தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3312

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

உலர்ந்த இறைச்சி.

ஒரு மனிதர் முதன் முதலாக (மன்னர்) நபி (ஸல்) அவர்களை சந்திக்க வந்து பேச ஆரம்பித்தார். (பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள்) நபி (ஸல்) அவர்களையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கினார்.

நபி (ஸல்) அவர்கள், ‘சாதாரணமாக இருப்பீராக! நான் அரசன் அல்ல. உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்‘ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி)

இப்னு மாஜா கூறுகிறார்:

ஜஃபர் பின் அவ்ன் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் இஸ்மாயீல் பின் அஸத் தான் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். (ஆனால் இது தவறாகும்)

(இப்னுமாஜா: 3312)

بَابُ الْقَدِيدِ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَسَدٍ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ:

أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَكَلَّمَهُ، فَجَعَلَ تُرْعَدُ فَرَائِصُهُ، فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ، فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ، إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: إِسْمَاعِيلُ وَحْدَهُ، وَصَلَهُ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3303.
Ibn-Majah-Shamila-3312.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3311.




  • இந்த செய்தி (அறிவிப்பாளர் தொடரில் முறிவு ஏற்படாமல்) மவ்ஸூலாகவும், (அபூ மஸ்வூத் (ரலி) கூறப்படாமல் அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்டு) முர்ஸலாகவும் வந்துள்ளது.
  • தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இப்னுல் ஜவ்ஸீ,பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    போன்றோர் முர்ஸல் என்று கூறுகின்றனர். (நூல்: அல்இலலுல் வாரிதா 6/194)
  • மிஸ்ஸீ இமாம் அவர்கள், ஜஃபர் பின் அவ்ன் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் இஸ்மாயீல் பின் உலயா அவர்களும் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார் என்பதால் இந்த செய்தியை சரியானது எனக் கூறுகின்றார். (நூல்: தஹ்தீபுல் கமால் 3/42)
  • இவ்வாறே ஷுஐப் அல்அர்னாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    பூஸீரீ போன்றோர் மவ்ஸூலாக வந்திருப்பதும் பலமானது என்பதால் இந்த செய்தியை சரியானது எனக் கூறுகின்றனர்.
  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இது முர்ஸல் என்று குறிப்பிடுகிறார். (நூல்: அஸ்ஸஹீஹா-1876)

1 . இந்தக் கருத்தில் அபூ மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : இப்னு மாஜா-3312 , ஹாகிம்-4366 ,

2 . ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-1260 , ஹாகிம்-3733 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.