்தில் சொல்லப்பட்ட (அவதூறான) விஷயம் ஆயிஷாவிற்குத் தெரிந்து விட்டது. (அதனால் அழுகிறாள்) என்று என் தாய் கூறினார். அப்போது (என் தந்தையின்) கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. என் அருமை மகளே நீ உன் வீட்டிற்கே நீ திரும்பிச் செல்ல வேண்டும் என்று சத்தியமிட்டுக் கூறினார். நான் (நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்கு) திரும்பி வந்து விட்டேன்…


لَمَّا ذُكِرَ مِنْ شَأْنِي الَّذِي ذُكِرَ وَمَا عَلِمْتُ بِهِ، قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيَّ خَطِيبًا فَتَشَهَّدَ وَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ: ” أَمَّا بَعْدُ: أَشِيرُوا عَلَيَّ فِي أُنَاسٍ أَبَنُوا أَهْلِي وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي مِنْ سُوءٍ قَطُّ وَأَبَنُوا بِمَنْ وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهِ مِنْ سُوءٍ قَطُّ وَلَا دَخَلَ بَيْتِي قَطُّ إِلَّا وَأَنَا حَاضِرٌ وَلَا غِبْتُ فِي سَفَرٍ إِلَّا غَابَ مَعِي “، فَقَامَ سَعْدُ بْنُ مُعَاذٍ فَقَالَ: ائْذَنْ لِي يَا رَسُولَ اللَّهِ أَنْ أَضْرِبَ أَعْنَاقَهُمْ، وَقَامَ رَجُلٌ مِنْ بَنِي الخَزْرَجِ وَكَانَتْ أُمُّ حَسَّانَ بْنِ ثَابِتٍ مِنْ رَهْطِ ذَلِكَ الرَّجُلِ، فَقَالَ: كَذَبْتَ، أَمَا وَاللَّهِ أَنْ لَوْ كَانُوا مِنَ الأَوْسِ مَا أَحْبَبْتَ أَنْ تُضْرَبَ أَعْنَاقُهُمْ حَتَّى كَادَ أَنْ يَكُونَ بَيْنَ الأَوْسِ وَالخَزْرَجِ شَرٌّ فِي المَسْجِدِ وَمَا عَلِمْتُ بِهِ، فَلَمَّا كَانَ مَسَاءُ ذَلِكَ اليَوْمِ خَرَجْتُ لِبَعْضِ حَاجَتِي وَمَعِي أُمُّ مِسْطَحٍ فَعَثَرَتْ، فَقَالَتْ: تَعِسَ مِسْطَحٌ، فَقُلْتُ لَهَا: أَيْ أُمُّ تَسُبِّينَ ابْنَكِ؟ فَسَكَتَتْ، ثُمَّ عَثَرَتِ الثَّانِيَةَ فَقَالَتْ: تَعِسَ مِسْطَحٌ، فَقُلْتُ لَهَا: أَيْ أُمُّ تَسُبِّينَ ابْنَكِ؟ فَسَكَتَتْ، ثُمَّ عَثَرَتِ الثَّالِثَةَ فَقَالَتْ: تَعِسَ مِسْطَحٌ فَانْتَهَرْتُهَا، فَقُلْتُ لَهَا: أَيْ أُمُّ تَسُبِّينَ ابْنَكِ؟ فَقَالَتْ: وَاللَّهِ مَا أَسُبُّهُ إِلَّا فِيكِ، فَقُلْتُ: فِي أَيِّ شَيْءٍ؟ قَالَتْ: فَبَقَرَتْ لِي الحَدِيثَ، قُلْتُ: وَقَدْ كَانَ هَذَا؟ قَالَتْ: نَعَمْ، وَاللَّهِ لَقَدْ رَجَعْتُ إِلَى بَيْتِي وَكَأَنَّ الَّذِي خَرَجْتُ لَهُ لَمْ أَخْرُجْ. لَا أَجِدُ مِنْهُ قَلِيلًا وَلَا كَثِيرًا، وَوُعِكْتُ، فَقُلْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرْسِلْنِي إِلَى بَيْتِ أَبِي، فَأَرْسَلَ مَعِي الغُلَامَ، فَدَخَلْتُ الدَّارَ، فَوَجَدْتُ أُمَّ رُومَانَ فِي السُّفْلِ وَأَبُو بَكْرٍ فَوْقَ البَيْتِ يَقْرَأُ، فَقَالَتْ أُمِّي: مَا جَاءَ بِكِ يَا بُنَيَّةُ؟ قَالَتْ: فَأَخْبَرْتُهَا، وَذَكَرْتُ لَهَا الحَدِيثَ، فَإِذَا هُوَ لَمْ يَبْلُغْ مِنْهَا مَا بَلَغَ مِنِّي، قَالَتْ: يَا بُنَيَّةُ خَفِّفِي عَلَيْكِ الشَّأْنَ، فَإِنَّهُ وَاللَّهِ لَقَلَّمَا كَانَتْ امْرَأَةٌ حَسْنَاءُ عِنْدَ رَجُلٍ يُحِبُّهَا، لَهَا ضَرَائِرُ إِلَّا حَسَدْنَهَا وَقِيلَ فِيهَا، فَإِذَا هِيَ لَمْ يَبْلُغْ مِنْهَا مَا بَلَغَ مِنِّي، قَالَتْ: قُلْتُ: وَقَدْ عَلِمَ بِهِ أَبِي؟ قَالَتْ: نَعَمْ، قُلْتُ: وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: نَعَمْ، وَاسْتَعْبَرْتُ وَبَكَيْتُ، فَسَمِعَ أَبُو بَكْرٍ صَوْتِي وَهُوَ فَوْقَ البَيْتِ يَقْرَأُ فَنَزَلَ فَقَالَ لِأُمِّي: مَا شَأْنُهَا؟ قَالَتْ: بَلَغَهَا الَّذِي ذُكِرَ مِنْ شَأْنِهَا، فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ: أَقَسَمْتُ عَلَيْكِ يَا بُنَيَّةُ إِلَّا رَجَعْتِ إِلَى بَيْتِكِ، فَرَجَعْتُ، وَلَقَدْ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَيْتِي فَسَأَلَ عَنِّي خَادِمَتِي فَقَالَتْ: لَا وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهَا عَيْبًا إِلَّا أَنَّهَا كَانَتْ تَرْقُدُ حَتَّى تَدْخُلَ الشَّاةُ فَتَأْكُلَ خَمِيرَتَهَا أَوْ عَجِينَتَهَا، وَانْتَهَرَهَا


