தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-2723

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஒரு இடத்தில் தங்கினால் இரண்டு ரக்அத்கள் தொழுதல்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு இடத்தில் தங்கினால், அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழுத பின்னரே புறப்படுவார்கள். அல்லது அந்த இடத்திற்கு விடை கொடுக்கும் விதமாக இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுச் செல்வார்கள்.


அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-தாரிமீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் உஸ்மான் பின் ஸஃத் பலவீனமானவர் ஆவார்.

(ஸுனன் தாரிமீ: 2723)

بَابُ: فِي الرَّكْعَتَيْنِ إِذَا نَزَلَ مَنْزِلًا

أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عُثْمَانَ بْنِ سَعْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ إِذَا نَزَلَ مَنْزِلًا، لَمْ يَرْتَحِلْ مِنْهُ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ، أَوْ يُوَدِّعَ الْمَنْزِلَ بِرَكْعَتَيْنِ»

قَالَ عَبْد اللَّهِ: «عُثْمَانُ بْنُ سَعْدٍ ضَعِيفٌ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-2565.
Darimi-Shamila-2723.
Darimi-Alamiah-2565.
Darimi-JawamiulKalim-2598.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தாரிமீ இமாம்

2 . ளஹ்ஹாக் பின் மக்லத்-அபூஆஸிம்

3 . உஸ்மான் பின் ஸஃத்

4 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


 


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.