தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-3733

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டார். அப்போது அவர்  உடல் நடுங்கினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சாதாரணமாக இருப்பீராக! இந்த பத்ஹா பகுதியில் உலர்ந்த இறைச்சியைப் சாப்பிட்டு வந்த குறைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்’’ என்று அவரிடம் கூறி சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இதை அறிவித்தபின்,

(முஹம்மதே!) அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம். நீர் அவர்கள் மீது அடக்குமுறை செய்பவர் அல்லர். எனது எச்சரிக்கையை அஞ்சுபவருக்கு குர்ஆன் மூலம் அறிவுரை கூறுவீராக! (அல்குர்ஆன் 50:45) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

(ஹாகிம்: 3733)

حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْحَافِظُ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ، بِهَرَاةَ، ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ الْمَكِّيُّ، ثنا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ تَرْعَدُ فَرَائِصُهُ قَالَ: فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ فَإِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ كَانَتْ تَأْكُلُ الْقَدِيدَ فِي هَذِهِ الْبَطْحَاءِ» قَالَ: ثُمَّ تَلَا جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَجَلِيُّ: {وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِجَبَّارٍ فَذَكِّرْ بِالْقُرْآنِ مَنْ يَخَافُ وَعِيدِ} [ق: 45]

«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخَرِّجَاهُ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-3733.
Hakim-Shamila-3733.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-3661.




إسناده حسن رجاله ثقات عدا إسماعيل بن عياش العنسي وهو صدوق في روايته عن أهل بلده وخلط في غيرهم (الجوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20595-அப்பாத் பின் அவ்வாம் பலமானவர் என்றாலும் இந்த செய்தியை இஸ்மாயீல் பின் அபூகாலித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்ற பலமான அறிவிப்பாளர்கள் முர்ஸலாக-(ஜரீர் (ரலி) அவர்களை கூறாமல்) அறிவித்துள்ளனர். எனவே இது ஷாத் என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும் என அறிஞர் முக்பில் வாதிஈ அவர்கள் கூறியுள்ளார். (நூல்: அஹாதீஸு முஅல்லஹ் 1/306)

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3312 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.