உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களுக்குத் தொழக் கட்டளையிடுங்கள். பதின்மூன்று வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அதற்காக அவர்களை அடியுங்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
(daraqutni-891: 891)حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ , نا الْفَضْلُ بْنُ سَهْلٍ , ثنا دَاوُدُ بْنُ الْمُحَبَّرِ , ثنا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى , عَنْ ثُمَامَةَ , عَنْ أَنَسٍ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مُرُوهُمْ بِالصَّلَاةِ لِسَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِثَلَاثَ عَشْرَةَ»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-891.
Daraqutni-Shamila-891.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-772.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15216-தாவூத் பின் முஹப்பர் என்பவர் பற்றி, இவர் ஹதீஸ் என்றால் என்னவென்றே அறியமாட்டார் என்று இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
ஆகியோர் கூறியுள்ளனர். - இவர் பலவீனமானவர் என்று இமாம் அபூஸுர்ஆ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் கூறியுள்ளனர். - இவர் ஹதீஸ்துறையில் விடப்பட வேண்டியவர் என்றும், இவர் மைஸரா என்பவரிடமிருந்து ஹதீஸைத் திருடி சம்பந்தமில்லாத வேறு அறிவிப்பாளர் தொடரை இணைத்து விடுவார் என்றும் இமாம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
கூறியுள்ளார். - மேலும் இதுபோன்று பலரும் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், மிக பலவீனமானவர் என்ற கருத்திலும் விமர்சித்துள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-8/443, தஹ்தீபுத் தஹ்தீப்-1/570, தக்ரீபுத் தஹ்தீப்-1/308)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
3 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4129 , தாரகுத்னீ-891 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-494 .
சமீப விமர்சனங்கள்