பாடம்:
அசுத்தங்களை உண்டு வாழும் பிராணிகளின் இறைச்சியை உண்பதும் அதன் பாலை குடிப்பதும் பற்றி வந்துள்ளவை.
1824. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அசுத்தங்களை உண்ணும் பிராணிகளின் இறைச்சியை உண்பதற்கும், அவற்றின் பாலைக் குடிப்பதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) வழியாகவும் வந்துள்ளன. மேற்கண்ட ஹதீஸ் ‘ஹஸன் ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.
இப்னு அபூநஜீஹ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் இதை இப்னு அபூநஜீஹ் —> முஜாஹித் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் (நபித்தோழரைக் குறிப்பிடாமல்) முர்ஸலாக அறிவித்துள்ளார்.
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الجَلَّالَةِ وَأَلْبَانِهَا»
சமீப விமர்சனங்கள்