தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-205

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குர்ஆன் மக்களுக்கு மத்தியில் பரவலாகும். அதை பெண்களும், சிறுவர்களும், ஆண்களும் ஓதுவார்கள்.

அப்போது ஒரு மனிதர் கூறுவார்: நான் குர்ஆனை ஓதிவிட்டேன். ஆனால், நான் பின்பற்றப்படவில்லை. (அதாவது மக்கள் என்னைப் பின்பற்றவில்லை). அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அவர்களுக்கு மத்தியில் நின்று அதை நிறைவேற்றுவேன். ஒருவேளை நான் பின்பற்றப்படலாம். அவர் அவர்களுக்கு மத்தியில் நின்று அதை நிறைவேற்றுவார். ஆனால் அவர் பின்பற்றப்படமாட்டார்.

அப்போது அவர், “நான் குர்ஆனை ஓதிவிட்டேன். ஆனால் நான் பின்பற்றப்படவில்லை. நான் அவர்களுக்கு மத்தியில் நின்று அதை நிறைவேற்றினேன். அப்போதும் நான் பின்பற்றப்படவில்லை. நான் எனது வீட்டில் எனக்கென ஒரு பள்ளிவாசலை அமைத்துக்கொள்வேன். ஒருவேளை நான் பின்பற்றப்படலாம்” என்று கூறுவார். அவர் தனது வீட்டில் ஒரு பள்ளிவாசலை அமைத்துக்கொள்வார். அப்போதும் அவர் பின்பற்றப்படமாட்டார்.

அப்போது அவர், “நான் குர்ஆனை ஓதிவிட்டேன். ஆனால் நான் பின்பற்றப்படவில்லை. நான் அவர்களுக்கு மத்தியில் நின்று நிறைவேற்றினேன். அப்போதும் நான் பின்பற்றப்படவில்லை. எனது வீட்டில் எனக்கென ஒரு பள்ளிவாசலை அமைத்துக்கொண்டேன். அப்போதும் நான் பின்பற்றப்படவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களுக்கு மத்தியில் ஒரு புதியதைக் கொண்டு வருவேன். அதை மகத்துமிக்க உயர்ந்தோனான அல்லாஹ்வின் வேதத்தில்அவர்கள் காணமாட்டார்கள். மேலும், அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தும் அவர்கள் கேட்டிருக்கமாட்டார்கள். அதனால் ஒருவேளை நான் பின்பற்றப்படலாம்” என்று கூறுவார்.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அவர் கொண்டு வருவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். (நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்). ஏனெனில், அவர் கொண்டு வருவது வழிகேடு ஆகும்.

(ஸுனன் தாரிமீ: 205)

أَخْبَرَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، قَالَ: قَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ،

” يُفْتَحُ الْقُرْآنُ عَلَى النَّاسِ حَتَّى يَقْرَأَهُ الْمَرْأَةُ وَالصَّبِيُّ وَالرَّجُلُ، فَيَقُولُ الرَّجُلُ: قَدْ قَرَأْتُ الْقُرْآنَ فَلَمْ أُتَّبَعُ، وَاللَّهِ لَأَقُومَنَّ بِهِ فِيهِمْ لَعَلِّي أُتَّبَعُ، فَيَقُومُ بِهِ فِيهِمْ فَلَا يُتَّبَعُ، فَيَقُولُ: قَدْ قَرَأْتُ الْقُرْآنَ فَلَمْ أُتَّبَعْ، وَقَدْ قُمْتُ بِهِ فِيهِمْ، فَلَمْ أُتَّبَعْ، لَأَحتَظِرَنَّ فِي بَيْتِي مَسْجِدًا لَعَلِّي أُتَّبَعُ، فَيَحْتَظِرُ فِي بَيْتِهِ مَسْجِدًا فَلَا يُتَّبَعُ، فَيَقُولُ: قَدْ قَرَأْتُ الْقُرْآنَ فَلَمْ أُتَّبَعْ، وَقُمْتُ بِهِ فِيهِمْ فَلَمْ أُتَّبَعْ، وَقَدِ احْتظرْتُ فِي بَيْتِي مَسْجِدًا، فَلَمْ أُتَّبَعْ، وَاللَّهِ لَآتِيَنَّهُمْ: بِحَدِيثٍ لَا يَجِدُونَهُ فِي كِتَابِ اللَّهِ – جَلَّ وَعَلَا – وَلَمْ يَسْمَعُوهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَلِّي أُتَّبَعُ قَالَ مُعَاذٌ: فَإِيَّاكُمْ وَمَا جَاءَ بِهِ فَإِنَّ مَا جَاءَ بِهِ ضَلَالَةٌ “


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-201.
Darimi-Shamila-205.
Darimi-Alamiah-201.
Darimi-JawamiulKalim-201.




இது முன்கதிஃயான அறிவிப்பாளர்தொடராகும்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தாரிமீ இமாம்-அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்

2 . மர்வான் பின் முஹம்மத்-அத்தாதரீ

3 . ஸயீத் பின் அப்துல்அஸீஸ்-அத்தனூகீ

4 . ரபீஆ பின் யஸீத்-அல்இயாதீ

5 . முஆத் பின் ஜபல் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15679-ரபீஆ பின் யஸீத் அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களிடம் நேரடியாக ஹதீஸைக் கேட்டதில்லை என்பதால் இது முன்கதிஃ என்பதால் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-4611.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.