தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-527

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள், எங்களுக்கு லுஹர் தொழுகை தொழுவிக்க வந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு ஏடு இருந்தது. பின்பு அஸர் தொழுகை தொழுவிக்க வந்தார்கள். அப்போதும் அவர்களிடம் அந்த ஏடு இருந்தது. எனவே நான் முஃமின்களின் தலைவரே! அது என்ன ஏடு? என்று கேட்டேன். அதற்கவர்கள், இது அவ்ன் பின் அப்துல்லாஹ் எனக்கு அறிவித்த ஹதீஸ்கள் என்று கூறினார். எனவே நான் ஆச்சரியமடைந்து (அவர்களிடம் அனுமதிபெற்று) அதை எழுதிக் கொண்டேன். அப்போது அதில் (ஹதீஸ் எண்-526 இல் உள்ள) மேற்கண்ட செய்தி இடம்பெற்றிருந்தது.

(ஸுனன் தாரிமீ: 527)

أخْبرنا الْحُسَيْنُ بْنُ مَنْصُورٍ، حَدَّثنا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، قَالَ: قَالَ أُبُو قِلَابَةَ:

خَرَجَ عَلَيْنَا عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ لِصَلَاةِ الظُّهْرِ، وَمَعَهُ قِرْطَاسٌ، ثُمَّ خَرَجَ عَلَيْنَا لِصَلَاةِ الْعَصْرِ وَهُوَ مَعَهُ، فَقُلْتُ لَهُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، مَا هَذَا الْكِتَابُ؟ قَالَ: ” هَذَا حَدِيثٌ حَدَّثَنِي بِهِ عَوْنُ بْنُ عبْدِ اللَّهِ، فَأَعْجَبَنِي فَكَتَبْتُهُ، فَإِذَا فِيهِ هَذَا الْحَدِيثُ


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-527.
Darimi-Alamiah-509.
Darimi-JawamiulKalim-511.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

..


இது அறிவிப்பாளர்தொடர் சரியாக உள்ள, நபித்தோழர்களை அடுத்து வந்த தாபிஈன் செய்தியாகும். இந்தச் செய்தி முன்னுள்ள ஹதீஸ் எண்-526 இல் இடம்பெற்றுள்ள செய்தியை உறுதிப்படுத்துகிறது.


  • ராவீ-18244-ஸுலைமான் பின் முஃகீரா அவர்கள் பஸராவைச் சேர்ந்த முக்கிய அறிஞராவார். இவரை மிகப்பலமானவர் என்ற கருத்தில் இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் ஆகியோர் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1/143, அல்காஷிஃப்-2/535, தஹ்தீபுல் கமால்-12/69, தஹ்தீபுத் தஹ்தீப்-2/108)

  • இவர் அபூகிலாபா அவர்களிடம் நேரடியாக கேட்டதை குறிக்கும் ஹத்தஸனா போன்ற வார்த்தைகளை குறிப்பிடவில்லை.
  • அபூகிலாபா அவர்களின் இறப்பு ஹிஜ்ரீ 104 க்கும் 107 க்கும் இடைப்பட்டதாகும். ஸுலைமான் அவர்களின் இறப்பு ஹிஜ்ரீ 165 ஆகும். ஸுலைமான் அவர்கள் தத்லீஸ் செய்யாதவர் என்பதாலும், ஸுலைமானும், அபூகிலாபாவும் பஸராவைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இவர்கள் சந்தித்திருக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் பார்க்க: தாரிமீ-526 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.