தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4611

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

4611. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் தோழர்களில் ஒருவரான யஸீத் பின் உமைரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் எந்த ஒரு திக்ருடைய அமர்வில் அமர்ந்தாலும், ‘அல்லாஹ்தான் நீதியுள்ள தீர்ப்பாளன்; சந்தேகங்கொண்டோர் அழிந்தனர்!’ என்று கூறாமல் இருந்ததில்லை.

ஒருநாள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் சொன்னார்கள்:

“நிச்சயமாக உங்களுக்குப் பின்னால் பெரும் குழப்பங்கள் வர இருக்கின்றன. அவற்றில் (சில), செல்வம் (அளவுக்கு அதிகமாக) பெருகும். மேலும், குர்ஆனின் (கல்வி) விரிவுபடுத்தப்படும். அதனால் அதை நம்பிக்கை கொண்டோரும், நயவஞ்சகர்களும், ஆணும், பெண்ணும், சிறியோரும், பெரியோரும், அடிமையும், சுதந்திரமானவரும் என அனைவரும் கற்றுக்கொள்வார்கள்.

அப்போது (குர்ஆனைப் படித்த) ஒருவர், ‘நான் குர்ஆனைப் படித்துள்ளேன்! ஏன் மக்கள் என்னைப் பின்பற்ற மறுக்கிறார்கள்? நான் அவர்களுக்காக இதல்லாத வேறொன்றைப் புதிதாக உருவாக்காமல், அவர்கள் என்னைப் பின்பற்றப்போவதில்லை’ என்று சொல்லும் நிலை ஏற்படலாம்.

எனவே, நீங்கள் புதிதாக உருவாக்கப்பட்டவற்றை விட்டும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் வழிகேடே ஆகும்.

ஒரு அறிஞர் நேர்வழியிலிருந்து விலகுவதைப் பற்றி நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் சில சமயங்களில் ஷைத்தான் ஒரு அறிஞரின் நாவின் மூலம் தவறான வார்த்தையை பேச வைக்கிறான்; மேலும் சில சமயங்களில் ஒரு நயவஞ்சகன் உண்மையின் வார்த்தையைப் பேசக்கூடும்.

நான் முஆத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அறிஞர் வழிகேடான ஒரு வார்த்தையைச் சொல்லலாம் என்றும், நயவஞ்சகன் உண்மையின் வார்த்தையைச் சொல்லலாம் என்றும் நான் புரிந்துக் கொள்ளமுடியவில்லையே?” என்று கேட்டேன்.

அதற்கு முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஆம்! (புரிந்துக் கொள்ளமுடியாது தான்). அறிஞரின் பேச்சில், ‘இது என்ன?’ என்று (மக்கள் குழம்பிவிடும்) கருத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால், அந்த ஒரு காரணத்திற்காகவே, அவரை விட்டும் நீங்கள் முற்றிலும் விலகிவிட வேண்டாம். ஏனென்றால், அவர் (தவறை உணர்ந்து) திருந்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மேலும், நீங்கள் உண்மையைக் கேட்கும்போது அதை ஏற்று நடத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், உண்மைக்கு ஒளி இருக்கிறது.


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் மஃமர் அவர்கள், “வ லா யுஸ்னியன்னக” என்பதற்குப் பதிலாக “வ லா யுன்இயன்னக” என்று அறிவித்துள்ளார். இரண்டும் “உன்னை விலக்கி விட வேண்டாம்” என்ற ஒரே பொருளைக் கொண்டது.

இந்தச் செய்தியை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸாலிஹ் பின் கைஸான் அவர்கள், “முஷ்தஹிராதி”  என்பதற்குப் பதிலாக “முஷப்பிஹாதி” என்று அறிவித்துள்ளார். மேலும் உகைல் அவர்கள் கூறியது போன்றே “லா யுஸ்னியன்னக” என்று அறிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு இஸ்ஹாக் அவர்கள், “ஆம், ஒரு அறிஞரின் பேச்சைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால், ‘இந்த வார்த்தையின் மூலம் அவர் என்ன கருதினார்?’ என்று நீங்கள் கேட்டு, அதற்கு விளக்கம் கிடைக்காத போது (சந்தேகப்படுங்கள்)” என்ற கருத்தை அறிவித்துள்ளார்.


حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا إِدْرِيسَ الْخَوْلَانِيَّ عَائِذَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ يَزِيدَ بْنَ عُمَيْرَةَ – وَكَانَ مِنْ أَصْحَابِ مُعَاذِ بْنِ جَبَلٍ – أَخْبَرَهُ قَالَ:

كَانَ لَا يَجْلِسُ مَجْلِسًا لِلذِّكْرِ حِينَ يَجْلِسُ إِلَّا قَالَ: «اللَّهُ حَكَمٌ قِسْطٌ هَلَكَ الْمُرْتَابُونَ»، فَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ يَوْمًا: ” إِنَّ مِنْ وَرَائِكُمْ فِتَنًا يَكْثُرُ فِيهَا الْمَالُ، وَيُفْتَحُ فِيهَا الْقُرْآنُ حَتَّى يَأْخُذَهُ الْمُؤْمِنُ وَالْمُنَافِقُ، وَالرَّجُلُ، وَالْمَرْأَةُ، وَالصَّغِيرُ، وَالْكَبِيرُ، وَالْعَبْدُ، وَالْحُرُّ، فَيُوشِكُ قَائِلٌ أَنْ يَقُولَ: مَا لِلنَّاسِ لَا يَتَّبِعُونِي وَقَدْ قَرَأْتُ الْقُرْآنَ؟ مَا هُمْ بِمُتَّبِعِيَّ حَتَّى أَبْتَدِعَ لَهُمْ غَيْرَهُ، فَإِيَّاكُمْ وَمَا ابْتُدِعَ، فَإِنَّ مَا ابْتُدِعَ ضَلَالَةٌ، وَأُحَذِّرُكُمْ زَيْغَةَ الْحَكِيمِ، فَإِنَّ الشَّيْطَانَ قَدْ يَقُولُ كَلِمَةَ الضَّلَالَةِ عَلَى لِسَانِ الْحَكِيمِ، وَقَدْ يَقُولُ الْمُنَافِقُ كَلِمَةَ الْحَقِّ “، قَالَ: قُلْتُ لِمُعَاذٍ: مَا يُدْرِينِي رَحِمَكَ اللَّهُ أَنَّ الْحَكِيمَ قَدْ يَقُولُ كَلِمَةَ الضَّلَالَةِ وَأَنَّ الْمُنَافِقَ قَدْ يَقُولُ كَلِمَةَ الْحَقِّ؟ قَالَ: «بَلَى، اجْتَنِبْ مِنْ كَلَامِ الْحَكِيمِ الْمُشْتَهِرَاتِ الَّتِي يُقَالُ لَهَا مَا هَذِهِ، وَلَا يُثْنِيَنَّكَ ذَلِكَ عَنْهُ، فَإِنَّهُ لَعَلَّهُ أَنْ يُرَاجِعَ، وَتَلَقَّ الْحَقَّ إِذَا سَمِعْتَهُ فَإِنَّ عَلَى الْحَقِّ نُورًا»،

قَالَ أَبُو دَاوُدَ: قَالَ مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ فِي هَذَا الْحَدِيثِ، وَلَا يُنْئِيَنَّكَ ذَلِكَ عَنْهُ، مَكَانَ يُثْنِيَنَّكَ، وَقَالَ صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنِ الزُّهْرِيِّ، فِي هَذَا: الْمُشَبِّهَاتِ، مَكَانَ الْمُشْتَهِرَاتِ، وَقَالَ: لَا يُثْنِيَنَّكَ كَمَا قَالَ عُقَيْلٌ، وَقَالَ ابْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ بَلَى مَا تَشَابَهَ عَلَيْكَ مِنْ قَوْلِ الْحَكِيمِ حَتَّى تَقُولَ مَا أَرَادَ بِهَذِهِ الْكَلِمَةِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3995.
Abu-Dawood-Shamila-4611.
Abu-Dawood-Alamiah-3995.
Abu-Dawood-JawamiulKalim-3997.



இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்

2 . யஸீத் பின் காலித்-அல்ஹம்தானீ

3 . லைஸ் பின் ஸஃத்-அபுல்ஹாரிஸ்

4 . உகைல் பின் காலித்

5 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்

6 . அபூஇத்ரீஸ்-அல்கவ்லானீ-ஆயிதுல்லாஹ்

7 . யஸீத் பின் உமைரா

8 . முஆத் பின் ஜபல் (ரலி)


1 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

…

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, தாரிமீ-205, அபூதாவூத்-4611, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


 

அபூதாவூத் இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்

அபூதாவூத் இமாம்.


இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

யஸீத் பின் காலித்-அல்ஹம்தானீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

லைஸ் பின் ஸஃத்-அபுல்ஹாரிஸ்

الليث بن سعد أبو الحارث

இறப்பு: ஹிஜ்ரி 175

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: லைஸ் பின் ஸஃத் பின் அப்துர்ரஹ்மான்

தந்தை பெயர்: ஸஃத் பின் அப்துர்ரஹ்மான்

வம்சம்: ஃபஹ்மீ

புனைப்பெயர்: அபுல்ஹாரிஸ்

ஊர் பெயர்: கர்கஷந்தா

பயணித்த ஊர்கள்: அஸ்பஹான், எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 94, கர்கஷந்தா

இறப்பு: ஹிஜ்ரி 175

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

லைஸ் பின் ஸஃத் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 94 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்கள் எகிப்தின் இமாம், ஃபகீஹ் மற்றும் ஹதீஸ் அறிஞர் ஆவார்கள். அவர்கள் மிகப் பலமானவர் மற்றும் நம்பகமானவர் என அறிஞர்களால் போற்றப்பட்டார்கள்.

அவர்கள் மிகுந்த தாராள குணம் கொண்டவராகவும், அறிவிலும், இறையச்சத்திலும் சிறந்தவராகவும் திகழ்ந்தார்கள். அவர்கள் ஹிஜ்ரி 175 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நாஃபிஃ, அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் பின் அபூமுலைக்கா, யஸீத் பின் அபூஹபீப், யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ, முஹம்மத் பின் அஜ்லான் அல்மதனீ, அஸ்ஸுஹ்ரீ, ஹிஷாம் பின் உர்வா, அதா பின் அபூரபாஹ், புகைர் பின் அப்துல்லாஹ் பின் அல்அஷ்ஜ், ஸயீத் பின் அபூஸயீத், அபுஸ்ஸினாத், கதாதா பின் திஆமா

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஷுஐப் பின் அல்லைஸ், அப்துல்லாஹ் பின் முபாரக், அப்துல்லாஹ் பின் வஹ்ப், அப்துல்லாஹ் பின் லஹீஆ, குதைபா பின் ஸயீத், முஹம்மத் பின் அஜ்லான், ஹிஷாம் பின் ஸஃத், ஆதம் பின் அபூஇயாஸ், ஸயீத் பின் அபூமர்யம், அப்துல்லாஹ் பின் யூசுஃப் அத்துனைஸீ, அலீ பின் அய்யாஷ், ஈஸா பின் ஹம்மாத் ஸஃபா

வேறு பெயர்கள்: லைத், லைஸ் பின் ஸஃத்


ஆதாரம்: muslimscholars.info (20023) · Should verify

உகைல் பின் காலித்

عقيل بن خالد بن عقيل

இறப்பு: ஹிஜ்ரி 144, எகிப்து

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: உகைல் பின் காலித் பின் உகைல்

தந்தை பெயர்: காலித் பின் உகைல்

வம்சம்: அல்உமவீ

புனைப்பெயர்: அபூ காலித்

ஊர் பெயர்: அய்லா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம், எகிப்து

இறப்பு: ஹிஜ்ரி 144, எகிப்து

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

உகைல் பின் காலித் பின் உகைல் ரஹ் அவர்கள் அபூ காலித் என்ற குன்யாவால் அறியப்பட்டவர். இவர் உஸ்மான் பின் அஃப்பான் ரலி அவர்களின் அடிமை ஆவார். இவர் மதீனா, ஷாம் மற்றும் எகிப்து ஆகிய இடங்களில் வாழ்ந்தார்.

இவர் ஹிஜ்ரி 144 இல் எகிப்தில் மரணமடைந்தார். அஹ்மத், நஸாயீ, யஹ்யா பின் மயீன், அபூ ஹாதிம், அபூ ஸுர்ஆ மற்றும் இப்னு ஸஃத் போன்ற அறிஞர்கள் இவரை மிகப் பலமானவர் என்று கூறியுள்ளனர். இவர் அஸ்ஸுஹ்ரீயின் மாணவர்களில் மிக முக்கியமானவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): காலித் பின் உகைல், ஸியாத் பின் உகைல், நாஃபிஉ, இக்ரிமா, அல்ஹஸன் அல் பஸரீ, ஸயீத் பின் அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸயீத் பின் ஸுலைமான் பின் ஸைத், ஸலமா பின் குஹைல், அஸ்ஸுஹ்ரீ, ஸைத் பின் அஸ்லம், ஸாலிம் பின் அப்துல்லாஹ் பின் உமர், அபான் பின் ஸாலிஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): இப்ராஹீம் பின் உகைல், ஸலாமா பின் ரூஹ், அல்முஃபள்ளல் பின் ஃபதாலாஹ், அல்லைஸ் பின் ஸஃத், அப்துல்லாஹ் பின் லஹீஆ, ஜாபிர் பின் இஸ்மாயீல் அல்ஹத்ரமீ, அப்துர்ரஹ்மான் பின் ஸல்மான், ஸயீத் பின் அபூ அய்யூப், நாஃபிஉ பின் யஸீத், யஹ்யா பின் அய்யூப், ஹஜ்ஜாஜ் பின் ஃபராஃபிஸா, யூனுஸ் பின் யஸீத் அல்அய்லீ

