அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரிடம் (அவர் அறிந்துள்ள) கல்வியைப் பற்றி வினவப்படும் போது, அதை அவர் மறைத்தால் மறுமைநாளில் அவருக்கு நெருப்பாலான கடிவாளத்தை அல்லாஹ் மாட்டுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
(இந்தச் செய்தியை எனக்கு அறிவித்த அபூஅலீ அவர்களிடம்) நீங்கள் கூறும் அறிவிப்பாளர்தொடரில் உள்ள அஸ்ஹர் பின் மர்வானோ அல்லது உங்கள் ஆசிரியரான முஹம்மத் பின் அஹ்மத் அவர்களே தவறிழைத்துள்ளார்கள். அவர்கள் தவறிழைப்பது ஒன்றும் அரிதானதல்ல.
இந்தச் செய்தியை எனக்கு அறிவித்த அபூபக்ர் பின் இஸ்ஹாக், அலீ பின் ஹம்ஷாத் ஆகியோர் அலீ பின் ஹகம் அவர்களுக்கும், அதாஃ அவர்களுக்கும் இடையில் தான், ஒரு அறியப்படாத மனிதரைக் கூறி அறிவித்தனர் என்று கூறினேன். அதை அபூஅலீ அவர்களும் சரியென்று ஏற்றுக்கொண்டார்.
பிறகு இந்த கருத்தில் வரும் பலஅறிவிப்பாளர்தொடர்களை நான் ஒன்றுசேர்த்து பார்த்தபோது தான், பலரும் அதாஃ அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டு அறிவிப்பதாகத்தான் அறிவித்திருந்தார்கள்.
மேலும் இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக; எந்த குறையும் இல்லாத அறிவிப்பாளர்தொடரும் நமக்கு கிடைத்தது. (பார்க்க: ஹாகிம்-346)
(ஹாகிம்: 345)أَخْبَرْنَاهُ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الْوَاسِطِيُّ، ثنا أَزْهَرُ بْنُ مَرْوَانَ، ثنا عَبْدُ الْوَارِثِ بْنِ سَعِيدٍ، ثنا عَلِيُّ بْنُ الْحَكَمِ، عَنْ عَطَاءٍ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ أَلْجَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ»
«فَقُلْتُ لَهُ قَدْ أَخْطَأَ فِيهِ أَزْهَرُ بْنُ مَرْوَانَ أَوْ شَيْخُكُمُ ابْنُ أَحْمَدَ الْوَاسِطِيُّ، وَغَيْرُ مُسْتَبْعَدٍ مِنْهُمَا الْوَهْمُ» فَقَدْ حَدَّثَنَا بِالْحَدِيثِ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ وَعَلِيُّ بْنُ حَمْشَاذَ قَالَا: ثنا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ الْقَاضِي، ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، ثنا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ رَجُلٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ عِنْدَهُ فَكَتَمَهُ أَلْجَمَهُ اللَّهُ بِلِجَامٍ مِنْ نَارٍ يَوْمَ الْقِيَامَةِ» . «فَاسْتَحْسَنَهُ أَبُو عَلِيٍّ وَاعْتَرَفَ لِي بِهِ، ثُمَّ لَمَّا جَمَعْتُ الْبَابَ وَجَدْتُ جَمَاعَةً ذَكَرُوا فِيهِ سَمَاعَ عَطَاءٍ مِنْ أَبِي هُرَيْرَةَ، وَوَجَدْنَا الْحَدِيثَ بِإِسْنَادٍ صَحِيحٍ لَا غُبَارَ عَلَيْهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-345.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-315.
- இதில் அதாஃ அவர்களுக்கும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு அறியப்படாத மனிதர் கூறப்பட்டுள்ளார்.
..
மேலும் பார்க்க: திர்மிதீ-2649 .
சமீப விமர்சனங்கள்