Category: திர்மிதீ

Tirmidhi-65

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண் உளூச் செய்வதற்கு அனுமதி.

65. நபி (ஸல்) அவர்கள் மனைவியரில் ஒருவர், வாய் அகன்ற பாத்திரத்தில் குளித்தார்கள். ‎அப்போது நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக வந்த ‎போது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் குளிப்பு கடமையானவளாக இருந்தேன் ‎என்று அவர் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அதனால்) தண்ணீர் பெருந்துடக்குள்ளதாக-தூய்மையற்றதாக ஆகிவிடாது” என்று  ‎பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ، فَأَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَوَضَّأَ مِنْهُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ جُنُبًا، فَقَالَ: «إِنَّ المَاءَ لَا يُجْنِبُ».


Tirmidhi-64

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

64. பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண் உளூச் செய்வதை நபி (ஸல்) அவர்கள் ‎தடை செய்தார்கள் .

அறிவிப்பவர்: ஹகம் பின் அமர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் மஹ்மூத் பின் ஃகைலான் பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீர் அல்லது பெண் வாய் வைத்த தண்ணீர் என்று சந்தேகமாக அறிவிக்கிறார். முஹம்மத் பின் பஷ்ஷார் அவ்வாறு சந்தேகமாக அறிவிக்வில்லை.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ طَهُورِ المَرْأَةِ – أَوْ قَالَ: بِسُؤْرِهَا – “،


Tirmidhi-63

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரை பயன்படுத்துவது வெறுப்புக்குரியது.

63. பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரை (பயன்படுத்துவதை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

அறிவிப்பவர்: பனூ ஃகிஃபார் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ فَضْلِ طَهُورِ المَرْأَةِ».


Tirmidhi-62

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஆணும், பெண்ணும் ஒரே பாத்திரத்தில் உளூச் செய்தல்.

62. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் பெருந்துடக்கினால் ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:


«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ»


Tirmidhi-61

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் ஒரே உளூவில் பல(நேரத்)தொழுகைகளை தொழுதது குறித்து வந்துள்ளவை.

61. நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்பவர்களாக இருந்தார்கள். மக்கா வெற்றியின் போது ஒரே உளூவில் ஐந்து நேரத்தொழுகைகளை தொழுதார்கள். தனது காலுறைகளுக்கு மஸஹ் செய்து கொண்டார்கள். அப்போது அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், நீங்கள் இது வரை செய்திராத ஒன்றை இன்று செய்தீர்களே (ஏன்) என்று கேட்க, “நான் வேண்டுமென்று தான் செய்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ، فَلَمَّا كَانَ عَامُ الفَتْحِ صَلَّى الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ»، فَقَالَ عُمَرُ: إِنَّكَ فَعَلْتَ شَيْئًا لَمْ تَكُنْ فَعَلْتَهُ، قَالَ: «عَمْدًا فَعَلْتُهُ».


Tirmidhi-262

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது


أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَانَ يَقُولُ فِي رُكُوعِهِ ‏”‏ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ‏”‏ ‏.‏ وَفِي سُجُودِهِ ‏”‏ سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى ‏”‏ ‏.‏ وَمَا أَتَى عَلَى آيَةِ رَحْمَةٍ إِلاَّ وَقَفَ وَسَأَلَ وَمَا أَتَى عَلَى آيَةِ عَذَابٍ إِلاَّ وَقَفَ وَتَعَوَّذَ


Tirmidhi-695

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

695.


«إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ فَإِنَّهُ طَهُورٌ»


Tirmidhi-3356

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3356. பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 102:8) எனும் இறைவசனம் இறங்கியபோது, ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாம் அப்படி எந்த அருட்கொடையைப் பற்றி விசாரிக்கப்படப்போகிறோம்? (நம்மிடம் இருப்பது) இந்த இரு கறுப்புகளான பேரீத்தம்பழமும், தண்ணீரும் மட்டும்தானே என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இவ்விரண்டும் பெரும் அருட்கொடைகள் தான் என்பதால் ஆம்) “இவற்றைப் பற்றியும் நம்மிடம் விசாரணை உள்ளது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)


لَمَّا نَزَلَتْ: {ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ} [التكاثر: 8] قَالَ الزُّبَيْرُ: يَا رَسُولَ اللَّهِ، وَأَيُّ النَّعِيمِ نُسْأَلُ عَنْهُ، وَإِنَّمَا هُمَا الأَسْوَدَانِ التَّمْرُ وَالمَاءُ؟ قَالَ: «أَمَا إِنَّهُ سَيَكُونُ»


Tirmidhi-3123

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3123.


«لِجَهَنَّمَ سَبْعَةُ أَبْوَابٍ، بَابٌ مِنْهَا لِمَنْ سَلَّ السَّيْفَ عَلَى أُمَّتِي» أَوْ قَالَ: «عَلَى أُمَّةِ مُحَمَّدٍ»


Tirmidhi-489

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

489.


«التَمِسُوا السَّاعَةَ الَّتِي تُرْجَى فِي يَوْمِ الجُمُعَةِ بَعْدَ العَصْرِ إِلَى غَيْبُوبَةِ الشَّمْسِ»


Next Page » « Previous Page