Category: திர்மிதீ

Tirmidhi-2270

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒரு இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.

2270. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காலம் சுருங்கும்போது ஒரு இறைநம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார். ஒரு முஸ்லிம் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.

கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், உடனே அவர் எழுந்து இடது புறம் துப்பிவிடட்டும். அதைப் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஹம்மது பின் ஸீரீன் கூறுகிறார்:)

நான் காலில் விலங்கிடப்படுவதைப் போன்று கனவு காண்பதை விரும்புகிறேன். கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை வெறுக்கிறேன். கால் விலங்கு, மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும்.


إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا المُؤْمِنِ تَكْذِبُ، وَأَصْدَقُهُمْ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا، وَرُؤْيَا المُسْلِمِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ. وَالرُّؤْيَا ثَلَاثٌ: فَالرُّؤْيَا الصَّالِحَةُ بُشْرَى مِنَ اللَّهِ، وَالرُّؤْيَا مِنْ تَحْزِينِ الشَّيْطَانِ، وَالرُّؤْيَا مِمَّا يُحَدِّثُ بِهَا الرَّجُلُ نَفْسَهُ فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُمْ وَلْيَتْفُلْ وَلَا يُحَدِّثْ بِهَا النَّاسَ “

قَالَ: «وَأُحِبُّ القَيْدَ فِي النَّوْمِ وَأَكْرَهُ الغُلَّ» الْقَيْدُ: ثَبَاتٌ فِي الدِّينِ.


Tirmidhi-2272

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நபித்துவம் முடிந்துவிட்டது, நற்செய்திகள் எஞ்சியுள்ளன.

2272. தூதுத்துவமும், நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டன. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை. நபியும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், “என்றாலும் (முபஷ்ஷராத்) நற்செய்திகள் (எஞ்சியுள்ளது) என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! (முபஷ்ஷராத்) நற்செய்திகள் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدْ انْقَطَعَتْ فَلَا رَسُولَ بَعْدِي وَلَا نَبِيَّ»، قَالَ: فَشَقَّ ذَلِكَ عَلَى النَّاسِ فَقَالَ: «لَكِنِ المُبَشِّرَاتُ». قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا المُبَشِّرَاتُ؟ قَالَ: «رُؤْيَا المُسْلِمِ، وَهِيَ جُزْءٌ مِنْ أَجْزَاءِ النُّبُوَّةِ»


Tirmidhi-2219

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2219. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய சமுதாயத்திலிருந்து சில கோத்திரங்கள் இணைவைப்பாளர்களோடு இணைந்து சிலைகளை வணங்கும் வரை கியாமத் நாள் ஏற்படாது.

என்னுடைய சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும், தான் நபி என்று வாதிடுவார்கள். நான் தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالمُشْرِكِينَ، وَحَتَّى يَعْبُدُوا الأَوْثَانَ، وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلَاثُونَ كَذَّابُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي»


Tirmidhi-3120

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3120.


عَنِ النَّبِيِّ [ص:296] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَوْلِ اللَّهِ تَعَالَى: {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالقَوْلِ الثَّابِتِ فِي الحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ} [إبراهيم: 27] قَالَ: ” فِي القَبْرِ إِذَا قِيلَ لَهُ: مَنْ رَبُّكَ، وَمَا دِينُكَ، وَمَنْ نَبِيُّكَ


Tirmidhi-2180

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நீங்கள் உங்களுக்கு முன்னுள்ளவர்களின் வழிமுறைகளைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்…

2180. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தனது தோழர்களுடன்) ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றபோது “தாத் அன்வாத்‘ என்று சொல்லப்பட்ட, இணை வைப்பவர்களுக்கென்று இருந்த ஒரு இலந்தை மரத்தை கடந்து சென்றார்கள். அவர்கள் (பரக்கத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளை அதில் தொங்கவிட்டு கொள்வர்.

அதைக் கண்ட நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத் அன்வாத்‘ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்‘ என்று கேட்டார்கள்.(அல்குர்ஆன் 7:138) இதைப் போலவே, நீங்களும் கேட்கிறீர்கள்.) என்று கூறிவிட்டு,

“என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னுள்ளவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாக்கித் அல்லைஸி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى حُنَيْنٍ مَرَّ بِشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ يُقَالُ لَهَا: ذَاتُ أَنْوَاطٍ يُعَلِّقُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” سُبْحَانَ اللَّهِ هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى {اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ} [الأعراف: 138] وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَّةَ مَنْ كَانَ قَبْلَكُمْ


Tirmidhi-2879

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2879. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் காலையில் ஃகாஃபிர்(40 வது) அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களையும், (2: 255 வது வசனம்) ஆயத்துல் குர்ஸியையும்,  ஓதுவாரோ அவர், மாலை வரை பாதுகாக்கப்படுவார். யார் அதை மாலையில் ஓதுவாரோ அவர், காலை வரை பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ قَرَأَ حم المُؤْمِنَ إِلَى {إِلَيْهِ المَصِيرُ} [غافر: 3] وَآيَةَ الكُرْسِيِّ حِينَ يُصْبِحُ حُفِظَ بِهِمَا حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَرَأَهُمَا حِينَ يُمْسِي حُفِظَ بِهِمَا حَتَّى يُصْبِحَ


Tirmidhi-421

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

421. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا المَكْتُوبَةُ»،


Tirmidhi-180

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

180. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகை தொழ முடியாமல் போய்விட்டது” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதை (இதுவரை) தொழவில்லை” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிலுள்ள) புத்ஹான் எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். நாங்களும் அங்கத் தூய்மை செய்தோம். (அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பிறகு மஃக்ரிப் தொழுதார்கள்…


أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، قَالَ يَوْمَ الخَنْدَقِ وَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا كِدْتُ أُصَلِّي العَصْرَ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ إِنْ صَلَّيْتُهَا»، قَالَ: فَنَزَلْنَا بُطْحَانَ، فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَوَضَّأْنَا، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ العَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا المَغْرِبَ


Tirmidhi-2889

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2889. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை  ஓதுபவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةِ الجُمُعَةِ غُفِرَ لَهُ»


Tirmidhi-2888

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

துஃகான் (44 வது) அத்தியாயத்தின் சிறப்பு.

2888. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவருக்கு காலை வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةٍ أَصْبَحَ يَسْتَغْفِرُ لَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ»


Next Page » « Previous Page