வேறு பெயர்கள்: உகைல் பின் காலித், உகைல்


ஆதாரம்: muslimscholars.info (11207) · Should verify

ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்

محمد بن مسلم بن عبيد الله بن عبد الله بن شهاب بن عبد الله بن الحارث بن زهرة

இறப்பு: ஹிஜ்ரி 124, மதீனா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் ஷிஹாப் பின் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் ஸுஹ்ரா

தந்தை பெயர்: முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்

வம்சம்: குரைஷீ, பனூ ஸுஹ்ரா

புனைப்பெயர்: அபூ பக்ர்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம்

பிறப்பு: ஹிஜ்ரி 51, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 124, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுஹ்ரீ இமாம் ஹிஜ்ரி 51 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். இவர் ஹிஜ்ரி 124 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர்.

மதீனா மற்றும் ஷாம் ஆகிய இடங்களில் வாழ்ந்தார். இவர் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் ஆவார். இவர் ஏராளமான ஹதீஸ்களைத் தொகுத்தவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு உமர், அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸுலைமான் பின் யஸார், உர்வா பின் அஸ்ஸுபைர், அல்கமா பின் வக்காஸ், அலீ பின் அல்ஹுஸைன் பின் அலீ, அல்காஸிம் பின் முஹம்மத், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா, அதா பின் அபீ ரபாஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அதா பின் அபீ ரபாஹ், உமர் பின் அப்துல்அஸீஸ், அம்ர் பின் தீனார், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, அய்யூப் அஸ்ஸக்திஃயானீ, அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்னு ஜுரைஜ், அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத், மாலிக் இமாம், மஃமர் பின் ராஷித், ஸுஃப்யான் பின் உயைனா, அல்லைஸ் பின் ஸஃத்

வேறு பெயர்கள்: இப்னு ஷிஹாப், அஸ்ஸுஹ்ரீ, முஹம்மத் பின் முஸ்லிம்


ஆதாரம்: muslimscholars.info (11013) · Should verify

அபூஇத்ரீஸ்-அல்கவ்லானீ-ஆயிதுல்லாஹ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

யஸீத் பின் உமைரா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

முஆத் பின் ஜபல் (ரலி)

معاذ بن جبل

இறப்பு: ஹிஜ்ரி 18, அமவாஸ் (ஷாம்)

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: முஆத் பின் ஜபல்

தந்தை பெயர்: ஜபல் பின் அம்ர் பின் அவ்ஸ்

வம்சம்: கஸ்ரஜ் கோத்திரம், அன்ஸார்

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, யமன், மக்கா, ஷாம்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 18, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 18, அமவாஸ் (ஷாம்)

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

முஆத் பின் ஜபல் ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். ஹலால், ஹராம் விஷயங்களில் நபித்தோழர்களில் மிகவும் அறிந்தவர் என்று நபி (ஸல்) அவர்களால் புகழப்பட்டார். குர்ஆனைத் தொகுத்த ஆறு நபித்தோழர்களில் இவரும் ஒருவர்.

யமன் பகுதிக்கு இஸ்லாத்தைக் கற்றுக்கொடுக்க நபி (ஸல்) அவர்களால் அனுப்பப்பட்டார். ஹிஜ்ரி 18 ஆம் ஆண்டு ஷாம் நாட்டில் அமவாஸ் என்ற இடத்தில் ஏற்பட்ட கொள்ளை நோயில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): இப்னு அப்பாஸ், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் பின் அம்ர், இப்னு உமர், அப்துர்ரஹ்மான் பின் ஸம்ரா, அப்துல்லாஹ் பின் அபூ அவ்ஃபா, அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அபூ அத்தஃப்பீல், அப்துர்ரஹ்மான் பின் ஃக்னம், அபூ முஸ்லிம் அல்கவ்லானீ, ஷகீக் பின் ஸலமா

வேறு பெயர்கள்: முஆத்


ஆதாரம்: muslimscholars.info (32) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.