Tirmidhi-3519

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

3519. பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த (நபித்தோழர்) ஒருவர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய கையில் அல்லது அவர்களுடைய கையில் (விரல்களை மடக்கி) பின்வருமாறு எண்ணிக் கூறினார்கள்:

1 . ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன் என்று துதிப்பது) நன்மையின் தராசில் பாதியை நிரப்பிவிடும்.
2 . அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! என்று துதிப்பது) நன்மையின் தராசை நிரப்பிவிடும்.
3 . அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன் என்று துதிப்பது) வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்டதை நிரப்பிவிடும்.
4 . நோன்பு பொறுமையின் பாதியாகும்.
5 . தூய்மை இறைநம்பிக்கையின் பாதியாகும்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் “ஹஸன்” எனும் தரத்தைச் சேர்ந்ததாகும். இந்த ஹதீஸை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து ஷுஅபா, ஸுஃப்யான் ஸவ்ரீ ஆகியோரும் அறிவித்துள்ளனர்.


عَدَّهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِي أَوْ فِي يَدِهِ: «التَّسْبِيحُ نِصْفُ المِيزَانِ، وَالْحَمْدُ يَمْلَؤُهُ، وَالتَّكْبِيرُ يَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ، وَالطُّهُورُ نِصْفُ الإِيمَانِ»


Tirmidhi-1503

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

கொம்புடைந்த, காது பிளக்கப்பட்ட பிராணியை குர்பானி கொடுப்பது.

1503. ஒரு மாட்டை ஏழுபேர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், அது கன்றை ஈன்றால் என்ன செய்வது? என்றுக் கேட்டேன். அதற்கவர்கள், அதையும் அதனுடன் அறுத்துக்கொள்! என்று கூறினார்கள்.

அது நொண்டியாக இருந்தால்? (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்று கேட்டேன். அதற்கவர்கள், அதனால் அறுக்கும் இடத்திற்கு செல்லமுடியும் என்றால் அதை குர்பானி கொடுக்கலாம் என்று கூறினார்கள்.

கொம்புடைந்ததாக இருந்தால்? என்று கேட்டேன். அதற்கவர்கள், அது பரவாயில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானி பிராணியின் கண்களையும், காதுகளையும் உன்னிப்பாக கவனித்து வாங்குமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள் (அல்லது எங்களுக்கு கட்டளையிடப்பட்டது) என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹுஜய்யா பின் அதீ (ரஹ்)


البَقَرَةُ عَنْ سَبْعَةٍ، قُلْتُ: فَإِنْ وَلَدَتْ؟ قَالَ: اذْبَحْ وَلَدَهَا مَعَهَا، قُلْتُ: فَالعَرْجَاءُ، قَالَ: إِذَا بَلَغَتِ المَنْسِكَ، قُلْتُ: فَمَكْسُورَةُ القَرْنِ، قَالَ: لَا بَأْسَ «أُمِرْنَا، أَوْ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ العَيْنَيْنِ وَالأُذُنَيْنِ»


Tirmidhi-1504

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1504. பாதி அல்லது பாதிக்குமேல் கொம்பும், காதும் இல்லாத ஆட்டை குர்பானி கொடுப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُضَحَّى بِأَعْضَبِ القَرْنِ وَالأُذُنِ» قَالَ قَتَادَةُ: فَذَكَرْتُ ذَلِكَ لِسَعِيدِ بْنِ المُسَيِّبِ، فَقَالَ: العَضْبُ، مَا بَلَغَ النِّصْفَ فَمَا فَوْقَ ذَلِكَ


Tirmidhi-210

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் என்னக் கூறவேண்டும்?

210. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் (தஷஹ்ஹுத்) அறிவிப்பை கேட்கக்கூடியவர், “வ அன அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பா, வபி முஹம்மதிர் ரஸூலா, வபில் இஸ்லாமி தீனா” என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நானும் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதை லைஸ் பின் ஸஃத் —> ஹுகைம் பின் அப்துல்லாஹ் பின் கைஸ் என்ற அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே நாம் அறிகிறோம்.


مَنْ قَالَ حِينَ يَسْمَعُ المُؤَذِّنَ: وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالإِسْلَامِ دِينًا، غُفِرَ لَهُ ذَنْبُهُ


Tirmidhi-3389

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3389. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் மாலையில், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் நபிய்யா” என்று கூறினால் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


مَنْ قَالَ حِينَ يُمْسِي: رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ “


Tirmidhi-2501

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2501. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வாய்மூடிவிட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ صَمَتَ نَجَا»


Tirmidhi-2915

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2915. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமைநாளில் (அல்லாஹ்விடம்) குர்ஆன் வந்து, “என் இறைவா! (குர்ஆனைக் கற்று அதன்படி செயல்பட்ட) இந்த மனிதரை அலங்கரிப்பாயாக! என்று கூறும். எனவே அவருக்கு கண்ணியம் என்னும் கிரீடம் அணிவிக்கப்படும். அதற்கு பிறகும் குர்ஆன், “என் இறைவா! இன்னும் அதிகப்படுத்துவாயாக! என்று கூறும். எனவே அவருக்கு கண்ணியம் என்னும் உயர்ரக ஆடை அணிவிக்கப்படும். அதற்கு பிறகும் குர்ஆன், “என் இறைவா! இவரைப் பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும். எனவே அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்வான்.

மேலும் அவரிடம், குர்ஆனை ஓதுவீராக! உயர்வாயாக! என்று கூறப்படும். (எனவே அவர் ஓதுவார்). அவர் ஓதும் ஒவ்வொரு வசனத்திற்கும் அவருக்கு அந்தஸ்து அதிகமாக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் ஜஃபர் (ஃகுன்தர்) அவர்கள் இந்த செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார்.

மேற்கண்ட-ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துஸ்ஸமத் அவர்களின் செய்தியை விட, அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றாக வந்துள்ள இந்த செய்தியே (நம்முடைய பார்வையில்) மிகச் சரியானதாகும்.


يَجِيءُ القُرْآنُ يَوْمَ القِيَامَةِ فَيَقُولُ: يَا رَبِّ حَلِّهِ، فَيُلْبَسُ تَاجَ الكَرَامَةِ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ زِدْهُ، فَيُلْبَسُ حُلَّةَ الكَرَامَةِ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ ارْضَ عَنْهُ، فَيَرْضَى عَنْهُ، فَيُقَالُ لَهُ: اقْرَأْ وَارْقَ، وَيُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً “:

«هَذَا حَدِيثٌ حَسَنٌ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ ابْنِ بَهْدَلَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، نَحْوَهُ، وَلَمْ يَرْفَعْهُ.

«وهَذَا أَصَحُّ عِنْدَنَا مِنْ حَدِيثِ عَبْدِ الصَّمَدِ، عَنْ شُعْبَةَ»


Tirmidhi-1820

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவர் (சாப்பிடும்) உணவு இருவருக்குப் போதுமானதாகும் என்று வந்துள்ள ஹதீஸ்கள்.

1820. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(வேறு அறிவிப்பாளர் தொடரில்) ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு மூவருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன்-ஸஹீஹ் ஆகும். மேற்கண்ட செய்தியின் கருத்து ஜாபிர் (ரலி), இப்னு உமர் (ரலி) போன்றோர் வழியாகவும் வந்துள்ளது.


«طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَةَ، وَطَعَامُ الثَّلَاثَةِ كَافِي الأَرْبَعَةَ»

وَرَوَى جَابِرٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «طَعَامُ الوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الأَرْبَعَةَ، وَطَعَامُ الأَرْبَعَةِ يَكْفِي الثَّمَانِيَةَ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا


Next Page » « Previous Page